01. முற்றுப்புள்ளி – முடிவு - காதல் கடிதங்கள் 2022


14/02/2022

------

அன்பு (என்ன குறிப்பிடுவது என்று தெரியவில்லை..!)

         நலம் என்று கூற மனம் விழையவில்லை. உங்கள் நலன் பற்றி நான் நன்கு அறிவேன். எனவே அதை பற்றி விசாரிக்க மனம் விரும்பவில்லை.

      இது மூன்றாவது அஞ்சல் தாள். முதல் இரண்டில் நான் எழுதிய வார்த்தைகள் எனக்கே தெளிவாக இல்லை. கிழித்து கடாசிவிட்டேன் குப்பையில். கோளாறு கையெழுத்து அல்ல, இந்த சூழலில் தள்ளிய நம் இருவரின் தலையெழுத்து. எக்கச்சக்க கேள்விகளும் குழப்பங்களும் கடந்த சில நாட்களில் என்னால் நீங்கள் சந்திக்க நேர்ந்தது. அதற்கு என்னுடைய மன்னிப்பு. மன்னியுங்கள் (கடைசிமுறையாக). சூரியன் ஒளிபட்ட இந்த பூமிபோல இருளில் இருந்து நீங்கள் மீண்டு ஒளியை அடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கேனும் நான் உரியவளா என்ற கேள்விக்கு பதில், ‘இல்லை’ என்றெண்ணும்போது வார்த்தைகளில் அடங்கா வேதனையை என் மனம் அடைகிறது. ஆனால் என்ன செய்ய? எல்லாம் விதி என்று சொல்லி விதியின் மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கவே நான் திட்டமிட்டிருக்கிறேன், நமது இந்த நிலைக்கு முற்றுப்‘புள்ளி’ வைத்து கதையை முடிக்க, நீங்கள் சொல்லியபடியே. அத்தனை நினைவுகளுக்கும் நிகழ்காலத்தில் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.  

     உண்மையில் இக்காலத்தில் தொடர்புகொள்ள கடிதங்கள் ஒரு நல்ல வழியே. என்ன… ‘உங்களுக்காக நான் எழுதும் வார்த்தைகளையும் அதன் உணர்ச்சிகளையும் இந்த காகிதமும் பேனா முனையுமே உங்களைவிட நன்கு அறியுமோ?’ என்ற கேள்வி மட்டும் அவ்வபோது மனதில் ஓடும். அப்படி அவைகள் அறிந்ததுனாலேதான் இத்தனை உணர்வுபூர்வமாய் உங்களை நானும் என்னை நீங்களும் புரிந்துகொள்ள உதவ முடிந்ததுபோல. புரிந்துக்கொண்டேன். கடைசி முறையாக இந்த கண்ணீரையும் உங்களிடத்தில் கொண்டு சேற்கும் என்ற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன்.

கண்ணீருடன் மன்னிப்பு வேண்டி,

உறவில்லா யாரோ ஒரு சகி

பி.கு: காத்திருப்பு இக்கடிதத்தோடு முடியட்டும். புதிய நாள் பிறக்கட்டும்.


Next Post--->

__________________________________________

Feb Series 2022 - ன் முதல் பதிவில் தலையும் வாலும் உங்களுக்கு புரியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது என் புது முயற்சி. 

பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள். 

இது என் அன்பு வேண்டுகோள்...!  

__________________________________________

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


காதல் கடிதம் எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 

நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments