06. சிவன் கோவில்


Previous Post 

06.         சிவன் கோவில்

     அமைதியாக அமர்ந்து அந்த வாரத்து கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்த யாழினியை நோக்கியபடி ஆதித்யா அமர்ந்திருக்க, கடைக்குள் வந்து தானாகவே ஒரு ஐஸ் கிரீமை எடுத்து உண்டதும் இல்லாமல், நேராக வந்து யாழினியின் துப்பட்டாவில் கைவைத்த விமலை மடக்கி, அவன் கைகளை முறுக்கி அவன் தலையை மேசையின்மீது தள்ளி தனது கையை வைத்து அழுத்தினான் ஆதித்யா.

     நொடி பொழுதில் இது நடக்க, பதறியபடி, “ஐயோ ஆதி, அது நம்ம ஃப்ரெண்ட் விமல்...” என்று யாழினி அலறினாள்.

“ஃப்ரெண்டா...?!” ஆச்சரியம் கலந்த குரலில் ஆதித்யா கேட்க,

“அட ஆமா ப்ரோ... கொஞ்சம் என்ன ரிலீஸ் பண்றீங்களா பிளீஸ்...!” மேசை மீது வைத்து அழுத்தியபடி தனது தலையை ஆதித்யா பிடித்திருந்த காரணத்தினால் வாய் குளறியபடியே விமல் பேசினான்.

     என்ன செய்வது என்று தெரியாமல் யாழினிக்கு கண்கள் கலங்கியது. ஆதித்யாவின் கையை பிடித்து விமல் தலையிலிருந்து விலக்க முயற்சித்தாள். ஆதித்யா தானே விடுவித்தான். நிமிர்ந்து நின்று தனது கைகளை நன்கு உதறி, தனது கழுத்தின் மீது கைவைத்து லேசாக தேய்த்து தலையை வலபக்கமும் இடபக்கமும் திருப்பி,

“ஹப்பா... என்னா புடி...!” என்று விமல் சர்வ சாதாரணமாக சொல்லி ஆதித்யாவை மேலும் கீழும் பார்த்தான்.

     சிறிது யோசித்து செயல்பட்டிருக்கலாமோ என்று ஆதித்யா யோசித்தபடி குழப்பத்தில் நின்றான்.

“டேய்... ஒண்ணும் ஆகல..!ல...?” கரிசனமாக யாழினி விமலை கேட்க,

“இட்ஸ் ஓகே... ஒண்ணும் ஆகல... நீங்க உக்காருங்க...” என்று எதார்த்தமாக சொல்லிவிட்டு ஒரு நாற்காலியை இழுத்து மேசையின் ஒருபக்கம் போட்டு யாழினிக்கும் ஆதித்யாவுக்கும் இடையில் அமர்ந்தான்.

     என்ன செய்வது என்று தெரியாமலும், செய்தது சரியோ தவறோ என்று புரியாமல் குழப்பத்திலும், அங்கு இருந்த இருவர் முகத்தையும் பார்க்கமுடியாமல் சங்கடத்திலும் நின்றுகொண்டிருந்த ஆதித்யாவை பார்த்து,

“இட்ஸ் ஓகே... அது கொஞ்சம் பைத்தியம்... ஊக்காருங்க” என்றாள் யாழினி.

     தயங்கியபடி ஆதித்யா அமர்ந்தான். அவனை தொடர்ந்து யாழினியும் அமர்ந்தாள். அங்கு இருந்த கணக்கு புத்தகத்தில் ஒன்றை எடுத்து விமல் பார்க்கத் தொடங்கினான். நீண்ட நேரம் அங்கு அமைதி நிலவியது.

“ஆ...க்வர்...ட்...” என்று ராகம் இழுத்தான் விமல்,

     அப்படி ராகம் இழுத்தவனை தோளில் லேசாக தட்டி, “அமைதியாக இரு” என்றாள் யாழினி.

“சரி அப்போ நான் கிளம்புறேன்... நீ பாத்து பத்ரமா வீட்டுக்கு வா...” என்று யாழினியை பார்த்து சொல்லிவிட்டு ஆசனத்தில் இருந்து எழுந்து “சாரி ப்ரோ... மை பேட்...!” என்று விமல் கண்களை நேருக்கு நேர் பார்த்து சொல்லிவிட்டு கடைக்கு வெளியே நடந்தான் ஆதித்யா.

     தடுக்கலாமா வேண்டாமா என்று புரியாமல் யாழினி விழித்தாள். தவறு என்று தெரிந்தவுடன் கண்ணுக்கு கண் பார்த்து மன்னிப்பு கேட்ட அந்த கண்ணியம் விமலுக்கு பிடித்துபோயிற்று.

“ஐ லைக் திஸ் கய்....” என்று சேரில் அமர்ந்தபடி வெளியே போகும் ஆதித்யாவை பார்த்து சொல்லிவிட்டு மீண்டும் கணக்கு புத்தகம் பக்கம் தலையை திருப்பினான். அருகில் இதுக்கும் யாழினி கைகளை பிசைந்தபடி அமைதியாக இருப்பதை கவனித்த விமல், நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான். கண்கள் லேசாக கலங்கிய நிலையில் ஒரு விதமான தவிப்பில் வெளியே செல்லும் ஆதித்யாவை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். சட்டென்று விமல் எழுந்தான். தனது வண்டிக்கு அருகில் சென்று சாவியை போட்டு சீட்டில் அமர்ந்த ஆதித்யாவிடம் ஓடி போனான்.

“ப்ரோ... வெயிட்...” ஆதித்யா  நின்று விமலை பார்த்தான். விமல் அவன் அருகில் வந்து,

“ஐ எம் விமல்... மேடமோட சைல்ட்ஹூட் ஃப்ரெண்ட்... இந்த கடைக்கு பிகினிங் ஸ்டேஜ்ல நிறைய சஜெஷன்ஸ் குடுத்து இம்ப்ரூவ் பண்ணது நான் தான்... நீங்க...?”

     மிகவும் எதார்த்தமாக முகம் முழுக்க மலர்ச்சியுடன் புதிதாக சந்தித்த மனிதர்களிடம் மிகுந்த மரியாதையோடு பேசும் தொனியில் விமல் தன்னை தானே புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டான்.

     சற்று முன்பு வேற்று மனிதனாக ஒரு ஆபத்தாக மனதிற்கு தெரிந்த முகம் இப்போது அந்த எண்ணங்கள் முழுவதுமாக மாறி மனதிற்கு புத்துணர்ச்சி தரும் முகமாக தெரிந்தது ஆதித்யாவுக்கு. அந்த வாய்ப்பை நழுவவிட விரும்பாத அவனும்,

“ஐ எம் ஆதி... ஆதித்யா. நேடிவ் இராவணபுரிதான்... பட் சின்ன வயசுலயே சென்னை போய் செட்டில்ட். ஜஸ்ட் ஒன் வீக் பிஃபோர் தான் ரிட்டர்ன்ட்...” அதே புத்துணர்ச்சியும் மரியாதையும் முகத்தில் வெளிப்படும்வண்ணம் ஆதித்யா பேசினான்.

“நைஸ் டு மீட் யு ஆதி...” சிரித்த முகத்தோடு கை நீட்டினான்.

“சேம் ஹியர் விமல்...” கை நீட்டியவனோடு கை குலுக்கினான்.

     கடைக்கு உள்ளே இருந்து யாழினி இது அனைத்தையும் கவனித்தவண்ணம் அமர்ந்திருந்தாள். சூழலை நிச்சயமாக விமல் மாற்றுவான் என்றும், ஆதித்யா அதற்கு இணங்குவான் என்றும் அவள் மனதுக்கு பட்டது.

“வாயேன் ஒரு ஜூஸ் குடிச்சிட்டு கிளம்புவ... அதுக்குள்ள நாங்களும் அக்கௌண்ட்ஸ் குளோஸ் பண்ணிடுவோம்... நீயே பத்ரமா அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போவ...” என்று கேள்விகள் கேட்பதுபோல, இந்த சூழல் இன்னும் மிதமாக மாற என்ன செய்ய வேண்டும் என்று வழி சொன்னான். ஆதித்யாவுக்கு அது பிடித்திருந்தது. 

“ஓகே...” என்றவன் வண்டியில் இருந்து இறங்கி விமலுடன் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

     இருவரும் சிரித்த முகத்தோடு உள்ளே வருவதை கண்டு யாழினி மகிழ்ந்தாள். உள்ளே வந்தவர்கள் மீண்டும் அவர்கள் இடத்தில் அமர்த்தார்கள். அமரும் முன்பு கடைக்குள் இருந்த டிஷ்யூ பேப்பர் ஒன்றை எடுத்து டேபிள் மீது போட்டு யாழினி பக்கம் தள்ளியபடி விமல் அமர்ந்தான். அவ்வாறு அமர்ந்தவனை யாழினி மீண்டும் தோளில் தட்டினாள். அந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து கண்களில் இருத்த கண்ணீரை லேசாக துடைத்துக்கொண்டாள்.

     அடுத்த பத்து நிமிடத்தில் கணக்குகள் பார்த்து முடிக்கப்பட்டது. அந்த மாதத்திற்கான வரவு செலவுகளும், அடுத்த மாதத்திற்கான செலவு திட்டங்களும் போடப்பட்டு இருவரும் அதுபற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அவை அனைத்தையும் அமைதியாக கவனித்தபடி ஆதித்யா அமர்ந்திருந்தான். அவர்கள் கிளம்பலாம் என்று சொன்னபோது,

“ஏன் லேப்டாப் யூஸ் பண்ண கூடாது இந்த அக்கௌண்ட்ஸ்க்கு...” என்று இருவரையும் பார்த்து கேட்டான்.

“வாங்கணும்...” கணக்கு புத்தகங்களை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைத்துக்கொண்டிருந்த யாழினியிடமிருந்து ஒற்றை மொழியாக பதில் வந்தது.

“ஷல் ஐ ஸீ இட்?” அந்த கணக்கு புத்தகங்களை கைகாட்டி ஆதித்யா கேட்டான்.

     விமலும் யாழினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்பு அந்த கணக்கு புத்தகத்தை ஆதித்யாவின் பக்கம் யாழினி தள்ளினாள். அவர்கள் கடைசியாக வரவு செலவு கணக்குகள் எழுதிய புத்தகத்தை ஆதித்யா முதலில் பார்த்தான். மிக தெளிவாக கணக்குகள் எழுதப்பட்டிருந்தது. கிரெடிட் டெபிட் என்று கட்டங்கள் போடப்பட்டு ஒரு பக்கமும், அஸ்ஸெர்ட் லையாபிலிட்டி ஒரு தனி பக்கமும் போடப்பட்டு, யார் யாருக்கு எப்போது பணம் கொடுக்க வேண்டும், எவ்வளவு பணம் யாரிடமிருந்து வரவேண்டும், கடையில் இருக்கும் டேபிள், சேர், சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர், கண்ணாடி ஜாடிகள், அடுப்பு, பாய்லர் என்று எல்லாமே அந்த கட்டங்களில் அடைக்கபட்டிருந்தது. கடைசியாக வரவு செலவு கணக்குகள் எழுதப்பட்டிருந்தது. ஆதித்யா ஒவ்வொரு பக்கமும் திருப்ப திருப்ப அவன் அதை கண்டு ஆச்சரியப்படுவதை மற்ற இருவரும் கண்டு உணர்ந்தார்கள்.

“இது சிக்ஸ் மன்த் ஒன்ஸ் பண்ற வொர்க்... மந்த்லி ஒன்ஸ் வெறும் குடுக்க வேண்டியதும் உள்ள வர வேண்டியதும்தான் எழுதுவோம்... ரொம்ப வாய பொலக்க வேண்டாம்... வா கிளம்பலாம்...” மிகவும் எதார்த்தமாக விமல் சொன்னான்.

     ஆதித்யா கைகளில் இருந்த புத்தகத்தை பிடுங்கி யாழினியிடம் கொடுத்து “போய் உள்ள வச்சிட்டு கிளம்பு” என்றான்.

     அவள் ஆதித்யாவின் முகத்தை பார்த்தாள். அவன் லேசாக சிரித்தபடி சரி என்று தலை அசைக்க அந்த கணக்கு புத்தகங்களை எடுத்துக்கொண்டு கடைக்கு உள்ளே இருக்கும் ஒரு அலமாரியில் வைக்க யாழினி சென்றாள். அவள் பின்னாலேயே வாஸ் பேசின் வரைக்கும் சென்று கைகளையும் முகத்தையும் விமல் கழுவினான். அலமாரியை மூடிவிட்டு அவள் வெளியே வர, தனது ஈரமான முகத்தை அவள் துப்பட்டா கொண்டு விமல் துடைத்துக்கொண்டான்.

“அப்போ நான் நாளைக்கு பர்சேஸ் போகவா..?” முகத்தை துடைத்தபடியே விமல் பேச,

“நானும் வரேன் டா... நீ மட்டும் எப்டி போவ...?” கரிசனத்தோடு யாழினி கேட்டாள்.

“கடைய ஹாஃப் டே மூடிட்டு வருவியா...?”

“நோ வே... அதுக்கு தான் சன்டே போகலாம்ன்னு சொல்றேன்...”

“இந்த சன்டே ஐம் பிசி... அதான் அல்ரெடி சொன்னேன்ல... இல்லனா அடுத்த வாரம் போலாமா...?”

“ஸ்டாக் பத்தாது... பிளஸ் யூடென்சில்ஸ்லாம் கொஞ்சம் புதுசு வாங்கணும்ல...”

     இருவரும் பேசியபடியே ஆதித்யாவிடம் வந்தார்கள். அவர்கள் கடைக்கான அந்த மாதத்து பொருட்கள் வாங்குவது பற்றி பேசுகிறார்கள் என்று அந்த கணக்கு புத்தகம் பார்த்ததால் புரிந்துகொள்ள முடிந்தது.

“நாளைக்கு சாடர்டே..ல... ஷல் ஐ கம் வித் யூ...?” அவர்கள் பேச்சில் தன்னை இணைத்துக்கொண்டான்.

“நீயா...? எதுக்கு இந்த வேல...? அடிச்சதுக்கு மன்னிப்பா...?” கொஞ்சம் நக்கலும் கேலியுமாக விமல் கேட்க,

“அதெல்லாம் இல்ல... உன்ன தனியா அனுப்ப யாழினி பயப்பட்றாளே... அதான் பத்ரமா கூட்டிட்டு போய்ட்டு வர பெரிய ஆள் ஒருத்தர் துணைக்கு இருந்தா நல்லா இருக்குமேன்னு” அதே நக்கலும் கேலியும் ஆதித்யாவிடம் இருந்தும் வந்தது.

     முதலில் பதறிய யாழினி, பின்பு லேசாக சிரித்தாள். விமல் ஆதித்யாவை மேலும் கீழுமாக ஒருமுறை பார்த்துவிட்டு “ஐ லைக் திஸ் கய்....” என்று சொன்னான்.

“ஒன்...” என்று ஆதித்யா சொல்ல, அது என்னவென்று புரியாமல் இருவரும் அவன் முகத்தை குழப்பமாக பார்த்தார்கள்.

“ஐ லைக் திஸ் ஒன்....” ஆதித்யா சொல்ல, விமல் இதழில் சிரிப்பு விரிந்தது.

“தோர் இம்ப்ரஷன் தான ட்ரை பண்ற...?” சிரித்த முகத்தோடு இருந்த விமலை பார்த்து ஆதித்யா கேட்க,

“யோவ் சகோ...! ஆமா...யா... ஆமா...!” பரவசமாக பதில் சொல்லி, “ஃபைனலி ஒரு மார்வெல் ஃபேன் நம்ம ஊர்ல...” என்று குஷியாக யாழினியை பார்த்து விமல் கூச்சலிட்டான்.

“ஏன்... எல்லாரும் இங்க டி.சி. ஃபேனா...” என்று ஆதித்யா கேள்வி கேட்க,

“ஷ்ஷ்ஷ்... இந்த கதை எல்லாம் நாளைக்கு பர்ச்சேஸ் போறப்போ பேசிக்கலாம்... இப்போ கிளம்புங்க” என்று சொல்லி சேர்களை சீராக அடுக்கிவிட்டு கடைக்கு வெளியே வந்தான்.

     அவனை தொடர்ந்து யாழினி மற்றும் ஆதித்யா இருவரும் வெளியே வந்தார்கள். யாழினி ஷட்டரை இழுக்க, உதவி செய்யவந்த ஆதித்யாவை வேண்டாம் என்று நிறுத்திவிட்டு தானே இழுத்து மூடிவிட்டு பூட்டுகளை பூட்டினாள். நாளை சந்திப்போம் என்று சொல்லி விமல் தனது பல்சரை உருமவிட்டுக்கொண்டு விடைபெற்றான். மணி அப்போது ஒன்பது பதினைந்து. அவன் வண்டியின் சத்தம், ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில், வெகு தூரம் செல்லும்வரை கேட்டது. ஆதி தனது வண்டியிலும், யாழினி தனது ஸ்கூட்டியிலும் அமர்ந்து அந்த இரவில் தங்கள் வீடு நோக்கி புறப்பட்டார்கள். இரண்டு வண்டியும் அருகருகில் சென்றது.

“நாளைக்கு எதுக்கு நீங்க வேற அலையனும்... அவன் பாத்துப்பான்...”

“இல்ல இல்ல... எனக்கு நாளைக்கு லீவுதான்... வீட்ல வெட்டியா இருக்றதுக்கு அவன் கூட போனா ஃபன்னா இருக்கும்ன்னு தோனுச்சி... அதான் போறேன்னு சொன்னேன்...”

“ஓ... அப்டி...! சரி சரி...” லேசாக சிரித்தபடி அவள் சொன்னாள்.

“அது என்ன ‘ஓ... அப்டி...!’ வித்யாசமான மாடுலேஷனா இருக்கு...”

“அது அப்டித்தான்... போக போக புரியும்...” குறும்பாக யாழினி பதில் சொல்ல, ஆதித்யாவுக்கு அது பிடித்திருந்தது.

     வீட்டை அடைந்தவுடன், தனது ஸ்கூட்டியின் பாக்ஸில் இருந்து ஒரு கப்ஐஸ் கிரீமை எடுத்து ஆதியிடம் நீட்டினாள். அப்படி நீட்டியவளை மேலும் கீழும் பார்த்தவன்,

“கொஞ்சம் பொறு...” என்று சொல்லி தனது வண்டியின் ஹாரனை அடித்தான். அது அலறியது. அந்த சத்தம் கேட்டு நாய்கள் குறைக்க ஆரம்பித்தன. ஆதித்யா அதிர்ந்துபோனான். வீட்டினுள் இருந்து வள்ளி வெளியே வந்தாள்.

“தம்பி... நீங்க பட்டனத்துல இல்ல கொய்ன் கொய்ன்னு ஹாரன் அடிக்க... அக்கம் பக்கம் அமைதியா வாழ்றாங்க... டிஸ்டர்ப் பண்ண கூடாது... பாரு நாயெல்லாம் பயந்துபோச்சி...” என்று அவனை கிண்டல் செய்தபடியே வள்ளி உற்சாகமாக வெளியே வந்தாள்.

“உங்களுக்காக கூப்டா இப்படி தான் அசிங்க படுத்துவீங்களா...?” பொய் கோபத்தோடு சிணுங்களாக ஆதித்யா கேட்டான்.

“காணும் காணும்ன்னு தேடுனீங்களே... இதோ உங்க அருமை ஃப்ரெண்ட் பொண்ணு...” என்று யாழினியை கை காட்டினான்.

“எங்கடி கப் ஐஸூ...?” சிரித்தபடி நின்றுகொண்டிருந்த யாழினியை வள்ளி கேட்டாள். அவள் ஐஸ் கிரீமை வள்ளியிடம் நீட்டினாள்.

“ரொம்ப நேரம் வெட்டி கதை பேசாம சீக்கிரம் வந்து புள்ளைக்கு சோறு போடுங்க” சொல்லிக்கொண்டே தனது வண்டியை வீட்டினுள் தள்ளியபடி சென்று மறைந்தான் ஆதித்யா.

“என்ன இவன்... உனக்கு ஒரு ‘டாடா’ கூட சொல்லாம போய்ட்டான்...?” என்று வள்ளி கேட்டதுதான் தாமதம்,

“குட் நைட் யாழினி...” என்று ஆதித்யாவின் குரல் கேட்டது.

     வள்ளியும் யாழினியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டினுள் வந்த வள்ளி, ஆதித்யா தானே சோறு போட்டு உண்டுக்கொண்டிருப்பதை பார்த்து,

“பசியாடா...?” என்று அன்னைக்கே உரிய கரிசனத்தோடு கேட்க,

“ஆமா.. அதுபோக நாளைக்கு காலைல வெளிய போறேன்... பர்சேஸ்...” சாப்பிட்டுக்கொண்டே பதில் சொன்னான்.

“பர்சேஸா... சூப்பர்டா... எத்தன மணிக்கு நம்ம கிளம்புறோம்..?” குதூகலமான குரலில் வள்ளி கேட்க,

“கிளம்புறோம் இல்ல, நானும் யாழினியோட ஃப்ரெண்டும் போறோம்...” என்று ஆதித்யா பதில் சொன்னான்.

“விமல் கூடையா...? ஓக்கே ஓக்கே....”

“உங்களுக்கு எப்படி அவனை...” என்று கேட்க வந்தவன், தினம் தினம் யாழினிக்கும் தனது அம்மாவுக்கும் நடக்கும் சம்பாஷணைகளை நினைவுகூர்ந்து,

“ஆமா… விமல்கூடயேதான்...” என்று சொன்னான்.

“ஹாப்பி பர்சேஸ் தம்பி... ஹாவ் ஃபன்...”

     இந்த உரையாடல் முடிய, ஆதித்யா உணவு உண்டு முடித்துவிட்டு, மாடிக்கு சென்று சிறிதுநேரம் உலாத்திவிட்டு படுக்கைக்கு சென்று நன்கு உறங்கினான். காலை ஆறுமணிக்கு விமலின் செல்போன் அழைப்பு அவனை எழுப்பியது.

“ப்ரோ... விமல் பேசுறேன்... செவன்’ஓ கிளாக்... சிவன் கோவில்.. ஐ வில் பீ வெயிட்டிங்...” என்று சொல்லிவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

     ஆதி எழுந்து, ஒரு மணிநேரத்தில் தயாராகி சிவன் கோவில் நோக்கி சென்றான். கோவில் தெருவின் சாலை நல்ல விசாலமாக இருந்தது. அந்த காலை வேளையில் கோவில் தெருவில் இருந்த பல கடைகள் மூடியே இருந்தன. தெருவின் முனையில் இருந்து பார்த்தபோது அழகாக வண்ணங்கள் பூசப்பட்ட கோவிலின் கோபுரம் பளிச்சென்று தெரிந்தது. கோவில் நோக்கி ஆதி நடக்க ஆரம்பித்தான். அருகே செல்ல செல்ல கோவிலுக்குள் இருந்து வந்த மந்திரஜப ஒலி அவனை ஈர்த்தது. பூக்களின் வாசம் மூக்கை துளைத்தது. காலை வேளையின் அமைதியும் கோவிலின் வெளிப்புற அழகும் அவன் மனதை கவர்ந்தது.

     நூல் பிடிதாற்போல கோவிலை நோக்கி நடந்துக்கொண்டிருந்த ஆதித்யாவை, தள்ளு வண்டியில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியிடம் பேசிக்கொண்டே இளநீர் பருகிக்கொண்டிருந்த விமல் கவனித்தான். இளநீருக்கு காசு கொடுத்துவிட்டு ஆதியின் அருகில் தானும் சென்று நின்றுக்கொண்டான்.

“இரண்டாயிரம் வருஷம்…”

     அத்தனை நேரம் ஆதியின் மனதில் ஓடிக்கொண்டிருந்த அமைதி, விமலின் குரல் கேட்டவுடன் லேசாக கலைந்தது. அதை கவனித்த விமல்,

“சாரி ப்ரோ... உள்ள போலாமா..?” என்று கேட்டான்.

     வார்த்தை எதுவும் இல்லாமல் வெறும் தலையை மட்டும் ஆதி அசைக்க, இருவரும் உள்ளே சென்றார்கள். முதல் கோபுரம் கடந்து இரண்டாவது கோபுரத்தின் உள்ளே சென்றார்கள். இரண்டு கோபுரங்களுக்கும் இடையில் ஒரு குட்டி ஸ்பீக்கரில்தான் மந்திர ஜபம் ஓடிக்கொண்டிருந்தது. ‘ஓம் நமசிவாய’ என்ற இரண்டு வார்தைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்தது. ஆனால் அந்த சூழல் அந்த இரண்டு வார்த்தைகளை ஒரு ஜபம் போல காட்டியது. இரண்டாம் கோபுரம் கடந்து உள்ளே சென்றனர். கண் முன்னே மிகப்பெரிய களம். குறைந்தது இருநூறு ஆட்கள் தாராளமாக புழங்குமளவுக்கு இடம் கோவிலின் இடப்பக்கம் இருந்தது. அங்கு ஒரு மூலையில் தானிய கிடங்கும், அங்கிருந்து கொஞ்சம் தள்ளி உணவு தயாரிக்கும் இடமும் இருந்தது.

     கோவிலின் களத்திற்குள் சென்றபோது திருமண்ணின் வாசம் உடல் முழுக்க பரவியது போல இருந்தது. பாதத்தில் ஒரு குறுகுறுப்பு தோன்றியது. மூளை கண்களை இமைக்க விடாமல் கோபுரத்தின் அழகை ரசிக்க, மனம் மிக மிக அமைதியாக உணர்ந்தது. கோவிலின் உயர்ந்த கோபுரத்தை மாட புறாக்கள் வட்டம் அடித்துக் கொண்டிருந்தன. அந்த புறாக்கள் தங்கள் இறக்கைகளை அடித்துக்கொள்ளும் சப்தம் கூட மனதிற்கு ஒரு வகையான இதமான உணர்வை தந்தது. அந்த உணர்வோடு இரண்டு இளைஞ்யர்களும் அமைதியாக கோவிலை சுற்றி வந்தார்கள்.

பயணம் தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 07 - விரைவில்


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி



__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments