09. பொங்கல் வாழ்த்துகள் - காதல் கடிதங்கள் 2022


11/01/2022

------

 என்னவருக்கு,

     இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

     இந்த கடிதம் உங்கள் கையில் பொங்கலுக்கு ஒரு நாள் முன்பு, போகி பண்டிகையன்று கிடைக்கும் என்று நம்புகிறேன். வருடத்தின் கடைசி நாளன்று என் கடித்தத்தோடும், என் உணர்வுகளோடும் முடிந்து புது வருடம் என் நினைவுகளோடே தொடங்கட்டும். அடுத்த வருடம் முடிந்தால் ஒன்றாக கொண்டாடுவோம் இல்லையேல் அதற்கு அடுத்த வருடம் நிச்சயமாய் ஒன்றாகத்தான் கொண்டாடுவோம்.

     ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி’ என்று சொல்வார்கள். நீங்கள் யாரென்றே அறியாத நாட்கள் பழையதாகவும், உங்களை கண்ட நாள் முதல் என்னை நானே புதிதாக உணர்வதாகவும் நினைத்து இந்த போகியை நான் கொண்டாட போகிறேன். முடிந்தால் வந்து நேரில் சந்தியுங்கள். நாம் முதல் முதலில் சந்தித்த கோவிலுக்கு பொங்கல் அன்று குடும்பதோடு செல்வோம். உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.

     சென்ற கடிததில் ஆசைகளைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். மிகவும் அழகாக உங்கள் ஆசைகளை எழுதியிருக்கிரீர்கள். எனக்கும் அப்படி எழுத ஆசை. சொல்லித்தருவீர்களா?

     ஒன்றிணைந்து செய்வதற்கு இத்தனை காரியங்கள் உள்ளதா...? என்ற வியப்பு ஏற்பட்டது உங்கள் கடிதத்திலிருந்து. அத்தனையும் நிச்சயமாய் நாம் செய்வோம். ஒன்றாக இந்த உலகத்தின்‌ பாடங்களை படிப்போம். கூடவே உங்கள் பயங்களையும் நான் ரசித்தேன். அதுவும் மிக அழகாக இருக்கிறது.  உண்மையில் ஆண்களுக்கு இத்தனை ஆழமான பயங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கவலை வேண்டாம், அவற்றையும் ஒன்றாகவே கடப்போம்.

     உங்கள் ஒவ்வொரு செய்கைகளும் என்னை ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்த்துகிறது. இத்தனை தெளிவான சிந்தனைகள் எப்படி உங்களுக்கு வருகிறது? இன்னும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் என்னிடம் கொடுக்க என்ன இருக்கிறது என்ற பயமும் வருகிறது.

     கேள்வி பதில் செல்வோமா?

     உங்கள் ஆசை பட்டியல் அனைத்திற்கும் என் ஒரே பதில் ‘ஒன்றிணைந்து அத்தனையும் செய்வோம்’ என்பதுதான். சம்மதம் தானே?

     எனக்கும் நிறைய ஆசைகள் இருக்கிறது. நீங்கள் எனக்கு அவற்றை அழகாய் எப்படி எழுதவேண்டும் என்று சொல்லித்தந்தபிறகு கண்டிப்பாக கடிதத்தில் எழுதுகிறேன்.

     விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நால்வாழ்த்துகள்.

உங்களிடம் படிக்க ஆசைகொண்ட

உங்கள் சகி!

<---Previous Post      ------      Next Post--->

__________________________________________

இது என் புது முயற்சி. 

பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள். 

இது என் அன்பு வேண்டுகோள்...!  

__________________________________________

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


காதல் கடிதம் எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 

நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments