06. ரிசப்ஷன் மேடை

ஆஹா கல்யாணம் 

Previous Epi - 05 - மணமகள் வீடு 

06. ரிசப்ஷன் மேடை

வாழ்த்த வந்த சொந்தங்கள் அனைவரின் முன்னிலும் நிச்சயதார்த்தம் மிக சிறப்பாக முடிந்தது. தாய்மாமன்கள் சம்மதிக்க, உப்புத்தாம்பூலம் மாற்றி, நிச்சய புடவை கொடுத்து மாற்ற சொன்னார்கள். புடவையை வாங்கிய வினோ தன்னை யாரேனும் மணமகள் அறைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். தன் தோழிகளை தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்பதை உணர்ந்ததும் குடும்பத்தினர் எங்கே என்று தேடினாள். மணமகள் அறை கூட்டமாக இருப்பதை பார்த்தாள். அறையை நோக்கி வேகமாக நகர்ந்தாள். அப்படி நகர்ந்தவளை யாரோ கையை பிடித்து இழுத்து நிறுத்தினார்கள்.

“யு லுக் கார்ஜியஸ்.. அந்த சாரீல இன்னும் அழகா இருக்க போற.. லவ் யூ..!” கை பிடித்து இழுத்த வருண் காதல் வசனம் பேசினான்.

“ஐ எம் கோயிங் டு கில் யு” சிரித்த முகத்துடன் பல்லை கடித்துக்கொண்டு கோவமாக சொன்னாள் வினோ.

“ஸ்டில் யு லுக் கியூட்” என்று சொல்லி கண்ணடித்து அவள் கையை விடுவித்தான்.

     இப்போது உண்மையாகவே சிரித்த முகத்தோடும் காதல் களிப்போடும் மணமகள் அறை நோக்கி நடந்தாள். உள்ளே இருந்து ஒவ்வொரு அம்மாக்களாக வெளியே வந்தனர்.

“ஆண்டி.. நீங்க எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க?” விஜயின் அம்மாவை வரவேற்றாள் வினோ.

“நல்லா இருக்கேன் டா.. கங்க்ராட்ஸ்..!” வாழ்த்தினார்கள்.

“என்ன உள்ள கூட்டம்?” மணமகள் அறையை எட்டிப்பார்த்து கேட்டாள்.

“எல்லாம் உனக்கு தெரிஞ்ச விஷயம்தான்.. உன் நாத்தனார் செஞ்ச வேலைதான் எல்லாம்.. நீ உள்ள போ.. சீக்கிரம் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வா” என்று வினோவிடம் சொல்லிவிட்டு, “எல்லாம் வாங்க.. வினோ சாரீ மாத்தீட்டு வரட்டும்...” என்று உள்ளே இருந்த அனைவரையும் வெளியே கிளப்பினார்கள் விஜயின் அம்மா.

     வெளியே வந்த பெண்கள் அனைவரும் “கேடிங்கமா நீங்க”, “நல்லா வருவீங்க”, “வாழ்த்துகள்” என்று சொல்லி வினோவின் கண்ணத்தை கிள்ளியும், தலை தடவியும், கை குலுக்கியும் பாராட்டிவிட்டு சென்றார்கள். ஒன்றும் புரியாத வினோ வெகுளியாக நின்று அத்தனை பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டு மணமகள் அறைக்குள் எட்டிப்பார்த்தாள். உள்ளே பவானி மட்டும் அமர்ந்திருந்தாள்.

     அனைவரும் வெளியே சென்ற பிறகு, தன்னை பின்தொடர்ந்து வந்த தன் தோழிகளை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தான் மட்டும் உள்ளே சென்று கதவை தாழிட்டாள்.

வாய் முழுக்க சிரிப்பும், வெட்கம் நிறைந்த கண்ணங்களும், அந்த கண்ணங்களில் கண்களில் இருந்து வழிந்த கண்ணீருமாய் அறையின் ஓரத்தில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்த பவானி வினோவை கண்டதும் துள்ளி எழுந்து கட்டியணைத்தாள். உள்ளே நடந்ததை ஒருவாறு யூகித்த வினோ, ஆதராவாக அவளை அணைத்துக்கொண்டாள்.

“.....” ஏதோ சொல்ல வாய் திறந்த பவானியை, எதுவும் பேச வேண்டாம் என்று சைகை செய்தாள் வினோ.

“சாரி டி.. உன்னோட கதைய நா அப்றம் கேக்றேன்.. வேற கதை ஒண்ணு ரொம்ப முக்கியமா தெரிய வேண்டி இருக்கு” என்று கோவமாக சொல்லி, தனது செல் ஃபோனை எடுத்து வருணுக்கு கால் செய்தாள்.

“கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா? அறிவிருக்கா? அட்லீஸ்ட் ஒருத்தி வெயிட் பண்ணுவான்ற நினைப்பாச்சும் இருக்கா?” ஃபோன் அட்டென்ட் செய்யப்பட்டதும் பொரித்தெழுந்தாள்.

“ஹலோ சிஸ்டர்.. மாமா ரொம்ப பாவம் போலயே..!” விஷ்ணுவின் குரல் கேட்டது. வினோவின் கோவம் இன்னும் அதிகமாக தொடங்கியது.

“மண்ணாங்கட்டி மாமா” கோவத்தின் உச்சத்தில் பேசினாள். “எங்க டா அவன்?” மீண்டும் கோவக்குரல். ஒரு நிமிடம் விஷ்ணுவே பயந்துவிட்டான். அதற்குள் யாரோ அறையின் கதவை தட்ட “இதோ வர்றேன்.. இப்போ தான உள்ள வந்தேன்.. கொஞ்சம் டைம் குடுங்க” என்று கதவை நோக்கி கத்தினாள். தன்னை அறியாமல் கண்கள் கலங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென்று பவானி முழித்தாள்.

“தனியா கத்தாம.. அந்த கதவ தொறந்து கத்து” என்று விஷ்ணு ஃபோனில் சொல்லிவிட்டு லைனை துண்டித்தான்.

“வினோ..!” கதவின் அந்தபக்கம் இருந்து மெல்லிய குரல் ஒன்று திருட்டுத்தனமாக அழைப்பது போல கேட்டது. பாதி கதவை மட்டும் திறந்து “யாரது?” என்று கேட்டாள்.

“ஹலோ டார்லிங்” என்று சொல்லிவிட்டு கதவை வலுவாக தள்ளி உள்ளே வந்து கதவை அடைத்தான் வருண். உள்ளே பவானி இருப்பதை பார்த்ததும் “ஹாய்ய்ய்....” என்று பல்லிளித்தான்.

“நான் ரூம விட்டு வெளிய போக மாட்டேன்..!” பவானி தெளிவான குரலில் சட்டென்று சொல்லி கட்டிலின் ஓரத்தில் ஜம்மென அமர்ந்தாள்.

“ஓகே.. ஃபைன்..” என்று அவளிடம் சொல்லி, வினோவின் முகத்தை பார்த்தான். அழத்தொடங்கிய குழந்தை அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு உதடு கடிப்பது போல கடித்துக்கொண்டும், கண் முழுக்க கண்ணீரோடும் நின்றுக்கொண்டிருந்தாள். அவன் கண்ணோடு கண் கலந்ததுமே அந்த கண்ணீர் பீறிட்டுக்கொண்டு கிளம்பியது. தன்னை அறியாமல் வருணின் தோளில் சாய்ந்து ஆழத்தொடங்கினாள்.

“அழாத வினோ..” ஆறுதலாக சொல்லி அவள் தலையை தடவிக்கொடுத்தான். “கண்மை கரஞ்சி சட்ட அழுக்காக போகுது.. அப்றம் போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்காது” என்று தொடர்ந்தான்.

     தோள் சாய்ந்து அழுதுக் கொண்டிருந்தவள் சட்டென்று நிமிர்ந்து கண்ணாடிப் பார்த்து முகத்தை துடைக்க ஆரம்பித்தாள். அவள் பின்னால் நின்றுக்கொண்டு தலை சொறிந்துக்கொண்டு இருந்த வருண் நடந்தவற்றை சுருக்கமாக சொல்ல முடிவெடுத்தான். 

“ஆன் தி வே-ல ஆக்ஸிடென்ட்... வண்டி நாஸ்த்தி.. அதான் எல்லார்க்கும் அடி பட்ருக்கு” என்று மெல்ல மெல்ல சொன்னான்.

“டிரங்க் அண்ட்  டிரைவா” குழந்தை போல தூள்ளலோசையில் கேட்டாள் பவானி. இருவரும் அவளை முறைத்தனர். “சாரி.. யூ கன்டினியூ..!” என்றாள்.

“ஒரு ஃபோன் பண்ணீர்களாம்ல..?” என்று கோவமாக வினோ கேட்டாள்.

“சாரி டா.. டென்ஷன்ல அது எதுமே தோனல.. கரெக்ட் டைம்க்கு வந்தா போதும்னு அடிச்சி புடிச்சி வந்தோம். ஹாஸ்பிடல்ல கொஞ்சம் லேட் ஆகிடுச்சி”

“ஓகே வருண்” இரண்டு வார்த்தைதான் வந்தது.

“சாரி வினோ”

“ஓகே வருண்”

“ஹே.. கம் ஆன்”

“வெளிய போறியா..? ஐ ஸ்டில் ஹாவ் டு சேஞ்” முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் பேசினாள்.

“வினோ....!”

“இட்ஸ் ஓகே வருண். ஐ காட் இட்... ஆக்சிடென்ட்... வண்டி நாஸ்த்தி... பதட்டத்துல ஃபோன் பண்ண தோனல.. இட்ஸ் ஆல் ஓகே”

     இதற்கு மேல் பேசி பயனில்லை என்று நினைத்து கதவை திறக்க சென்றான்.

“ஒன் மினிட் வருண்” வினோதினி அழைத்தாள். கதவின் அருகில் இருந்து இந்த வாடிய மலரை திரும்பிப் பார்த்தான். அவள் பொறுமையாக அவன் அருகில் வந்து,

“இனிமே இப்டி பண்ணமாட்டல?” என்று பரிதாபமாக கேட்டாள்.

     அவள் கன்னத்தை தன் உள்ளங்கையில் தாங்கி, கண்ணோடு கண் கலந்து, காதல் ஒளி படர விட்டு, வாடிய அந்த மலர் முகத்தின் நெற்றியில் ஒரு முத்தம் பதித்து,

“உனக்கு தெரியாம இனிமே என் வாழ்க்கையில ஒரு அணு கூட அசையாது.. எது நடந்தாலும் முதல் செய்தி உனக்கு தான்” என்றான். 

    சூரிய ஒளி கண்ட தாமரைபோல அப்பூங்கொடியின் முகம் மலர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நின்றனர். இவை அனைத்தையும் பார்த்தபடி ‘ஈஈஈ....’ என்று இளித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் பவானி. அதை கண் திறந்து பார்த்த வருண், அவளை நோக்கி,

“ஹே ஃப்ராடு.. நீ என்ன பண்ணனு இப்போதான் அம்மா சொன்னாங்க.. ரிசப்ஷன் முடியட்டும்.. இருக்கு உனக்கு” என்று மிரட்டினான்.

“அண்ணி என் கட்சி” என்று சொல்லி கண்ணடித்தாள்.

     பதில் எதுவும் பேசாமல், கதவை திறந்து யாரும் பார்க்கிறார்களா என்று தெரிந்துக்கொண்டு மேடையில் போடப்பட்டிருந்த அலங்காரத்தின் பின்னே யார் கண்ணிலும் படாதவாறு மறைந்து சென்று மணமகன் அறையை அடைந்தான். 


தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 07 - என்ன பிளான்..?


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி


Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்


__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments