03. ரத்தின வியாபாரி

ஆஹா கல்யாணம் 

Previous Epi - 02 - கல்யாண வீடு 

­03. ரத்தின வியாபாரி

ஒரு மிதவெப்ப நண்பகல் பொழுதினில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த பாண்டுரங்கன் செல் ஃபோன் அலறியதன் காரணமாக கண் விழித்தார். நிதானமாக எழுத்து தனது படுக்கையிலேயே கிழக்குப் பார்த்து அமர்ந்து நன்கு மூச்சை இழுத்து விட்டார். மனம் தெளிவாகும் வரையிலும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்து பின்னர் நிதானமாக தனது காலை கடன்களை முடித்தார். இத்தனை நேரமும் அலறிக் கொண்டிருந்த செல் ஃபோனுக்கு ஒருவழியாக ஆதரவளிக்க முன்வந்தார்.

வயது ஐம்பத்தி ஆறு. குடும்பம் என்று எதுவும் இல்லை. இளம் வயதிலேயே ‘எளிய முறையில் பணம்’ என்னும் சூட்சுமத்தை நன்கு அறிந்தவர் என்பதால் உலகெங்கும் பயணம். உலகில் மனிதனின் கால் பட்ட அத்தனை தேசங்களுக்கும் சென்றாகிவிட்டது. வித விதமான மனிதர்களை வித விதமான மனநிலையில் சந்தித்தாகிவிட்டது. ஒரு நாள் என்பது எவன் கட்டளையுமின்றி நாமாக ஆசைப்பட்டு தொடங்கவேண்டும். நம் விருப்பத்தின்படியே அந்நாள் அமைய வேண்டும். எவனோ கண்டுப்பிடித்த ஃபோனின் ஓசைக்கு தன்னால் நர்த்தனம் ஆட முடியாது என்ற கொள்கையினால், அத்தனை நேரம் அந்த செல் ஃபோனை கண்டுக்கொள்ளாமல், தனக்கு தேவை என்றபோது கையில் எடுத்தார்.

 தவறவிட்ட அழைப்புகளை வரிசையாக பார்த்துக்கொண்டு வந்தவரின் முகத்தில் சட்டென்று ஆச்சரிய ரேகை படர்விட்டது. கண்கள் விரிந்தன, இதய துடிப்பு லேசாக அதிகரிப்பதை உணர முடிந்தது. நெற்றி வேர்க்கத் தொடங்கியது. யாரோ ஒரு நபரின் அழைப்பை தவற விட்டதை நினைத்து இவை அனைத்தும் நிகழவில்லை. அந்த நபர்.. ஏன்..? எதற்காக..? அதுவும் காலையிலேயே தனக்கு ஃபோன் செய்ய வேண்டும்..? என்ற பயம் கலந்த ஆச்சரியத்தில் நிகழ்ந்தது. தன்னையறியாமலேயே அந்த நபருக்கு கால்  செய்தார்.

“ஹலோ மிஸ்டர் ஏ.கே! வாட் எ சர்ப்ரைஸ்! ஹவ் ஆர் யூ?”

“ஹலோ மிஸ்டர் பாண்டு, ஐ எம் குட். வாட் எபெளட் யூ?”

“உங்கள மாதிரி பெரிய ஆட்கள் புண்ணியத்துல நல்லா இருக்கேன். சொல்லுங்க ஏ.கே.., என்ன விஷயம்? அதிசயமா பெர்சனல் நம்பர்ல இருந்து கால் பண்ணிருக்கீங்க?”

“நீங்கதான பாண்டு இப்போ ‘டாக் ஆஃப் தி டவுன்’ அதான் ஒரு ஹலோ சொல்லலாம்னு கால் பண்ணேன்” 

        ஏ.கே. இதை சொல்லியதும் பாண்டுவின் முகம் மேலும் வாடியது.

“ஆக்ச்சுவலி ஏ.கே.! தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்க இப்போ இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் இன்வால்வ் ஆகுறது இல்லனு கேள்விப்பட்டனே..!”

“ஹாஹாஹா.. எஸ் பாண்டு, ஐ காட் ரிட்டையர்ட்.. பட் திஸ் இஸ் நாட் ப்ரொஃபஷ்னல், கம்ப்ளீட்லி பெர்சனல்”

“ஹோ..! ஓகே ஏ.கே. சொல்லுங்க.. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?” 

“உங்களோட ரீசண்ட் ட்ரிப் பத்தியும்.. அதுல நீங்க பண்ணின பர்சேஸ் பத்தியும் கேள்விப்பட்டேன். ஸோ ஐ தாட் ஐ எம் யுவர் பெர்ஃபெக்ட் கிளையிண்ட்”

பாண்டுவின் சூட்சுமம், தனது பல நாட்டு நட்புறவுகளை பயன்படுத்தி கடத்தல் பொருட்களை வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் நம்பிக்கையுடைய பணக்காரர்களுக்கு விற்பது. இதில் அபாயமும் அதிகம் லாபமும் அதிகம். பாண்டுரங்கன் என்பவன் ஒரு நகை வியாபாரி என்பது சமுதாய தோற்றம். அதன் பின்னால் கடத்தல்காரன் என்னும் தோற்றம் இருப்பது மிக சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த சிலரில் ஏ.கே., மிக முக்கியமான மனிதர்.

ஏ.கே. தமிழகத்தின் மிக முக்கிய புள்ளி. மக்களின் மத்தியில் தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் போன்ற பெயர் கொண்ட ஏ.கே., பாண்டுரங்கன் போலவே சமுதாயம் அறியாத மற்றொரு தோற்றமும் கொண்டவர். ஒரு மினி மாஃப்பியா கும்பலை தலைமை தாங்கி கிட்டதிட்ட பத்து ஆண்டுகள் அண்டர்கிரவுண்ட் ராஜாவாக வாழ்ந்தவர். தனதுச் செல்ல மகளின் வேண்டுகோளுக்கு இணங்கி அரச பட்டத்தை விடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரி தொழிலதிபராகவும் சமூக ஆர்வலராகவும் மட்டும் வாழ்ந்துவருகிறார். அந்த பத்து ஆண்டுகளின் விட்டக்கொறை தொட்டக்கொறை எதுவும் தனது ரிட்டையர்மெண்ட் வாழ்க்கையை பாதிக்க கூடாது என்பதற்காக நம்பிக்கைக்குறிய சில அடியாட்களை மட்டும் எப்போதும் தன்னுடன் வைத்திருந்தார்.

இந்த இருமுகங்களும் தெரிந்த அனைவரின் மனதிலும் ‘ஏ.கே.’ என்ற பெயருக்கு இன்றும் பயம் உண்டு. ஹாலிவுட் ‘ஜான் விக்’  போன்றவர் என்றும் சிலர் ஏ.கே.-வை புகழ்வதுண்டு. தன்னை சுற்றி அடியாட்கள் இருப்பதால் அவர் பலசாலியல்ல, உடலின் உறுதி மனதின் திடம் மற்றும் புத்தியின் கூர்மை இவைகளே ஏ.கே.-வின் மீது மதிப்பும் பயமும் இன்று வரை குறையாததன் காரணங்கள்.

பாண்டுரங்கனை பொறுத்தவரை தன் வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களில்  ஏ.கே. என்பவர் மிக உண்மையான மற்றும் நாணயமான மனிதர். உண்மைக்கும் நாணயத்துக்கும் சிறிதும் சம்மந்தம் இல்லாத தன்னுடைய வாழ்க்கையில் இப்படிப் பட்ட மனிதரோடு பயணிக்க பாண்டு விரும்பவில்லை. ஏ.கே., ஒரு அணுகுண்டு போல, தவறான பட்டனை அழுத்தினால் அழுத்தியவர் உரு தெரியாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

“ஹலோ பாண்டு.. லைன்ல இருக்கீங்களா?”

“எ..ஸ்.. எஸ்.. ஏ.கே.,”

“ஸோ.. ஷல் வீ டாக் எபௌட் தி ரேட்?”

“ஏ.கே., என் கிட்ட இப்போ இருக்றது டீப் கட், கலர் – D அண்ட் VVS2 க்லாரிட்டி.. ”

“பாண்டு வெயிட்! ஐ நோ ஆல் தீஸ் டீடெயில்ஸ். ஐ ஆல்சோ நோ நீங்க ஒன்-சி மார்க்கெட்ல சொல்லிருக்கீங்க.. ஐ பிலீவ் இட்ஸ் ரைட் அமெளண்ட் ஃபார் தட் குவாலிடி ஆஃப் டைமண்ட்ஸ். ஐ எம் ஓகே டு ப்பே ஃபுல் கேஷ்.. இஸ் தட் ஃபைன் வித் யூ?”

தன்னிடம் இருக்கும் கடத்தல் டைமண்ட்டின் எல்லா விவரங்களையும் ஏ.கே., நிச்சயமாக அறிந்திருப்பார் என்பதை அவர் பெர்சனல் நம்பரிலிருந்து அழைத்தபோதே பாண்டு லேசாக சந்தேகித்தார். இப்போது அது உண்மையென்று தெரிந்து விட்டது. தவறான பட்டனை அழுத்திவிட கூடாது என்று பாண்டுவின் மனம் படபடக்கத் தொடங்கியது.

 “ஓகே பாண்டு.. டுடே இஸ் ஆல்சோ எ குட் டே.. நீங்க ஓகே சொன்னா.. ECR-ல இருக்க அருண் தாபா வந்துருங்க. 3 pm ஷார்ப். ஐ மைசெல்ஃப் வில் கம் அண்ட் கெட் இட்” என்று சொல்லி பதிலுக்கு காத்திருக்காமல் ஃபோன் லைன் துண்டிக்கப்பட்டது.

     பாண்டு கொஞ்சம் மனம் தெளிந்தார். ‘தன்னிடம் இருக்கும் டைமண்ட்களை எவரேனும் ஒருவர் வாங்கியே ஆக வேண்டும். அதை நாம் ஏ.கே-விற்கே விற்று விடலாம். பணம் நிச்சயமாக வந்து விடும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் குவாலிடி அண்ட் குவான்டிடியில் அவர் காம்பிரமைஸ் செய்துகொள்ள மாட்டார். சொன்ன நேரம் அங்கு இருக்க வேண்டும். இல்லையேல் சிக்கல் தான்’ என்று தனக்குத் தானே பேசி ஒரு முடிவுக்கு வந்தார்.

செல் ஃபோன் ஒலித்தது. பாண்டுரங்கன் சிரித்த முகத்தோடு அட்டெண்ட் செய்தார்.

“ஹலோ அங்கிள் எப்படி இருக்கீங்க” ஒரு வாலிப குரல் கேட்டது.

“நான் நல்லா இருக்கேன் வருண் தம்பி.. நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா சௌக்கியமா?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க.. நான் கேட்டது ரெடியா?”

“ஆல் ரெடி! நாளைக்கு ரிசப்ஷன் ஈவினிங் உங்க கைக்கு வரும்.. டோன்ட் வொர்ரி”

“இல்ல அங்கிள்..  இன்னிக்கு ஆப்டர்நூன் கிடைக்குமா?”

“ஏம்ப்பா? என் மேல நம்பிக்க இல்லயா?”

“ஐயோ..! அப்படீலாம் இல்ல பாண்டு அங்கிள்.. இன்னைக்கு ஆப்டர்நூன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வெளிய போறோம்.. பேச்சுலர்ஸ் பார்ட்டி.. அதான் இன்னிக்கே உங்க கிட்ட வாங்கிக்கலாம்னு நெனச்சேன்”

“சரி இப்போ வந்து வாங்கிக்கோ.. நான் வீட்ல தான் இருக்கேன்.. வீடு தெரியுமா?”

“இல்ல அங்கிள்.. வாட்சாப்ல லொக்கேஷன் ஷேர் பண்ணுங்க... ஒரு 2 pm போல வரட்டுமா?”

“2 pm கொஞ்சம் கஷ்டம் தம்பி.. நா ECR வரைக்கும் போகணும்.. ஒரு ஸ்மால் கமிட்மெண்ட்”

“நாங்களும் ECR வழியா தான் போவோம்.. ECR-ல எங்க?”

“அருண் தாபா”

“கல்பாக்கமா?”

“எஸ்.. எஸ்..”

“ஓகே அங்கிள்.. ஐ வில் பி தேர்.. டைம் கொஞ்சம் முன்ன பின்ன ஆனா ஓகே-ல?”

“நோ இஷ்யூஸ் தம்பி.. ஐ வில் வெயிட்.. டோன்ட் ஃபர்கெட் தி கேஷ்” என்று சொல்லி சிரித்தார்.

“டோன்ட் வொர்ரி அங்கிள்.. அப்போ அருண் தாபால மீட் பண்ணுவோம்.. பை..” ஃபோன் தூண்டிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் முடியும்வரை வேறு எவருடைய ஃபோன் கால்களையும் இனி எடுக்க வேண்டாம் என்ற சந்தோஷத்தில் பாண்டு அருண் தாபா செல்ல புறப்பட்டார்.


தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 04 - நட்பு சரித்திரம்


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி


Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 – காதல் பயணம்

Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 – சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல் 

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்


__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments