01. இதுவும் காலத்தின் நாடகமா?
கட்டிப்போடவும்
கட்டவிழ்க்கவும்
கண்கட்டி வித்தை காட்டவும் வல்லது
காலம்!
ஏக்கங்களும்
குழப்பங்களும்
சூரியனை கண்ட பணி போல விலகியது
அவன் மனமும் அவள் மனமும் தெளிவானது
சந்திப்பு நிகழ்ந்து
காதல் சொல்லப்பட்டு
மனங்கள் ஏற்றுக்கொண்டு
ஆன்மாக்கள் மிக அழகாய் பிரகாசித்தது
இதுதான் காதலா..?
அந்த உணர்வின் இம்சை இதுதானா..?
இத்தனை சுகமா..?
தன்னைத்தானே இருவரும் கேட்டுக்கொண்டனர்.
எது சுகம்...?
எது சோகம்...?
எது இன்பம்...?
எது துன்பம்...?
வேறுபாடு காண விடாமல்
கண்களை கட்டிப்போட்டு
உணர்ச்சிகளை ஊட்டி ஊட்டி
தனக்கு அடிமை ஆக்கியது
காதல்...!
"காதலின் அழகும்...!
காதலின் ஆழமும்...!
காதலின் இனிமையும்...!
காதலின் ஈர்ப்பும்...!
காதலின் உணர்வும்...!
உடலின் ஒவ்வொரு அணுவும் அனுபவிக்க வேண்டியது...!"
இருவரும் அனுபவித்தனர்...!
வேலை என்று வெவ்வேறு இடங்களில் இருந்தபோதிலும்
இரு மனங்களும் ஒரு ஆன்மாவாக மாற
துடித்துக்கொண்டிருந்தன
காலம்...
அவனையும்
அவளையும்
காதலில் கலங்கடித்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது..!
02. காதலில் ஊடல் என்பது...!
ஊடல்...!
காதலின் மிக அழகிய ஆழமான பகுதி
இது காதலா?
என்று தொடக்கத்தில் களிப்பும் நாணமும்
பொங்கச்செய்த கேள்வி
அவனும் அவளும்
வார்த்தைகள் பகிர்ந்து
உணர்ச்சிகள் உணர்ந்து
முகத்திரைகள் கிழிந்து
ஆத்மமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டப்பின்
எனை நானும் உனை நீயும் ஏற்க வேண்டும்...!
தடை உடைத்து கைகோர்த்து நாமாவோம்...!
இப்படைப்பினில் இரைச்சல்கள் ஏராளம்...!
துயரனைத்தும் ஒன்றாக எதிர்கொள்வோம்...!
நீ நான் என்ற பேதம் இன்றி...!
புதியதொரு இலக்கணம் படைத்து...!
நாம் நிச்சயம் காதலாவோம்...!"
உன் குரல் நானும்
என் குரல் நீயும்
கவனமாக கேட்டு
அதில் ஊடல் என்னும் பூச்சாண்டியை வென்றெடுத்து
உனக்கு நானும்
எனக்கு நீயும் துணை
உணர்வுகள் புரியவில்லை
வார்த்தைகள் பகிர்ந்தபோதும்
உண்மைகள் புரியவில்லை
எண்ணிலடங்கா ஜோடிகள்
ஊடலினால் சிதைந்துபோக
எதிர்நீச்சலைக் கண்டு...
என்னை உலகிற்கு உணர்த்த
இவர்கள் உண்டு...
காதல்!
அதன் முடிவில் கிட்டும் தெளிவின்
மீதும் எனக்கு காதல்"
உணர்ச்சிகளை உணர்ந்தபின்னும்
முகத்திரைகளை கிழிந்தபின்னும்
ஆத்மமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டப்பின்னும்
என்றும் என்றென்றும்
அதே களிப்பும்
அதே நாணமும்
பொங்கச்செய்யும்...!
03. நம் சொந்தமும் பந்தமும்
காதல் வைத்த பல தேர்வுகளில்
கலங்காமல் மீண்டுவந்து
கல்யாணம் என்னும் படியை அடைந்தனர் அவனும்
அவளும்...
மன மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது
வாழ்த்துகள் பரிமாறப்பட்டது
குழப்பம்...
தவிப்பு...
வெட்கம்....
ஏக்கம்...
இவை எல்லாம் மனமார ஆசிவழங்கி மெல்ல மறைந்தன.
சமுதாயமும்...
அதன் உடன் பிறந்த
மதம்...
சாதி...
சடங்கு...
சம்பிரதாயம்...
எல்லாம் நிழல் விட்டு வெளிவந்து இவர்களை
சூழ்ந்துக் கொண்டன.
சொல்லிய காதல், களிப்பு...!
காத்திருக்கும் காதல், சுகம்...!
காலம் கடந்த காதல், சோகம்...!
விடையறியா காதல், வேதனை...!
வாழும் வரை காதல், தேடல்...!
சாகும் நேரம் காதல், அமைதி...!"
விடையறியாமால்
வேதனையில் வாடியது
இரு மனங்களும்.
தொலைவிலிருந்து நோக்கியது காலம்...!
04. இது யார் முடிவு?
வாழ்வில் பெரும் வெற்றி ஈட்டிய எவரும்
அந்த வெற்றியை தனதென்று உரிமை கொண்டாட
மாட்டார்கள்.
ஆதரிப்பவர் ஆயிரம்பேர் எப்போதும் உண்டு.
பழக்க வழக்கங்களை பின் தள்ளி
கலாச்சாரத்தை கலைந்துவிட்டு
எந்த ஒரு காரியம் செய்தாலும்
அதில் வெற்றியே கிட்டினாலும்
அவ்வெற்றி தோல்வியே ஆகும்
ஒருவர் மனம் ஒருவர் அறியவிடாமல் தடை போட்டான்...
இவன் வந்தால் போதும்
எண்ணங்கள் வேறுபடும்
புரிதல் விலகிவிடும்
காலம் ஓடிவிடும்
பிடிக்காமல் போகும்..!
பிறர் அறியா காரணமேன்?
அவர் உணர்வை நாம் மதிக்க
அவர் மதியா காரணமேன்?
காதல் செய்வது குற்றமெனில்
கைதாகா காரணமேன்?
பிரிவு ஒன்றே தண்டனையெனில்
பிரிவது
உயிராகா காரணமேன்?"
வெற்றியோடு மீண்டு வருவர்.
மீண்டு வருவரா?
05. இனி நடப்பவை நன்மைக்கே
நித்தம் நித்தம் நினைத்துப்பார்த்து
நித்திரையிலும் நீங்காத ஆசைகள்
நிதானமாய் நின்று கொண்டிருக்கிறது காலம்
தேவதை வழங்கிய ஆசிகளும்
தனிமை தந்த ஏக்கங்களும்
தென்றல் தந்த இனிமைகளும்
அர்த்தமற்றவையோ...?
உனை நெஞ்சினில் தாங்கியபடி
மழையை நீ ரசிக்க...
உன்னை நான் ரசிக்க...
தென்றல் நம்மை அரவணைக்க...
காதலில் நாம் லயித்திருக்க...
அந்த தருணம் மீண்டும் வாராதா...?
காதலின் ஆசி உண்மையெனில்
தென்றலின் இனிமை உண்மையெனில்...
நாம் இணைவோம்...
ஆன்மா உணர்ந்தது
உண்மையெனில்...
நாம் இணைவோம்...
எக்காவியமும் பாட்டிலடைக்க முடியாது...!
எவ்விலக்கணமும் பொருள் தாராது...!
ஒரு நிலையினில்
முடிவில்லா அமைதி
காதலின் நம்பிக்கை"
ஆசியையே விரும்பி...
அதை இருமனங்களும் ஆனந்தமாய் ஏற்க தயாரானது...
மனதில் விதைக்கும் எண்ணங்களும் அதன் செயல்களும்
மனிதர்கள் உருவாக்கிய வேறுபாடுகளும் அதன்
வினைகளும்
பாவம்...
இந்த இயற்கை என்ன செய்யும்...?
06. இதுவும் கடந்து போகுமா?
தனிமையின் சோகம் தீர்ந்து...
காலம்
காதல்
தென்றல்
வெட்கம்
ஏக்கம்
தவிப்பு
அதன் உடன் பிறந்த
மதம்
சாதி
சடங்கு
சம்பிரதாயம்
சொந்தங்கள் வழிவிட!!
இரண்டு உணர்வுகள்
புணர்ந்து...
ஒன்றாகி...
துன்பமான இன்பத்தின்
உச்ச சுகத்தை
அடைந்தனர்...!
"கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதல்ல
கிட்டியவை எல்லாம் உண்மையல்ல
சோகத்தின் காரணம் புரிவதல்ல
வீண்சண்டையும் வெட்டிப்பேச்சும் தேவையல்ல
ஆழம் அளந்து பார்ப்பதல்ல
காத்திருப்பும் எதிர்பார்ப்பும் மாயையல்ல
புரிந்துக்கொள்ள முயற்சிகள் எடுப்பதல்ல
உண்மையும்
உணர்ச்சியும்
உன்னதமுமே
நானுணர்ந்த காதல்...!"
07. இனி எல்லாம் சுகமே
இன்பம்
சுகம்
ஆனந்தம்
நிம்மதி
அமைதி
காதல்
காமம்
ஏக்கம்
தவிப்பு
வெட்கம்
நாணம்
வெற்றி
களிப்பு
உண்மை
ஒருவர் மனதில் எழுந்தடங்கும்
சோகம்
தோல்வி
ஏமாற்றம்
பொய்
மனம் உணர்த்தும்!
மூளை நம்பும்!!
இருதயம் ஏற்கும்!!!
ஆனால் எல்லாம் நிலையற்றவை...!
ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு
ஓருணர்வாய் வாழ்ந்தனர்
அவனும் அவளும்.
தோழியும் காதலியும் துணைவியுமாக அவள்!
துன்பத்திலும் தோல்வியிலும் தொய்விலும் அவள்!
அவனுக்காக மட்டுமே வாழும் அவள்!
வாழ்வின் எல்லாப்படிகளிலும் துணைநின்று
நரை பூத்து
பல் உதிர்ந்து
சுருக்கங்கள் படர்ந்து
பார்வை மங்கியபோதிலும்
அன்பின் ஆழத்தில்
ஆன்மாவை தொலைத்து
இன்புற்று வாழ்ந்தனர்...!
காரணமின்றி பிறர் மீது செலுத்தும் அன்பு ஒன்று
தவிர...!
அன்பு ஒன்று தவிர...!
அவனும் அவளும்
எடுத்துக்கட்டாய் வாழ்ந்தனர்!
உலகம் விட்டு பிரிந்தனர்!
காதலோடும் அன்போடும்
நீங்கா உறவு பூண்டனர்...!
இதுவும் கடந்து போகுமா...?
முற்றும்...!
-----------------------------------------------------------
தமிழ் வாசிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.
காதலின் ஆழமான உணர்ச்சிகளை பதிவு செய்ய ஒரு முயற்சி. உணர்ச்சிகள் வடிவமோ நிறமோ
அற்றவை...! நேரம் காலம் எதுவும் அற்றவை...! ஆழ்ந்து அனுபவிக்க வேண்டியவை...!
உணர்வுகளின் ஆழம் பார்க்க... அனுபவிக்க... அழகுபடுத்த... ஒவ்வொரு ஆன்மாவும்
முயற்சிக்க வேண்டும். நம் உணர்வுகளை அறியவும் பிறர் உணர்வுகளை மதிக்கவும் நாம்
அனைவரும் பழக வேண்டும்
அவனும் அவளும் தங்கள் உணர்வுகளை உணர்ந்தனர்
அவனும் அவளும் தங்கள் உணர்வுகளின் வழிச்சென்றனர்.
அவனும் அவளும் ஒருவரை ஒருவர் கண்டறிந்தனர்.
அவனும் அவளும் தங்கள் கனவுகளை வென்றனர்.
அவனும்... அவளும்...
ஆணும்... பெண்ணும்...
#MrDextrozeLove♥️
எழுத்து - MrDexzty
ஓவியம் - எழில், தனலட்சுமி
இந்த முயற்சியில் உடனிருந்த அனைவருக்கும் மிக்க
நன்றி...!
இனிய காதலர்கள் தின நல்வாழ்துகள் !
Feb 2020 - இதுவும் கடந்து போகுமா?
June 2020 - இதுவும் கடந்து போகுமா? 2.0
Feb 2021 - இதுவும் கடந்து போகுமா? 3.0
__________________________________________
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!



Comments
Post a Comment