காதல் கடிதங்கள் (Feb, 2022)

காதல் கடிதங்கள்


காதல் கடிதங்கள்

     உணர்ச்சிகள் ஆழமானது, அனுபவிக்கபட வேண்டியது, ஆராய வேண்டியது, உணர வேண்டியது, சில சமையங்களில் மறைக்கபட வேண்டியது, சில சூழலில் மறக்கபட வேண்டியது, பல தருணங்களில் ஒதுக்கபட வேண்டியது, பல நேரங்களில் பகிரபட வேண்டியது. உணர்ச்சிகள் மக்களுக்கும் மாக்களுக்கும் பொதுவானது. கல்லுக்குள்ளும் புல்லுக்குள்ளும் இருப்பது.  

     உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும் முறை, காலங்கள் மாற, கலாச்சாரங்கள் மாற, மனநிலைகள் மாற, சூழ்நிலைகள் மாற, தானும் மாறியது. கத்தி கூச்சலிட்டும், முரசுகள் ஒலித்தும், கை தாளம் போட்டும், கண்ணீர் சிந்தியும், சிரித்தும், மௌன மொழியிலும், இன்னும் எத்தனையோ வழிகளிலும், எத்தனையோ உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுகிறது.

     அத்தனை உணர்ச்சிகளில், காதல் என்னும் உணர்ச்சியை வெளிப்படுத்தும், வளர்க்கும் ஒரு வழியே கடிதங்கள். கடிதங்கள் ஒரு தனி மொழி. தனக்கென்று ஒரு இலக்கணம் கொண்டது. விடுநருக்கும், பெறுனருக்கும் மட்டும் அது தனி கதை ஒன்று சொல்லும்.

     அதிவேகமாக சென்றுக்கொண்டிருக்கும் “மெசெஞ்சர்” காலகட்டத்தில் முகநூல், பகிரி, படவரி (Instagram) மற்றும் பல தலங்கள் இருந்தாலும், அந்த வேகம் பலருக்கு நன்மை கொடுத்ததா? என்ற கேள்விக்கு விடை பலருக்கு தெரியும். இந்த வேகம் வருவதற்கு முன், ‘உலகம் என் உள்ளங்கையில்’ என்று மாறுதட்டும் காலத்திற்கு முன், கடிதங்கள் எழுதப்பட்ட காலகட்டத்தில், வாழ்வில் ஒரு மென்மை இருந்தது, மற்றவர் நேரத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை அதிகம் இருந்தது, காதலுக்கு காதலர்களிடையில் மதிப்பு அதிகமாகவே இருந்தது. காதலுக்கு சமூகத்தில் என்றும் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்ததது, ஆனால் இன்றய சூழல்போல குழப்பங்கள் நிறைந்ததாய் இல்லை. காரணம், அன்று தெளிவான கருத்துக்கள் உணர்வுபூர்வமாக பரிமாறப்பட்டது. இன்று வெறும் வார்தைகள் மட்டுமே பரிமாறப்படுகிறது. உணர்ச்சிகளை வெளிக்காட்ட பலர் மறந்துவிட்டனர். குறிப்பாக இளைஞர்கள். உணர்ச்சிகளை வெளிபடுத்துவது பலவீனம் என்று கருதும் சமுதாயம் உருவாகி வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

     இந்த சூழலில், தெளிவான அழகான ஆழமான உண்மையான மென்மையான உணர்வுபூர்வமான வார்தைகளை அழகு தமிழில் தேடி, இங்கு கடிதங்களாக எழுத, என் முயற்சி இது.  

 

கடிதங்களின் உணர்வுகளோடு, பின்னோக்கி பயணிப்போம்... 

வாருங்கள்...!

 

அன்புடன் அழைக்கும்,

நண்பன் டெக்ஸ்டி..!

கடிதங்கள்

01.  14/02/2022 -   முற்றுப்புள்ளி – முடிவு

02. 11/02/2022  -   புள்ளிகள் – தொடர்ச்சி 

__________________________________________

இப்பதிவு பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

__________________________________________

காதல் கடிதம் மற்றும் சிறுகதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments