14. அமைதியின் அழகு

 அமைதியின் அழகு

“டூட்... ஐ டோன்ட் ஹேவ் டூ எக்ஸ்ப்ளெய்ன் திஸ் டூ எனிவொன்... இட்ஸ் டோட்டலி மை டிசிஷன்...”

     மது அருந்த சொல்லி வற்புறுத்திய தன் நண்பர்களிடம் மாறன் பொறுமையாக பேசினான்.

“டேய்... உனக்கு ஃபேமிலி இல்ல... கேர்ள்பிரண்ட் இல்ல... பெரிய கமிட்மெண்ட் எதுவும் இல்ல... அப்றம் ஏன் லைஃப்ல இந்த மாதிரி சந்தோஷத்த எல்லாம் அவாய்ட் பண்ற?” அப்பார்ட்மெண்ட்டில் தன்னோடு வசிக்கும் நண்பன் கேட்டான்.

“சந்தோஷம் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி மாறும் மச்சி... எனக்கு இது செட் ஆவல...”

“எப்பா சாமி... தத்துவங்கள் பேசவேண்டாம்... இந்தா ஸ்ப்ரைட்டு... உன் இஷ்டம்போல குடி...” என்று சொல்லி ஸ்ப்ரைட் ஒன்றை மாறன் கையில் கொடுத்துவிட்டு பால்கணி விட்டு தன் வேலையை பார்க்க அந்த நண்பன் ஹாலுக்கு சென்றான்.

     வாரக்கடைசி என்றால் குடித்தே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று வாழும் சமுதாயம், மாறன் வாழும் சமுதாயம். அதில் அவனை போல வெகு சிலரே உண்டு. அவர்களை ஸ்ப்ரைட் வாங்கிக்கொடுத்து மதிக்கும் நண்பர்களும் உண்டு.

“நீங்க டிரிங்க்ஸ் பண்ணலையா” பால்கணியில் நின்று ஸ்ப்ரைட் பருகிக்கொண்டிருந்த மாறனின் அருகில் வந்து பிரியா கேட்டாள்.

     அந்த அப்பார்ட்மெண்ட்டில் அன்று ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் அனைவரும் புதிதாக காதலர்களான ஒரு ஜோடிக்கு வாழ்த்து சொல்லி கொண்டாடுவதாக, அன்று, ஒன்று கூடியிருந்தனர். பிரியா அந்த பெண்ணிற்கு மிக நெருக்கமான ஸ்நேகிதி என்ற காரணத்தினால் அங்கு வந்திருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்து தனது பெண்தோழிகள் உட்பட யாரும் அங்கு நிதானத்தில் இல்லை என்பதை கவனித்த பிரியா, பால்கணி பக்கம் வந்தாள். கையில் ஸ்ப்ரைட் பாட்டில் வைத்திருந்த மாறனை கண்டதும் பேச்சுதுணைக்கு ஆள் கிடைத்துவிட்டது என்று எண்ணி மாறனிடம் பேச்சு கொடுத்தாள்.

“இண்டரெஸ்ட் இல்லங்க” என்று சொல்லி பண்ணிரெண்டாவது மாடியில் இருந்து இரவு வானத்தை பார்த்தபடி நின்றான்.

“நீங்க பண்ணலையா...?” சிறிது இடைவெளி விட்டு கேள்வி கேட்டான்.

“ம்‌ம்ம்... எனக்கும் இண்டரெஸ்ட் இல்லன்னு வச்சிக்கோங்களேன்” சிரித்தபடி பிரியா சொல்லிவிட்டு மாறனின் முகத்தை பார்த்தாள். அவன் இதழில் லேசாக புன்னகை பூத்தது.

“இது ஷேர் பண்றிங்களா? ஷால் ஐ கெட் யூ அ கிலாஸ்..?” தன் கையில் இருந்த ஸ்ப்ரைட்டை காண்பித்து மாறன் பிரியாவிடம் கேட்டான்.

“அவ்ளோ ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம்... அப்டியே ஷேர் பண்ணுங்க.. ஐ’ம்‌ ஓகே வித் தட்...”

     ஸ்ப்ரைட் பாட்டில் கை மாற்றப்பட்டது. இரவு மூன்றரை மணிவரை அந்த ஜோடிகளுக்கான கொண்டாட்டம் நடைபெற்று அனைவரும் ஆங்காங்கே தூங்கிப்போனார்கள். பால்கணியில் நின்றபடி பேச ஆரம்பித்த மாறனும் பிரியாவும் நேரம் போனதே தெரியாமல் பல கதைகள் பேசினார்கள். அங்கே இருந்த சோஃபாவில் ஆளுக்கொருபக்கம் தலைவைத்து கண்ணயர்ந்தார்கள். வெள்ளியன்று போட்ட ஆட்டம் சனியன்று மதியம் தான் லேசாக தெளிந்தது பலருக்கு. அவர் அவர் கண்முழித்த பிறகு சொல்லாமல் கொள்ளாமல் தங்கள் வீடு நோக்கி சென்றார்கள். யாரிடம் என்ன சொல்லுவது என்று தெரியாததினால் அப்படி செய்தார்கள்.

     மாறன் முழித்து பார்க்க, பிரியா அங்கு இல்லை. அடுத்த வாரம் அலுவலகத்தில் இருவரும் சந்தித்தார்கள். ஒப்புக்கு லேசாக சிரித்தபடி வணக்கம் சொல்லி நகர்ந்தார்கள். ஒருநாள் மதிய உணவு இடைவெளியில் கேஃப்பிடெரியாவில் வேறு வழி இல்லாமல் இருவரும் ஒரே மேசையில் அமர்ந்து உண்ண நேரிட்டது.

“ஹவ் யு டூயிங்க்..?” மாறன் கேட்டான்.

“குட்... நீங்க..?” ஒப்புக்கு கேட்பதுபோல பிரியா நலம் விசாரித்தாள்.

“ம்‌ம்ம்... குட்”

     மீதம் இருந்த பதினைத்து நிமிடங்கள் அவர் அவர்கள் திறன்பேசியை பார்த்தபடி உணவு உண்டார்கள். உணவு முடித்து பிரியா முதலில் எழுந்தாள்.

“ஹே பிரியா... டூ யு ஹாவ் எ மினிட்...?” எழுந்தவளை மாறன் கேட்டான்.

     ‘என்ன?’ என்பதுபோல முகபாவம் வைத்துக்கொண்டு எழுந்த இடத்தில் அப்படியே நின்றாள். மாறன் தானும் எழுந்து ‘போகலாம்’ என்பதுபோல சைகை செய்து கைகழுவும் இடத்திற்கு இருவரும் ஒன்றாக நடந்து சென்றார்கள். குப்பை தொட்டியில் ப்ளேட்டை போட்டுவிட்டு குழாய் அருகில் சென்றபோது மாறன் பேசினான்.

“அன்னைக்கு நைட் ஏதாச்சும் தப்பா பேசிட்டனா?” வெகுளியாக பிரியாவிடம் கேட்டான்.

“அச்சோ மாறன் அப்படிலாம் ஒண்ணும் இல்ல... ஏன் இப்படி ஒரு கேள்வி...?” பதறியபடி பிரியா பேசினாள்.

“ஹே ரிலாக்ஸ்... ஏதோ என்ன அவாய்ட்பண்ற மாதிரி ஒரு ஃபீலிங்... அதான் கேட்டேன்...”

“ஐயோ அப்படி இல்ல.. எப்பவும் நம்ம ஆஃபிஸ்ல அப்படித்தான...” வார்தைகள் தயக்கத்துடன் துண்டு துண்டுகளாக வெளியே வந்தது.

“ஹொ...! ஐ தாட் வீ பிகம் ஃபிரண்ட்ஸ் ஆஃப்டர் தட் கான்வோ...” அவள் கண்களோடு கண்கள் கலந்தபடி மாறன் பேசினான்.

“அஃப்கோர்ஸ் வீ ஆர்..” அழுத்தம் திருத்தமாக பிரியா பதில் சொன்னாள்.

“தென் பிளீஸ் லெட் மீ நோ வாட் இஸ் பாதெரிங் யூ?”

     பிரியா முகத்தில் கலவரம் தெரிந்தது. பதட்டத்தில் சுற்றும் முற்றும் விழிகள் திரிந்தது. கைகள் என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு கை திறன்பேசியை அழுத்தமாக பிடித்துக்கொண்டது. மற்றொரு கை கூந்தலை நொடிக்கு இரண்டுமுறை சரி செய்தது. கால்கள் ஓரிடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் லேசாக நகர்ந்துக்கொண்டே இருந்தது. மாறன் இது அனைத்தையும் கவனித்தான்.

“பிரியா... இட்ஸ் ஓகே... ரிலாக்ஸ்.. லெட்ஸ் கோ...” என்று சொல்லியபடி விலகி சென்றான். பிரியா அதே இடத்தில் நின்று விலகி செல்லும் மாறனை கவனித்தாள்.

“மாறன்...” அவள் அழைக்க, அவன் நின்று திரும்பிப் பார்த்தான்.

“ஈவினிங் ஃபிரீயா...?” அருகில் வந்து கண்ணோடு கண்கள் பார்த்து தெளிவாக கேட்டாள்.

“யெஸ்...” என்று சொல்லி ‘ஏன்’ என்பது போல தலையசைத்து கேள்வி கேட்டான்.

“லெட்ஸ் கோ டூ டெம்பிள்... அன்னிக்கு சொன்னீங்களே உங்க ஃப்பேவரட் பிளேஸ்... அங்க...” சொல்லிவிட்டு ‘போகலாம்தானே?’ என்று கண்களை உருட்டி கேள்வி கேட்டாள்.

“ஓ...கே...” ஏன் என்று புரியாத குழப்பத்தில் பதில் சொல்லிவிட்டு வேலையை பார்க்க சென்றான்.

     அன்று மாலை சந்தித்தார்கள். மாறனுக்கு பிடித்த கோவிலுக்கு அவனும் பிரியாவும் சென்றார்கள். சாமி கும்பிட்டுவிட்டு அமைதியாக அமர்ந்தார்கள்.

“ம்‌ம்‌ம்... சொல்லுங்க பிரியா... என்ன ப்ராப்ளம் என்கிட்ட...?” சில அமைதி நிமிடங்கள் கடந்தபின்பு மாறன் கேள்வி கேட்டான்.

“ப்ராப்ளம் உங்ககிட்ட இல்ல... என்கிட்டதான்...” தயங்கியபடி பதில் வந்தது. மறுகேள்விகள் எதுவும் கேட்காமல் அமைதியாக மாறன் அமர்ந்திருக்கவே பிரியாவே தொடர்ந்தாள்.

“ஆஃப்டர் அவர் கான்வெர்சேஷன், ஐ ஃபெல்ட் வெறி குளோஸ் டூ யு... ரெண்டுபேருக்கும் ஃபேமிலி இல்ல, கமிட்மென்ட்ஸ் இல்ல. இதெல்லாம் விட முக்கியமா... வீ ஹாவ் காம்மன் டேஸ்ட் இன் மெனி திங்க்ஸ்...! ஸோ..! ஐ தாட்...! ஃபெல்ட்..!” வெட்கத்துடனும் தயக்கத்துடனும் பாதி மென்று பாதி முழுங்கி பிரியா பேச, அருகில் அமைதியாய் அமர்ந்தபடி உதட்டில் லேசான சிரிப்புடன் மாறன் அமர்ந்திருந்தான்.

“இப்படி சிரிச்சிட்டே இருந்தா என்ன அர்த்தம்..? யு கேன் ஹெல்ப் மீ ஹியர் நோ...” என்று பொய்யாய் கோபமும் உண்மையான பாசமும் கொஞ்சம் எதிர்பார்ப்பும் கலந்த குரலில் பிரியா பேசினாள்.

“ஐ எம் கோயிங் டூ ஹெல்ப், பிரியா...” என்று சொல்லி அவன் பேச தொடங்கினான். அவள் மொத்த கவனமும் அவன் வார்த்தைகளின் பக்கம் திரும்பியது.

“ஸீ பிரியா, ஐ நோ வேர் யு ஆர் கெட்டிங் அட்... சேம் தாட் எனக்கும் இருந்துச்சி” என்று சொல்லி ஒரு நொடி இடைவெளி விட்டு பிரியாவின் முகத்தை பார்த்தான். கவலை ரேகை படர்வதை கவனித்தான். தன் பேச்சை தொடர்ந்தான்.

“பட் ஐ எம் நாட் ரெடி ஃபார் இட் யெட்... அட் தி சேம் டைம்... நமக்கு கமிட்மென்ட்ஸ் இல்ல, கம்ப்ளீட் ஃப்ரீடம் இருக்கு. அண்ட் தட் ஃப்ரீடம் கம்ஸ் வித் லாட் ஆஃப் ரெஸ்போன்சிபிலிடிஸ்... ஐ பிலீவ் யு நோ தட்...!”

     இதற்கு மேல் பிரியா மாறனிடமிருந்து கேட்க எதுவும் இல்லை. காரணம் எத்தனையோ முறை தன் தோழிகள் “என்ஜாய் யுவர் லைஃப் டீ... யு லிவ் ஒன்லி ஒன்ஸ்... அதுல உனக்கு இவ்ளோ ஃப்ரீடம் இருக்கு, அதை வேஸ்ட் பண்ணாத” என்று சொன்னபோதெல்லாம் அவள் கொடுத்த பதில் “ஃப்ரீடம் கம்ஸ் வித் லாட் ஆஃப் ரெஸ்போன்சிபிலிடிஸ்..” என்பதே ஆகும்.

     மாறனை பிரியா முழுவதுமாக புரிந்துக்கொண்டாள். அவன் இத்தனை தெளிவாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னையும் அந்த தெளிவிற்கு வெகு விரைவாக கொண்டு வந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டாள். அந்த சொல்திறணை தானும் பெற வேண்டும் என்று மனதில் ஆசை கொண்டாள்.

அவள் புரிந்துக்கொண்டாள் என்பதை மாறனும் உணர்ந்தான்.

“ஸோ...” என்று அவன் இழுக்க,

“ஸோ...?” என்று அவள் கேள்வியாக கேட்டாள்.

“ஸோ... ஆர் வீ குட்? வீ கேன் பீ ஃபிரண்ட்ஸ் ரைட்?”

“ஹொ...! வீ ஆர் டோட்டலி குட்... பட் அந்த ஃபிரண்ட்ஸ் பார்ட்... நா யோசிச்சி சொல்றேன்...” சிரித்தபடி வெகுளியாக அவனிடத்தில் சொன்னாள்.

     கோவில் விட்டு வெளியே வந்தார்கள். இருவர் மனமும் லேசாக இருந்தது. மாறன் தனது வண்டியை எடுத்தான். பிரியா பின்னால் அமர்ந்தாள்.

“ஷால் வீ கோ டூ யுவர் ஃப்பேவரட் பிளேஸ் பிரியா...?”

“ம்‌ம்‌ம்...?” வேறு எங்கோ தனது கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தவள் மாறனின் கேள்வி புரியாமல் வண்டியின் பின் சீட்டிலிருந்து முன்னே இருந்த கண்ணாடி வழியே அவன் முகம்பார்த்து விழித்தாள்.

“அதாங்க... பீச்...! அதுதான உங்க ஃப்பேவரட் பிளேஸ்? கடல் காத்து, அந்த மண்ணு, பிளஸ் இன்னும் இருட்டல... சீக்கிரம் ரூம்க்கு போய் என்ன பண்ண போறீங்க... ஷால் வீ?” எதுவும் நடக்காதது போல சாதாரணமாகவும் அதே சமயத்தில் சிறிது உற்சாகத்தோடும் மாறனின் கேள்வி இருந்தது. பிரியாவின் உதட்டில் லேசான சிரிப்பு தவழ்ந்தது.

“ஸூர் மாறன்... ஸூர்... பட் நாட் டுடே... மே பீ சம் அதர் டே...” என்று பிரியா சொன்னாள்.

     அவள் குரலில் இருந்த அமைதியை மாறன் உணர்ந்தான். அந்த அமைதியின் அழகு அவனுக்கு பிடித்திருந்தது. தன் மனதையும் அமைதிப்படுத்திக்கொண்டு கோவில் கோபுரத்தை பார்த்து லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.  

முற்றும்..! 

<---Previous Post

Feb Series 2022 முற்றும்...!

__________________________________________

காதல் சிறுகதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 

__________________________________________

இப்பதிவு பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments