1. புதிய தொடக்கம்
ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கத்தின் சந்தற்பமே.
சொந்த ஊர் விட்டு
பழகிய நண்பர்கள் விட்டு
வேலைக் காரணமாக வெளியூர் வந்து
புதிய மனிதர்கள்
புதிய பழக்க வழக்கங்கள்
புதியதொரு அனுபவத்தை
அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
தினம் ஒருமுறையேனும் வீட்டிலிருந்து அலைபேசியில் அழைத்து
விடுவார்கள்.
அலைபேசி திறன்பேசியாக மாறிற்று.
குறுஞ்செய்திகள் பகிரிச்செய்திகளாக மாறிற்று.
உணவுப் பழக்கங்கள் மாறிற்று.
தூங்கும் நேரம் மாறிற்று.
புதிய இடத்திற்கு மாறியாகிவிட்டது என்றெண்ணும்போதெல்லாம்...
மனதினுள் ஏதோ ஒரு குறைத் தோன்றிற்று.
"மூளை சொல்லியது.... எல்லாம் உண்டு என்று...!
மனம் சொல்லியது.... அதை ஏற்காதே என்று...!
நினைவுகள் சொல்லியது.... என்னை நினைத்துப்பார்
என்று...!
அவன் கனவில் அவள் சொன்னாள்... நான்
காத்திருக்கிறேன் என்று...!
காலம் சொல்லியது.... நான் மெல்லக் கனிவேன் என்று...!"
மனதின் குறை யாதென்று அவன் கண்டறிவானா...?
தூரத்தில் ஏங்கித்தவிக்கும் அவளின் குறைத்தீருமா?
2. காலமும் காதலும்
நாட்கள் ஓடின...
புதிய வேலை...
புதிய அறிமுகங்கள்...
அத்தனையின் மத்தியிலும் அவனை நினைத்துப் பார்க்க
அவள் மனம் மறந்ததில்லை...
அவனுடைய நினைவுகள் அவளை அவ்வப்போது வாட்டி
வதைத்தன.
பலநாள் கனவுகளில்...
அவன் கரம் பிடித்தாள்... கட்டியணைத்தாள்...
மறுநொடி 'ஐயோ இது தவறு' என்று புலம்பி தீர்த்தாள்.
சங்கத் தமிழ் செய்யுள் பாடல்களில்
இது அகம் சம்மந்தப்பட்ட இலக்கியங்கள்
இது புறம் சம்மந்தப்பட்ட இலக்கியங்கள்
என்று மங்கையின் மன ஓட்டங்களுக்கும் இலக்கணங்கள்
வகுக்கப்பட்டிருந்தன.
காலத்தின் போக்கில் அத்தனையும் மாறத்தொடங்கின.
"காலம்... காலத்தின் மீது காதல் கொண்டது...!
காலம்... மாற்றத்தின் மீது காதல் கொண்டது...!
காலம்... மாற்றத்தின் விளைவுகள் மீதும் காதல்
கொண்டது...!
காலம்... கலங்கத்தின் மீது காதல் கொண்டது...!
காலம்... கலங்கத்தின் முடிவில் வரும் தெளிவின்
மீதும் காதல் கொண்டது...!
இத்தனையின் மீது காதல் கொண்டபோதிலும்...!
காலதின் கரத்தை... ஏக்கம் என்றவனே கைப்பற்றினான்....!"
இலக்கியங்கள் மறந்த போதிலும்,
காதலின் ஏக்கம் மாறவில்லை.
ஸ்பரிசத்தின் இலக்கணம் மாறிய போதிலும்,
காதலின் ஏக்கம் மறக்கவில்லை.
அகம் புறம் என்ற வேறுபாடுகள் கற்றறியாத போதிலும்,
காதலின் ஏக்கங்களை உணர்ந்து அறிய முடித்தன.
கனவில் வருபவன் காதலனே ஆனபோதிலும்,
அவனுடன் செய்யும் கற்பனைக்கும் எல்லை வகுத்தாள் #சகி...!
கனவிலும் நினைவிலும்
அவனை மட்டும் நினைக்கும் அவள்...!
எதை நினைக்க மறக்கிறோம் என்ற குழப்பத்தில்
அவன்...!
இவர்கள் காதலின் ஏக்கத்தோடு நீங்கள்...!
3. வெறுமையின் விளக்கம்
அழகிய ஆதவன் புவியினுள் அடங்கும் வேளையில்...
கூண்டுக்கிளிகள் பொன் கதிர்களின் அழகில் லயித்திருக்கையில்,
எங்கிருந்தோ இதமான காற்று வீசத்தொடங்கியது
கருமேகங்கள் ஒன்று கூடி காரிருள்
சூழ்ந்தது
மண் வாசம் மனதினில் பரவியதும்
பல நினைவுகள் தோன்றி மறைந்தன
சொந்த ஊர் விட்டு
சொந்த மண் விட்டு
சொந்த பந்தம் விட்டு
வேலைக்காக வெளியூர் வந்து ஒரு வருடம் கழிந்து
விட்டது
இடையில் ஒருமுறை மட்டுமே ஊர் செல்லும் வாய்ப்புக் கிட்டியது
இன்று இந்த மண் வாசம் ஏனோ
புதுவித புத்துணர்ச்சி நல்கியது
ஒரு வருடம் முன்பு வேலை கிடைத்தது
பெற்றோர்கள் மகிழ்ந்தது
நண்பர்கள் கொண்டாடியது
புதியதொரு பயணம் தொடங்கியது
எல்லாம் நினைவிற்கு வந்தது
அத்தனை நினைவுகளோடு
சகியின் கண்ணீரும் நினைவில் தோன்றியது....!
மனம் சட்டென்று அமைதியடைந்தது..!
இத்தனை நாட்கள் மனதினில் இருந்த வெறுமை மாயமாக
மறைந்தது...
அந்தக் கண்களும், கண்களின் கண்ணீரும், #அவள் உதட்டில் இருந்த புதிரான சிறு சிரிப்பும் #அவன் கண்ணெதிரில் தோன்றி
மனம் முழுக்க நிறைந்தது
இத்தனை நாளும் அவள் என்னுடன் இல்லை என்பதன் ஏக்கம் தானா
இது...?
"தொட்டணைக்கும் தூரம் இருந்தபோது தோன்றாத பல உணர்வுகள்...!
விட்டு வெகுதூரம் வந்த வேளையிலே அவளின் நினைவுகள்...!
சட்டென்று இன்று உடைத்துக்கொண்டு வெளிவருவது ஏனோ...?
இது சரிதானா...?"
அவள் மனதில் உதித்த அதே குழப்பங்கள் இவன்
மனதிலும் எழுந்தது....!
4. குழப்பம் தேவையில்லை
"உன்னோடு பேச வேண்டும்
மனம் விட்டு பேச வேண்டும்...!
முதல் தோல்வியின் பயமிது
அது உன்னிடமும் உண்டு...!
காயம்பட்ட மனதிற்கு நீ
மருந்தாக வேண்டாம்
சகி...!
ஆனால் காயத்தின் காரணத்தை
என் காவியத்தின்
கலங்கங்களை...!
உன் செவிகள் கேட்டப்பின்
மனம் ஏற்றால்
மகிழ்ச்சி...!"
தனது மன ஓட்டங்களை ஆழமாக கவனித்தான்.
அவன் தேவை இதுவென உணர்ந்தான்.
அவளுடன் பேச முடிவெடுத்தான்...!
'இதுவே நேரம்'
காலம் கனிவோடு கூறியது...!
'மனம் விட்டு பேசிவிடு'
தயக்கம் வழி விட்டது...!
'குழப்பம் தேவையில்லை'
சந்தேகம் தன் சிம்மாசனம் விட்டிறங்கி சாமானியன்
வேடம் பூண்டது...!
சொல்ல வார்த்தை ஏதும் இன்றி தவித்தது காதல்
தேவதை...!
5. காதல் கேலிகள்
அவன் முடிவெடுத்தான்
ஆனால் செயல்படுத்த தாமதித்தான்
காதல் என்று ஆகிவிட்டது
ஆனால் எங்கே தொடங்குவது?
அவள் மீது காதல் தான்
ஆனால் என்றிலிருந்து காதல்?
அவள் பேரில் எப்போதும் அன்பு தான்
ஆனால் எப்போது பேரன்பாகியது?
"நான் அத்தனை சுலபமாக அகப்பட மாட்டேன்...!
என்னை புரிந்துக்கொள்ள முயர்ச்சி செய்...!
என் ஆழம் இதுவென காண கற்றுக்கொள்...!
நான் கடலினும் ஆழம் மலையினும் உயரம்...!
நன்கு ஆராயாமல் மூழ்கினால்
முத்துக்குளிக்க முடியாது...!
நன்கு ஆராயாமல் ஏறத்தொடங்கினால்
உச்சம் காண மாட்டாய்...!
ஆழ்ந்து ஆலோசிப்பாயாக....!
உன்னுடன் நீ நன்கு ஆலோசிப்பாயாக...!
காதல் கட்டளை இட்டது...!"
இவன் கேள்விகள் யாவும்...
தயக்கம் இல்லை...
குழப்பம் இல்லை...
சந்தேகம் இல்லை...
இவை எல்லாம் காதலின் கேலிகள்...!
நீ யார் என்று அறியாமல் உன்னால்
மற்றவரை அறிய இயலாது....!
காதல் இதுவென்று அறியாமல் உன்னால்
வேறொரு இதயத்தை காதலிக்க இயலாது....!
அவன் யோசிக்கத் தொடங்கினான்....!
முடிவென்ன...?
நிச்சயம் வெற்றி பெறுவான்...!
ஆனால் எப்படி...?
காத்திருந்து காண்போம்...!
6. அவனும் அவளும்
சிறு வயது முதல் சிறிது
காலம் முன்புவரையிலும்
ஒருவர் பற்றி ஒருவர் அறியாதது
எதுவும் இல்லை
கல்லூரி முடித்து சில நாட்கள்
அவ்வாறே இருந்தன
மாற்றத்தின் காரணம் நாம் அறிவோம்
அவன் யோசித்தான்
தன்னுடைய கதை கேட்க என்றும் அவள் இருந்தாள்
ஆனந்தமோ சோகமோ மகிழ்ச்சியோ தளர்வோ அவள் இருந்தாள்
எது நடப்பினும் பகிர்ந்துக்கொள்ள முதல் தேடும் இதயம் அவள்
இத்தனை நாள் ஏன் இதை மறந்தோம்...?
அவளுக்கு இதுவரை என்ன செய்தோம்...?
யோசித்தான்....
எதுவும் செய்யவில்லை என்பது சுத்த பொய்...
என் கண்களின் அசைவை வைத்து
மனதின் ஓட்டத்தை அறிந்துக் கொண்டு
பல சகாயம் செய்தாய் நீ...!
சகியின் குரல் அவன் காதில் கேட்டது...!
உதட்டின் ஓரம் சிறு புன்னகை பூத்தது...!
"காதல்...!
கொஞ்சம் கேள்விகளும் கொஞ்சம் குழப்பங்களும் கலந்தது....!
காதல்...!
கொஞ்சம் இன்பமும் கொஞ்சம் துன்பமும் கலந்தது...!
காதல்...!
கொஞ்சம் எதிர்பார்ப்பும் கொஞ்சம் ஏமாற்றமும்
கலந்தது...!
காதல்...!
மனதின் ஆசைகளும் மூளையின் பயமும் கலந்தது...!
காதல்...!
அவளின் மனமும் அவனின் மனமும் கலப்பது...!"
7. முடிவு இதுவா?
அவன் அன்பின் பார்வைத் தீண்டி
வருடம் ஆகிவிட்டது....
அவன் அரவணைப்பு தனக்குக் கிட்டி
வருடம் ஆகிவிட்டது....
இந்த ஒரு ஆண்டில் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்
தான் எத்தனை...
அத்தனையும் சமாளிக்க கற்றுக்கொண்ட வழிகள் தான் எத்தனை...
முன்பெல்லாம் மாற்றம் என்றாலே பயம் வரும்...
அதனுடன் அவன் நினைப்பும் வரும்....
"சோகம் சொல்லி தீர்க்கவும்...!
குழப்பம் சொல்லி புலம்பவும்...!
மகிழ்ச்சி சொல்லி களிக்கவும்...!
இழப்பு சொல்லி அழுகவும்...!
அத்தனைக்கும் தோழன் அவன் இருந்தான்....!"
ஆனால் இப்போது இல்லை...
அலுவலக அனுபவங்கள்...
புது மனிதர்களின் அறிமுகங்கள்...
பயணத்தில் பார்த்த பல கதைகள்...
எதுவும் சொல்ல அவன் உடனில்லை...!
நாட்கள் செல்ல செல்ல அந்த எதிர்பார்ப்பும்
இப்போது இல்லை...!
அவனுக்கும் இதே நிலையோ என்னவோ...
புது வேலை
புது நண்பர்கள்
புது சமூகம்
புதிய ஊர்
நிச்சயம் அவன் நலமாகவே இருப்பான்.
என்னை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் இருக்காது
போலும்....
நல்ல நட்பை காதல் என்று குழம்பிக்கொண்டோம்
சொல்லாமல் போனதே சௌகரியம்.
பெருமூச்சு விட்டு
ஆழ்ந்த சிந்தனைகள் விட்டு
ஆசைகள் விட்டு
எதிர்பார்ப்புகள் விட்டு
இதுதான் எதார்த்தம் என்ற நிலைமை பழகிவிட்டது சகியின் மனம்.
எதார்த்தம் என்னும் எசமானன்
அவள் மனதினில் அரசனானான்...!
எல்லாம் ஒருபுறம் இருக்க...
மனதில் எழுந்த மாற்றத்தை
குறுஞ்செய்தியிலோ... அலைபேசியிலோ...
பகிரிந்துக் கொள்ள விரும்பாத அவன்... !
கண்ணீர் கசிந்த அந்த கண்கள்
காதல் தானா என்று அறிந்துக்கொள்ள
அவளை சந்திக்க நேரில் புறப்பட்டான்...!
8. கடந்து போகும்
ஊரிலிருந்து வந்து முதல் வேலையாக உன்னை சந்திக்க
வேண்டும் என்ற செய்தியை அவளுக்கு அளித்தான்.
செய்தியைக் கண்டதும் சகிக்கு தோன்றியது என்ன
உணர்வு என்று விளங்கவில்லை.
இது அதிர்ச்சிதான்....
ஆனால் மகிழ்ச்சியளிக்கிறதா...?
இல்லை குழப்பங்கள் தோன்றுகிறதா..?
கேள்விகள் எழுகிறதா...?
இன்றே பார்க்க ஆர்வம் தோன்றுகிறதா?
எதுவும் இல்லை...
செய்தி கிடைத்தது.
சரி என்று பதில் சொல்லப்பட்டது.
அப்புறம் என்ன...?
ஒன்றும் இல்லை....
வெறுமை குடிக்கொண்டது....
வெகு நாட்கள் கேட்க விரும்பிய கேள்விகள்
இன்று சகியின் மனதில் எழவில்லை...
காரணம் தெரியவில்லை...!
என்ன செய்தியாக இருக்கும்....?
எதிர்பார்ப்பு தோன்றவில்லை....!
வரட்டும் பார்ப்போம் என்றாகிவிட்டது...!
சொந்தங்கள்... பந்தங்கள்... அனைவரையும் சந்தித்து
சில நாட்களுக்குப் பிறகு அவளை சந்திக்க நேரம்
கிட்டியது...!
அவர்கள் தனிமையில் சந்திக்கும் இடத்திற்கு இருவரும் வந்து
சேர்ந்தனர்....
அமைதி அன்று அரக்கன் போல தோன்றினான்....
காற்று அன்று வேண்டா விரோதி போலத் தோன்றினான்...
மூச்சு விடும் சத்தம் கூச்சலாக தோன்றியது....
இருவரின் இதயத்துடிப்பு மட்டும் கேட்டால் போதும்
என்று தோன்றியது.
வெகுநாட்கள் எதிர்பார்த்த தருணம் இதுதான்
என்று....
காதலும்
காதல் தேவதையும்
சந்தேகமும்
தயக்கமும்
வெட்கமும்
தவிப்பும்
கேலியும்
காலமும்
காற்றும்
மற்றும் எல்லா உணர்ச்சிகளும் இவர்கள் இருவரின்
உரையாடலுக்காக காத்திருந்தது.
என்ன பதில் வரும் என்ற எதிர்பார்ப்பை விடவும்...
எதுவாயினும் இந்த நட்பு நீடிக்க வேண்டும் என்ற
பயம் மட்டும் அவன் மனதில்...!
என்ன சொல்ல வந்தான் என்ற கேள்வி மட்டும் மனதில்
வைத்துக்கொண்டு அவள்....!
வெகுநேர அமைதியின் பிறகு
இருவரின் கண்களும் சந்தித்தன...
அடக்கி வைத்த அத்தனையும்
அவன் கண்களை பார்த்தவுடன்
வெட்கமின்றி வெளிவரத் துடித்தது சகியின் மனம்.
காற்றின் ஓசை அதிகமாயிற்று...
அமைதி காணாமல் போயிற்று...
நீ என்னவன் என்று மனம் அலறிற்று...
"அவன் கண்களில் தெரிவது காதல்...!" கண்ணீர் மல்க
அலறியது அசரீரி...
அவள் கண்களை கண்ட அந்த ஒரு நொடியினில்....
உலகம் இருண்டு அவளின் வெண்ணிலா முகம் தவிர மற்ற
எல்லாம் மறைந்தது...
அவன் சொல்ல வந்தவை எல்லாம் காற்றோடு போயிற்று...
எழில் கொஞ்சும் தாய் தமிழின் வார்த்தைகள் யாவும் மாயமாயின...
சட்டென்று இருவரும் கண்களை மூடினர்...!
மறுகணம் மீண்டும் கண்ணோடு கண்கள் கலந்தன...!
"காதல்
கண்களில் புகுந்து...!
உள்ளத்தில் தங்கி...!
உடலின் ரத்த நாளங்களில் பரவி...!
மனம் முழுக்க...!
உடல் முழுக்க...!
ஆன்மாவின் ஒளியைப் போல...!
காதல் நிறைந்து ஒழுக...!
தன்னிலை மறந்தனர் இருவரும்...!"
இதுவே காதல்️
மனதினுள் தோன்றியது...!
வார்த்தைகள் தேவை இல்லை
விளக்கங்கள் தேவை இல்லை
நீ நான் என்ற பேதங்கள் தேவை இல்லை
இரு ஆன்மாக்களின் பார்வைகள் போதும்...
அந்த உணர்வு போதும்....
அந்த உணர்வு மட்டும் போதும்...
அவனுக்கும் அவளுக்கும்
அது போதுமானதாக இருந்தது.
"உணர்ச்சிகள் புணரும் உச்ச துன்பத்தின் சுகம் தான்
காதல்"
இத்தனை நாட்கள் இவர்களுக்கு உடனிருந்து
துணைபுரிந்த,
காலம்... காதல்... குழப்பம்... தவிப்பு...
வெட்கம்.... ஏக்கம்...
இவை எல்லாம் மனமார ஆசிவழங்கி மெல்ல மறைந்தன.
இத்தனை நாட்கள் அமைதியாக நிழலில் இருந்த
சமுதாயமும் அதன் உடன் பிறந்த மதம் சாதி சடங்கு சம்பிரதாயம் எல்லாம்
நிழல் விட்டு வெளிவந்து இவர்களை சூழ்ந்துக்
கொண்டன.
தொடரும்...!(2021)
_________________________________________________________
நன்றி...!
தமிழ் வாசிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.
காதலின் ஆழமான உணர்ச்சிகளை பதிவு செய்ய ஒரு முயற்சி. அவனும் அவளும் தன் உணர்வுகளை
உணர்ந்து அதன் வழி சென்றனர். ஒருவரை ஒருவர் கண்டறிந்தனர். இனி இந்த சமுதாயம்
அவர்கள் உணர்வுகளுக்கு என்ன செய்கிறது என்பதை அடுத்து நான் எழுதும் கவிகளில்
காண்போம். இந்த முயற்சியில் உடனிருந்த அனைவருக்கும் மிக்க நன்றி...!
#MrDextrozeLove♥️
எழுத்து - MrDexzty
ஓவியம் - எழில், தனலட்சுமி
Feb 2020 - இதுவும் கடந்து போகுமா?
June 2020 - இதுவும் கடந்து போகுமா? 2.0
Feb 2021 - இதுவும் கடந்து போகுமா? 3.0
__________________________________________
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________
மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!
படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை பகிருங்கள்..!
அவர்கள் உள்ளத்தால் இணைந்தனர் இல்லறத்தில் இணைய இந்த சமுதாயம் என்ன வழி வைத்து இருக்கிறது என்று எதிர்பார்ப்போம். எதிர்ப்பு என்ற வார்த்தை இல்லையென்றால் எதிர்ப்பார்ப்பு என்ற
ReplyDeleteவார்த்தையும் இருக்காது. காதலில் எதிர்ப்பு இருக்கும் எதிர்ப்பார்ப்பும் எங்களுக்கு இருக்கிறது .
இப்படிக்கு
உங்கள் வாசகர்களில் ஒருவன்.
காதல் உணர்வை நன்கு புரிந்து கொண்டேன் நன்பா. தமிழில் படிக்கும் முதல் சீரீஸ் இதான். இதுவே என் புதிய. தொடக்கம்🙂.
ReplyDelete