04. சந்திக்க வருகிறேன் - காதல் கடிதங்கள் 2022


 02/02/2022

------

என்னவளான சகிக்கு,

                 வருகிறேன் நான். கவலை வேண்டாம்.

     சென்ற கடிதத்தில் நீ குறிப்பிட்டிருந்த ஒவ்வொரு வார்த்தைகளில் அடங்கியிருந்த வலிகளையும் வேதனைகளையும் நான் நன்கு புரிந்துக்கொண்டேன். இனியும் நீ அங்கு கவலையோடு காத்திருக்க வேண்டாம் சகி.

     என் பெற்றவர்களோடு நான் பேசிவிட்டேன். உன் வீட்டில் வெடித்ததுபோல என் வீட்டிலும் பயங்கரமாகவே வெடித்தது நம் செய்தி. அம்மா அழுதார்கள், அப்பா மனம் கோபத்தின் உச்சியில் இருந்து இன்னும் இறங்கவே இல்லை. தங்கை மட்டுமே நமக்கு பரிவாக பேசினாள். ஒரு வழியாக அவர்களை உங்கள் வீட்டில் வந்து பேச சம்மதிக்க வைத்துவிட்டேன். நீ மறு கடித்தம் எழுதும்வரை காத்திருக்க நேரமில்லை. சீக்கிரமே வருகிறேன் சகி.

     உன் வீட்டில் நடப்பது ஒன்றும் நாம் எதிர்பாராதது அல்ல. உன்னைப் பெற்று வளர்த்தவர்கள் அப்படிதான் இருப்பார்கள். நம்மை அவர்கள் உடனே ஏற்கவில்லை என்பதனால் அவர்களை வெறுத்துவிடாதே. உன் எதிர்காலத்தை குறித்த பயம்தான் அவர்களை அப்படியெல்லாம் பேசவைக்கிறது.  அது பாசத்தின் வெளிப்பாடு. இதை நீயே நன்கு உணர்வாய். பின் எதற்காக அத்தனை சோகம்? மனதை அமைதிப்படுத்து. நீ கோபம்கொள்ள இன்னும் நிறைய காரணங்கள் வந்தாலும் எனக்காக அதை ஒதுக்கி ஓரமாக வை. நமக்காக அதை செய். இது வெறும் புயலின் முதல் கட்டமே. நடுபகுதிக்கு செல்ல செல்ல வார்தைகளின் வேகமும் நடத்தைகளின் ஆவேசமும் இன்னும் பல மடங்கு அதிகமாகும். முதல் கட்டத்திலேயே நீ மூச்சுத்திணருகிறது என்றால், போக போக எப்படி சமாளிப்பாய்?

     கவலை வேண்டாம் சகி. ஏனெனில் உன்னோடு நான் இருப்பேன். நீ எதையும் தனியாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் இதை ஒன்றாக கடப்போம். எதுவும் கடந்து போகும். கை கோர்த்து நாம் இந்த வாழ்க்கை போராட்டத்தில் வெற்றிகொள்வோம்.

கலங்காதே...! நான் உன்னிடம் உனக்காக விரைந்து வருகிறேன்...!

என்றும் உன்னவனான

நான்...


<---Previous Post       ------      Next Post--->

__________________________________________

இது என் புது முயற்சி. 

பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள். 

இது என் அன்பு வேண்டுகோள்...!  

__________________________________________

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


காதல் கடிதம் எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 

நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments