16. இனி எல்லாம் சுகமே

 ஆஹா கல்யாணம் 

Previous Epi - 15. இதுவும் கடந்து போகும்

16.  இனி எல்லாம் சுகமே

“டேய் இங்க.. இந்த பக்கம் வாங்க”

     வருண் வழிநடத்திச்செல்ல, விஜயை தூக்கிக் கொண்டு, ஓடையின் அருகிலிருந்த பாதையற்ற வழியில் ECR சாலையின் ஓரத்திலேயே, இருட்டில், வெகுதூரம், மழையில், சேற்றில் இறங்கி, நண்பர்கள் அறுவரும் நடந்துக் கொண்டிருந்தனர். உடைந்து போன கூடாரம் ஒன்று அந்த ஆள் இல்லாத பகுதியில் கிடப்பதை பார்த்த வருண், அங்கே அனைவரையும் அழைத்தான்.

“பாத்து பத்திரமா அவன உக்கார வைங்க”

     நான்கு பக்கம் எந்த மறைப்பும் இல்லாமல், வெறும் கூரை மட்டும் போடப்பட்டிருந்த கூடாரத்தின் கீழே விஜயை அமரவைத்தனர். அதிக ரத்தம் சென்றுவிட்ட காரணத்தினால் மயங்கி விழுந்த விஜய்க்கு மருத்துவம் செய்ய விஷ்ணு முயன்றான். அந்த நடு நிசியில், காட்டுப்பகுதியின் நடுவில், மற்ற ஆபத்து எதுவும் வராமலிருக்க, மற்றவர்கள், சுற்றும் முற்றும் கவனமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“தாங்க் காட், பெரிய அடி இல்ல” விஜயின் காயத்தை பார்த்துவிட்டு விஷ்ணு அனைவரிடமும் சொன்னான்.

“அப்றம் ஏன்டா அவளோ ரத்தம் போச்சி?” ஒன்றும் புரியாமல் விக்னேஷ் கேட்க,

“கரெக்ட்டா முட்டிக்கு கீழ பின்னாடி கால்ல அடி பட்டுருக்கு.. நடந்தா, ஓடினா.. அந்த பிளேஸ்ல பிரஷர் ஜாஸ்தி ஆகும். ஸோ.. பிளட் லாஸ் ஆகிருக்கு.” என்று விஷ்ணு சொன்னான். 

“அந்த கால வச்சிக்கிட்டு தான் ஜம்ப் பண்ணி, டயர பன்சர் பண்ணானா?”

“ம்ம்ம்”

ஏ.கே., துப்பாக்கியால் சுட்டபோது இந்த அடி பட்டிருக்க வேண்டும் என்று அனைவரும் யூகித்தனர்.

“புல்லட் வூண்டா” வருண் அதை கேட்டு தெளிவுப் படுத்தினான்.

“ஆமா.. ஃப்பிலெஷ்ல தான் பட்டிருக்கு, நாட் எ பிக் டீல்”

     அனைவரும் பெருமூச்சி விட்டார்கள். பயம் கொஞ்சம் விலகியது. ஒரு இரவில் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்று நினைத்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நாளை கல்யாணம், இன்று காலை பொழுது இவ்வாறு தொடங்கியதை நினைத்து வருத்தப்படுவதா, இல்லை, இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை நினைத்து சந்தோஷப் படுவதா என்று புரியாமல் வருண் ஒரு பக்கம் நிற்க, அக்காவின் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று விஷ்ணு ஒருபுறம் வேண்டினான். தன் மனைவி யாழினியை பார்க்க வேண்டும், அவள் தோளில் சாய்ந்து இளைபார வேண்டும் என்று விக்ரம் எண்ணமிட்டான். தன் காதலி பிரியாவிடம், இந்த கதையை சொல்லும்போது, தன்னை ஹீரோவாக பாவித்து எப்படி சொல்வது என்று, மனதில் படம் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். தனக்கு ஏற்றவளாக வாழ்வில் மாற வேண்டும் என்பதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னைத்தானே வருத்திக்கொண்டு, நாளை தன்னை சந்திப்பதற்காக மட்டுமே வரும் மஹியை சந்திக்கும் அந்த நொடிக்காக விவேக் காத்துக்கொண்டிருந்தான். மழை நிற்கும் வரை அனைவரும், அந்தக் கூடாரத்தின் கீழ் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தனர்.

     அடிபட்ட இடத்தில் மருந்து போட்டு கட்டு போடப்பட்டிருந்தது. மருந்தின் எரிச்சல் தாங்க முடியாமல், விஜய் கண் விழித்தான். அப்போது இரவு இரண்டு நாற்பத்தைந்து மணி இருக்கும். அவன் லேசாக கண்விழித்துப் பார்க்க, அனைவரும் ஆளுக்கொரு திசையில் திரும்பி நின்று, தன்னை பாதுகாத்து கொண்டிருந்தனர். மழையின் வேகம் கொஞ்சம் குறைந்தது.

“அண்ணா.. ஆர் யு ஓகே?” பாசமாக விஷ்ணு கேட்டான்.

“ம்ம்ம்..” தலையை மட்டும் அசைத்தவனுக்கு, லேசாக தலை சுற்றியது.

     அனைவரும் அவன் அருகில் வந்தார்கள்.

“இஸ் ஹி ஃபைன்?” விவேக் கேட்டான்.

“இன்னும் கொஞ்ச நேரம் டைம் கொடுக்கணும்”

“மச்சி.. நியர் பை போலீஸ் ஸ்டேஷன் இருக்கான்னு பாக்கணும்.. கிளம்பலாமா?” வருண் சொல்ல,

“கண்டிப்பா அவங்க இன்னும் நம்மள தேடிட்டு தான் இருப்பாங்க.. ஸோ ரோட் ஸைட் போறது சேஃப் இல்ல, இப்டியே வழி கண்டுப்பிடிச்சி தான் போகணும்” விக்ரம் பேசினான்.

விஜய் அனைவரையும் மாறி மாறி பார்த்தான். குழப்பத்தில் இருப்பதுபோல தெரிந்தது.

“நாம எங்க இருக்கோம்?” என்று தட்டுத் தடுமாறி கேட்டான்.

“அய்யய்யோ.. அவன் பழச எல்லாம் மறந்துட்டான் போல.. டேய் டாக்டர் மகனே.. கால்ல தான அடிபட்டிருக்குனு சொன்ன.. இவன் என்ன தலைல அடிபட்டவன் மாதிரி பேசறான்?” விக்னேஷ் பதறினான்.

“ECR-ல தான் இருக்கோமா இல்ல வேற எங்கயாச்சும் வந்துட்டோமா?” விஜய் லேசாக சிரித்தபடி கேட்டான்.

“அப்பாடா.. நல்லவேள எதையும் மறக்கல.. ஏன் டா.. ஒரு புல்லட்ல இருந்து எஸ்கேப் ஆக தெரியல... நீ எல்லாம் என்ன வாண்டெர்லஸ்ட், வெறும் வூண்டெர்லஸ்ட்தான்”

     அனைவரும் சிரித்தனர். விஜய் விக்னேஷை கட்டியணைத்தான். ஒருவர் பின் ஒருவராக, அனைவரும் அந்த அணைப்பில் ஐக்கியமானர்கள். ஓரமாக நின்றுக் கொண்டிருந்த விஷ்ணு மட்டும்,

“கைஸ்..?” என்று குரல் கொடுக்க “நீயும் வாடா” என்று விக்னேஷ் அழைத்தான்.

“அது இல்ல..! அங்க பாருங்க” தூரத்தில் நான்குபேர் வருவதை கைகாட்டியபடி விஷ்ணு நின்றான்.

பங்களாவிலிருந்து வெளியே வந்து, மரங்கள் நிறைந்த வழியே, ECR சாலையை அடைந்த ஏ.கே., மற்றும் அவர் அடியாட்கள், சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்த்ரா ஸ்கார்பியோவை நோக்கி வேகமாக சென்றனர்.

“எப்படி சார், கரெக்ட்டா சொன்னிங்க” வேலு கேட்டார். 

“சுட்டவனுக்கு தெரியாதா புல்லட் எங்க படும்னு?”

“‘கையால அடிச்சி கொல்லனும்னு’ சொன்னீங்களே, அத்துக்காக தான் புல்லட்ட தலைல இறக்கமா விட்டீங்களா?”

“ம்ம்..”

     கீழே இறங்கினார்கள். சாலையில் ரத்தக் கறை இருந்தது. வண்டியின் ஓட்டுனர் சீட்டு முழுக்க ரத்தம் இருந்தது. மழை பெய்ய தொடங்கியவுடன் அந்த ரத்தம் ஓடையின் ஓரமாக வழிந்து சென்றது. அதை பார்த்த ஏ.கே., இவர்கள் காட்டு வழியாக தான் சென்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

“ரெண்டுபேர் இந்த வழியா உள்ள போய் தேடுங்க, வேலு நீ என் கூட வா, நீ உங்க வண்டிய எடுத்துட்டு பின்னாடியே வா”

படபடவென்று திட்டம் வகுத்து ஆளுக்கொரு வேலை கொடுத்தார். இரண்டு பேர் அந்த ஓடையின் அருகிலிருந்த வழியில், இருட்டில், காட்டுக்குள் இறங்கினார்கள். ஏ.கே., தனது வண்டிக்கு திரும்பும்போது, ஹைவே பாட்ரோல் வண்டி அந்தப் பக்கம் வந்தது. இரண்டு போலீஸ் ஏட்டுகள் கீழே இறங்கி வந்து இவர்களை விசாரித்தார்கள்.

“என்னப்பா என்ன பிரச்சனை, மூணு வண்டியும் ஏன் நிக்குது”

“வண்டி பஞ்சர் சார், என்ன பண்றதுனு ஒன்னும் புரியல.. ஐயா தான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்” ஏட்டு கேட்ட கேள்விக்கு பவ்யமாக வேலு பதில் சொன்னார்.

“உங்களுக்கு என்ன சார்?” அருகில் இருந்த ஏ.கே.,வை நோக்கி வினவினார்.

“ஐயா, அவரு இந்த மழைல எங்களுக்கு உதவி பண்றதுக்காக நிறுத்தி என்ன ஏதுனு விசாரிச்சாருங்க. நீங்க வந்துட்டீங்கல்ல.. இனிமே எங்களுக்கு என்ன கவலை.. அவரை கிளம்ப சொல்லிடலாங்கையா”

ஒரு ஏட்டு, விசாரித்துக்கொண்டிருக்க, மற்றவர், வண்டிகளை சோதித்தார். ஒரு வண்டியின் கண்ணாடி உடைந்திருப்பதையும், இன்னொரு வண்டியில் ரத்த வாடை அடிப்பதையும், ரோட்டில் ரத்தம் வழிந்து ஓடிய சுவடையும் கவனித்தார். நேராக சென்று, உயரதிகாரியிடம் தெரிவித்தார். அவர் இறங்கி வந்து,

“நீங்க யாரு?” ஏ.கே.,வை பார்த்து கேட்டார்.

“ஹலோ சார், ஹெல்புக்காக ஸ்டாப் பண்ணேன்.. நவ் ஐ வில் லீவ்” பொறுமையாக ஏ.கே., சொன்னார்.

“ஹொ..! ஹெல்புக்காக தான், ரெண்டு பேரை இந்த காட்டுக்குள்ள அனுப்புனீங்களோ?” என்று மிரட்டும் தொனியில் விசாரித்தவர் ஏ.கே.,வின் காரை பார்த்தார். பார்த்தவுடன் தொனி மாறியது.

“சார்..! அருண் குமார்..! சாரி..! மிஸ்டர் ஏ.கே., தான நீங்க..?” ஆச்சரியமாக கேட்டார்.

“எஸ்” குழப்பத்தோடு பதில் வந்தது.

“அட.. உங்கள பத்தி நல்லா தெரியும் சார்.. எவ்ளோ பெரிய சோஷியல் ஆக்ட்டிவிஸ்ட் நீங்க.. என்ன சார் நீங்க மழைல நனையலாமா? போங்க சார்.. கிளம்புங்க சார்”  

ஏ.கே.,வின் மற்றொரு முகத்திரைக்கு கிடைத்த மரியாதை அது என்று புரிந்துக்கொண்டார். அதை சாதகமாக பயன்படுத்த முடிவு செய்தார்.

“ஆக்ச்சுவலி சார், இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். இவங்களோட காரை ஒரு ஆறு பசங்க சேர்ந்து, குடி போதைல, திருடிட்டு வந்து, இந்த மாதிரி பண்ணீட்டு போயிட்டாங்க. அதுல யாருக்கோ கண்டிப்பா அடிபட்டிருக்கும் போல.. நாங்க தொரத்திட்டு வந்த பயத்துல காரை இங்க விட்டுட்டு.. இந்த பக்கம் ஓடிட்டாங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்”

“அவ்ளோ தான சார்.. கண்டிப்பா பண்ணிடலாம்.. கணேசன் சார் இப்போ ரெண்டுபேர் போனாங்கல்ல அவங்களோட சேர்ந்து நீங்க ரெண்டுபேர் போங்க, ஆளுங்கள புடிச்சி நம்ம ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க சார்”

     கணேசன் சார், தன்னோடு மற்றொரு ஏட்டை அழைத்துக்கொண்டு, ஏ.கே.,வின் அடியாட்கள் இருவரோடு, ஹைவே ஓரமிருக்கும் வழியில்லாத பாதையில் இறங்கினார்.

“நீங்க வாங்க சார், நம்ம ஸ்டேஷன் 2 கிலோமீட்டர் தான், அங்க வெயிட் பண்ணுவோம், பசங்க வந்த ஒடனே ஒரு கை பாத்துடலாம்”

     வீரவசனம் பேசியபடி, ஏ.கே.,வை அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரிலேயே போலீஸ் ஸ்டேஷன் வரச்சொன்னர். மற்ற இரண்டு வண்டிகளையும் ட்டோ செய்து ஸ்டேஷனில் கொண்டுவந்து சேர்த்தார். வெகுநேரம் ஆகியும் எந்த தகவலும் இல்லை.

     அந்த வழியில்லா பாதையிலே, இருட்டில், மழையில், சேற்றில் நடந்தும், ஓடியும், கடைசியாக ஒரு சிதைந்த கூடாரத்தின் கீழே ஆறு இளைஞர்களை கண்டுப்பிடித்தனர். தூரத்திலிருந்து பார்க்க அவர்கள் சண்டைக்கு ஆயத்தமாவதுபோல தெரிந்தது.

“கைஸ்.. தாங்க்யு ஸோ மச்.. பட் நான் சொன்ன மாதிரி.. இது என்னோட ஃபைட்.. நீங்க எல்லாம் கிளம்புங்க.. போலீஸ் ஸ்டேஷன் இன்னும் ஒரு ஹாஃப் கிலோமீட்டர்ல இருக்கும்.. அங்க மிஸ்டர் பீட்டர் இருப்பாரு, இன்ஸ்பெக்டர். அவர்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லுங்க.. ஹி வில் சென்ட் யு பீப்பிள் ஹோம்..

வருண்.. ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் வெட்டிங்.. ஹோப் ஐ வில் பீ தேர்!”

     உணர்ச்சிவசப்பட்டு, விஜய் வசனம் பேசிக்கொண்டிருக்க, அவன் சொல்லியதற்கு எல்லாம் ‘ம்ம்ம்’ கொட்டியபடி, மற்ற ஐவரும் சண்டைக்கக்கு ஆயத்தமானர்கள்.

“டேய்.. சொன்னா புரியாதா உங்களுக்கு.. இது பொண்ணு பிரச்சனைடா.. கொன்னு போற்றுவானுங்க.. போய் தொலைங்க டா” கோபத்தில் கத்தினான்.

     இருட்டில், அந்த நான்கு உருவங்கள் நெருங்கி வருவது தெரிந்தது. ஐவரும் தன்னை விட்டு விலக மாட்டார்கள் என்று விஜய் உணர்ந்தான். பயம் காட்டி அவர்களை துரத்த முயற்சித்தான்.

“சரி டா.. நீங்க போக போறது இல்ல.. என் கூட சேர்ந்து சாகனும்னு முடிவு பண்ணிடீங்க. ஏன் சாகுரோம்னு தெரிஞ்சிக்கோங்க..

நம்ம காலேஜ் படிச்ச அப்போ ஒரு கேங்க்ஸ்டெரோட பொண்ணு என்ன லவ் பண்ணா. அந்த கேங்க்ஸ்டெர் தான் ஏ.கே., இன்ஸ்பெக்டர் பீட்டர் அப்போ ஒரு கேஸ் ஹாண்டில் பண்ணிட்டு இருந்தாரு. என்னோட ஹெல்ப் கேட்டாங்க. அது ஏ.கே.,வோட கேஸ். அவரோட பொண்ண லவ் பண்ற மாதிரி நடிச்சி அவங்க அப்பா பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணனும். அவ கூட பழகுன அப்றம் தான் தெரியும் அவ ரொம்ப இன்னொஸெண்ட்ன்னு. அண்ட் ஐ ஆக்ஸிடெண்ட்லி ஃபெல் இன் லவ்.

ஸோ அவ அப்பா பத்தி அவகிட்ட எல்லாமே சொல்லிட்டேன். என்ன பத்தியும் சொல்லிட்டேன். வீ ப்ரோக் அப் அண்ட் ஏ.கே.,ன்னு ஒரு கேங்க்ஸ்டெர் இருந்ததுக்கான அடையாளமே இல்லாம போச்சி. அன்டில் எஸ்டர்டே நைட், ஐ டோன்ட் நோ எனிதிங் அபௌட் ஹிஸ் ரீசண்ட் ஆக்ட்டிவிட்டீஸ்.

இந்த ரெண்டு வருஷத்துல எவ்ளவோ மாறியும், அருண் குமார் மட்டும் மாறவே இல்ல. ஹி வாஸ் எ ‘ஜான் விக்’ ஆஃப் சவுத் இந்தியா. போலீஸ் ரெகார்ட்ல கூட அப்படி தான் இருக்கும்.

அவர் மாற்றத்துக்கு ஒரே காரணம்..”

     மூச்சி முட்ட கதையை சொல்லி, கடைசியில் ஏதோ சொல்ல வந்தவன் எதையோ யோசித்தவண்ணம் பேச்சை நிறுத்தினான். தன் செல்ஃப்போனை எடுத்தான். இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தவன் பேச்சை நிறுத்தியதும், என்ன ஆயிற்று என்று தெரிந்துக்கொள்ள, விக்னேஷ் அவன் அருகில் வந்தான். விஜய் தனது செல்ஃப்போனில் ஏதோ டைப் செய்துக்கொண்டிருந்தான். அது என்ன என்று எட்டிப்பார்த்து, வாய் விட்டு சத்தமாக படித்தான்.

‘கால் யுவர் டாட்.. ஒரு நாய் சிம்பல்.. ஒரு பொம்மை துப்பாக்கி சிம்பல்.. பை மிஸ்டர் தோர்’

விக்னேஷ் படித்ததை கேட்ட அனைவரும் விஜயை உற்றுப் பார்த்தனர். விக்னேஷ் மட்டும் இத்தனை பொறுமையாக வந்த அந்த நான்கு உருவங்களை பார்த்தான். அந்த உருவங்கள் கண்ணுக்கு தெளிவாக புலப்பட ஆரம்பித்தது. முக்கியமாக ஒரு உருவம், விக்னேஷ் கண்ணுக்கு நன்றாக தெரிந்தது. அது தெரிந்த மகிழ்ச்சியில்,

“கணேசன் சார்..” என்று கத்திக்கொண்டே அவரிடம் ஓடினான்.

“நீங்களா டா” என்று கணேசன் சார் கேட்க, அவரை கட்டியணைத்து,

“நாங்களே தான் சார்.. வேற லெவல் சார் நீங்க” என்று சொல்லி, அவர் கண்ணத்தில் முத்தம் ஒன்றும் கொடுத்தான்.

“ச்சை..” விக்னேஷை தள்ளிவிட்ட கணேசன் சார் “ஏம்ப்பா.. உங்க வண்டியை திருடிட்டானுங்கன்னு சொன்னிங்க.. அந்த கருப்பு ஸ்கார்பியோ இந்த பசங்களோடதாச்சே..” என்று ஏ.கே.,வின் அடியாட்களை பார்த்து கேட்டார். இதற்குள், விக்னேஷ் தவிர, மற்ற ஐவரும், இவர்களை சூழ்ந்துக் கொண்டனர்.

“சார், இன்ஸ்பெக்டர் பீட்டர் கிட்ட பேசுனா எல்லாம் கிளியர் ஆகிடும்.. கேன் யு பிளீஸ் கால் ஹிம்.. ஐ திங்க் இன்னிக்கு நைட் டியூட்டி அவர் தான்”

விஜய் கேட்க, கணேசன் சார் அவனை மேலும் கீழும் பார்த்தார். இன்ஸ்பெக்டர் பீட்டர் மீது இருந்த மரியாதை காரணமாக அவருக்கு கால் செய்தார்.

ஸ்டேஷனில், இரண்டு கார்களும் ட்டோ செய்யப்பட்டு கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தது. வெகு நேரம் காத்திருந்த ஏ.கே.,

“யாரு இன்ஸ்பெக்டர்?” தன்னை அழைத்துவந்த அதிகாரியிடம் கேட்டார்.

“நான் சப் இன்ஸ்பெக்டர் சார். என் நேம் பரத்”

“இன்ஸ்பெக்டர்?” என்று ஏ.கே., கேட்க, இன்ஸ்பெக்டர் எதேச்சையாக அவர் முன் வந்தார். அவர் முகத்தை பார்த்து,

“இன்ஸ்பெக்டர் பீட்டர்..?” என்று ஏ.கே., உதிர்த்த வார்த்தையில் ஒரு ஆச்சரியம் இருந்தது.

“மிஸ்டர் அருண்?.. என்ன இந்த டைம்ல?”  முகத்தில் அதிர்ச்சியை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் இருக்க இன்ஸ்பெக்டர் பீட்டர் முயன்றார்.

“ஒண்ணுமில்ல சார், இவரோட நண்பர் வண்டியை குடிகார பசங்க திருட ட்ரை பண்ணீர்க்காங்க” என்று சொல்லி வேலுவை கை காட்டினார் “நம்ம ஆளுங்கள அனுப்பி, ஃபாலோ பண்ண சொல்லிருக்கேன் சார், கண்டிப்பா புடிச்சிடுவாங்க.. வந்து உங்கள மீட் பண்ணா நல்லா இருக்கும்னு கூட்டிட்டு வந்தேன்”

     இளித்த பற்களோடு பரத் சொல்ல,

‘சொல்லாத வேலை எல்லாம் கரெக்டா பண்ணு’ என்று பீட்டர் முணுமுணுத்தார்.

“அது வேலு தான?”

“ம்ம்ம்..” தலை மட்டும் அசைத்தார்.

சட்டென்று ஒரே நேரத்தில் இருவருடைய திறன்பேசியும் ஒளித்தது. இருவரும் சரியாக ஒரு நிமிடம் தான் பேசினார்கள். இன்ஸ்பெக்டரின் முகத்தில் சிரிப்பும், ஏ.கே.,வின் முகத்தில் கோபமும், வெறுப்பும் கலந்து காணப்பட்டது.

“ஐ நீட் டூ லீவ்” ஏ.கே., பல்லை கடித்துக்கொண்டு சொன்னார்.

“ஐ ந்நோ.. நைஸ் மீட்டிங் யு ஆஃப்டர் இயர்ஸ் மிஸ்டர் அருண்” என்று சொல்லி கை கொடுத்தார்.

“தி ஆப்போஸிட்” என்று சொல்லி, கை குழுக்கிவிட்டு, ஏ.கே., தனது ரோல்ஸ் ராய்ஸை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அருண் தாபா நோக்கி விரைந்தார்.

     அடுத்த பத்து நிமிடத்தில் போலீஸ் ஜீப்பில் வருண் மற்றும் அவனது நண்பர்கள், அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தனர்.

“இனிமே எந்த பிரச்சனையும் இல்ல” சொல்லிவிட்டு விஜய் மயங்கி விழுந்தான்.

அதிகமாக ரத்தம் சென்றதால், மீண்டும் சுயநினைவை இழந்தான். அவனை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மஹிந்த்ரா ஸ்கார்பியோவின் டயர்கள் பழுதுபார்க்கப்பட்டு, வாட்டர் சர்வீஸ் செய்யப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மாலை ஐந்து மணியளவில், காலில் கட்டோடு விஜய் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டன். இன்ஸ்பெக்டர் பீட்டருக்கு நன்றி சொல்லிவிட்டு, வேக வேகமாக அங்கிருந்து கிளம்பி ரிசப்ஷன் மண்டபத்திற்கு சென்றனர்.


தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 17 – ஆஹா கல்யாணம்


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி


Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 – காதல் பயணம்

Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 – சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல் 

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்

Episode 16 – இனி எல்லாம் சுகமே

Episode 17 – ஆஹா கல்யாணம்


__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments