இராவணபுரி
வாழ்வின் ஒவ்வொரு பயணமும் ஒரு முடிவைக்
கொண்டே தொடங்கும். அந்த முடிவும் ஒரு தொடக்கமாகவே அமையும். இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, ஆக்கம், அழிவு, இழப்பு, மீட்பு, பாசம், நேசம், காதல், காமம், அச்சம்,
கொண்டாட்டம், களைப்பு, போன்ற உணர்வுகள் யாவும் இந்த பயணத்தின் திசையை தன் விருப்பத்திற்கு
ஏற்றவாறு மாற்ற வல்லது. ஒரு தனி மனிதனின் உணர்வுகள் அவர் வாழ்க்கையில் மட்டும்
அல்லாது தன்னைச்சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையிலும் விளைவுகளை உண்டாக்கும். இது
ஒரு தனி மனிதனுக்கு மட்டுமின்றி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு சமுதாயத்திற்கும் பொருந்தும்.
உணர்வுகளின் வெளிப்பாட்டால் தனி மனிதனின் வாழ்விலும்,
குடும்பம் மற்றும் சமுதாயத்தின் சூழலிலும் உருவான மாற்றங்கள் ஏராளம். அதில் நன்மைகளும்
உண்டு, தீமைகளும் உண்டு. இன்று நன்மை என்று கருதப்படும் விளைவுகள், நாளை
தீமையாக மாறுவதும் உண்டு. இன்றைய தீமை, நாளைய
நன்மைகளாவதும் உண்டு. இதுபோன்ற மாற்றங்களின் காரணம் மனிதன், குடும்பம், வாழும்
சமுதாயம், இவைகளின் உணர்ச்சி வெளிப்பாடும் அதன் விளைவுகளுமே ஆகும்.
இப்படி பல மாற்றங்களையும் மனிதர்களையும் குடும்பங்களையும் உணர்ச்சிகளையும் அதன் வெளிபாடுகளையும் அதன் விளைவுகளையும் கண்ட ஒரு ஊர் தான் இராவணபுரி! கோட்டை கட்டி அகழி வெட்டி மக்களை பாதுகாத்து அந்நாளில் வையம் போற்ற பல அரசர்கள் ஆண்ட வரலாற்று கதைகள் நிரம்பிய ஊர் இராவணபுரி! பிறந்து வளர்ந்த ஊர் என்று மார்தட்டும் ஆண்களும் வாழ வந்த ஊர் என்று பெருமைக்கொள்ளும் பெண்களும் பிழைக்க வந்த ஊர் என்று கொண்டாடும் மனிதர்களும் கலந்து வாழும் ஊர் இந்த இராவணபுரி! குழந்தைகள் அறிவை வளர்க்க அரசு பள்ளிக்கூடமும், உடல் நலம் பேணிக்காக்க அரசு மருத்துவமனையும், வயிறார உண்ண உணவுப்பொருட்கள் உற்பத்திசெய்யும் பசுமை நிலங்களும், அழகிய ஆற்றுப் படுகையும், காவலுக்கு காவல் நிலையமும், மறந்துப்போன வரலாற்றையும், கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறைகளையும் இன்றுவரை வெளிக்காட்டும் கோவில், சர்ச், மசூதி ஆகிய வழிபாட்டுத் தளங்களையும் கொண்ட ஊர் நம் இராவணபுரி!
அந்த ஊர் நோக்கி ஒரு பயணம் செல்வோம்...!
05. நம்ம ஃப்ரெண்ட்
06. சிவன் கோவில்
07. விரைவில்
08. விரைவில்
__________________________________________
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
Comments
Post a Comment