21/01/2022
------
அன்புள்ள என்னவருக்கு,
உங்கள்
நான், அன்பு கலந்து எழுதும் கடிதம் இது..! சென்ற கடிதத்தில் உங்கள் குடும்பத்தாரை
குறித்து நீங்கள் எழுதியதில் மகிழ்ச்சி. இப்போதே உங்கள் வீடு எனக்கு பாதி
பிடித்துவிட்டது. ஒறுமுறை அம்மா அப்பா தங்கை அனைவரையும் நேரில் பார்த்து
பேசிவிட்டால் மொத்தமும் பிடிக்கும்.
உங்கள்
மன்னிப்பு ஏற்கப்பட்டது, உங்களுக்காக இல்லையென்றாலும்,
குடும்பதினருக்காக!
இங்கு
பொங்கல் நல்லபடியாக கொண்டாடி முடிந்தது. உங்கள் வீட்டிலும் அவ்வாறே முடிந்ததில்
மகிழ்ச்சி. இப்போதுதான் நானும் அம்மாவும் கோவிலுக்கு சென்று வந்தோம். எனக்கு நல்ல
வரன் அமைய வேண்டும் என்று அம்மா வேண்டினார்கள். உங்களைப்பற்றி சொல்ல என் நா
துடித்தது. அடக்கிக்கொண்டேன். நாம் சென்றமுறை சந்தித்தபோது பேசிவைத்தபடி
உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் வேலையும் அந்த சம்பளமும் கிடைக்கும்வரை
வீட்டில் எதுவும் பேச வேண்டாம் என்று நாம் எடுத்த முடிவின்காரணமாக
அடக்கிக்கொண்டேன்.
என்
அம்மாவை சமாளித்துவிடலாம். அப்பாதான் கொஞ்சம் எறிந்து விழுவார். இதுவரை அவர் என்னை
அடித்ததே இல்லை. இதற்காக அடித்தால் கூட நான் அதை தாங்கிக்கொள்ள தயார். உங்களை
ஒன்றும் சொல்லாமல் இருந்தால் போதும். சொல்லமாட்டார். தம்பியைப்பற்றி பெரிய கவலை
எதுவும் இல்லை. அவன் இப்போதுதான் கல்லூரி முதல் ஆண்டு. அவன் தனி உலகத்தில்
வாழ்கிறான்.
வருடம்
ஒருமுறை நாங்கள் சுற்றுலா செல்வது வழக்கம். அதிகம் செல்வது கோவில் ஸ்தலங்கள் தான்.
கோவிலுக்கு செல்லும் முன் அந்த வருடத்தில், மன
கஷ்டங்களோ, குழப்பங்களோ, ஏதாவது உறுத்தல்களோ
இருந்தால், அந்த சுற்றுலாவின்பிறகு மனம் அமைதியாகும். பிரச்சனைகள்
தீரும் அல்லது தீர்வு நோக்கி வேகமாய் நகரும். இது எங்கள் குடும்ப நம்பிக்கை.
உங்களுக்கு பக்தி எந்த அளவிற்கு?
உங்களுக்கு
புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா? எனக்கு பெரிதாய்
இல்லை. ஆனாலும் அவ்வப்போது சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். கதைகள் படிக்க பிடிக்கும். ஆனால் இப்போது
திரையரங்குகளும் அதிகம், படங்களும் அதிகம். அதனால் படங்களின் தரம் குறைந்துவிட்டது, ஆனால்
கூட்டம் குறையவில்லை. எனவே புத்தகங்களின் மீது இருக்கும் ஈடுபாடு பெருவாரியாக
குறைந்துவிட்டது.
சரி, கேள்வி
பதில் செல்வோமா?
ஆம், எனக்கு
சமைக்க தெரியும். பிரமாதமாக சமைக்க இல்லை என்றாலும் சமாளிக்குமளவிற்கு தெரியும்.
கவலை வேண்டாம். மத்ததை எல்லாம் அங்கு நான் வந்தபிறகு கற்றுக்கொள்கிறேன். அடுத்த
பொங்கலுக்குள்.
அதிகம் ஊர்
சுற்றியதில்லை. மேலே சொல்லியதுபோல கோவில் ஸ்தலங்கள் மட்டும்தான். எனவே நீங்கள்
எங்கு அழைத்துச் சென்றாலும் சம்மதம்தான். (இருசக்கர வாகன பயணம் மிகவும்
பிடிக்கும்.)
இதற்கெல்லாம் இன்னும் எத்தனை நாட்கள்
காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை ஆனால் ஆசையாக காத்திருக்கிறேன்.
ஆசைகளுடன்
காத்திருக்கும்
உங்கள் சகி!
<--- Previous Post ------ Next Post--->
__________________________________________
இது என் புது முயற்சி.
பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள்.
இது என் அன்பு வேண்டுகோள்...!
__________________________________________
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
Comments
Post a Comment