Previous Epi - 04 - நட்பு சரித்திரம்
05. மணமகள் வீடு
“வா கண்ணா.. நல்லா இருக்கியா..? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா?”
நலம் விசாரித்துக்கொண்டே விஜய்க்கு தண்ணீர் கொடுத்து
ஷோஃபாவில் அமர செய்தார்கள் வினோவின் அம்மா.
“எல்லாம் நல்லா இருக்காங்க ..ம்மா.
அம்மா உங்கள ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னாங்க”
“நல்லது ..ப்பா.. அவங்க எல்லாம் எப்போ
வராங்க?”
“நாளைக்கு ஈவினிங் ..ம்மா”
“ம்ம்ம்.. நீ எங்க ஊர் சுத்திட்டு
வர்ற?”
“கொல்கத்தா போனேன் ..ம்மா. நீங்க
மட்டுந்தாமா என்னோட எல்லா ஸ்டேட்டஸ்க்கும் ரிப்ளை பண்றீங்க”
“என்னோட ட்ரீம் லைஃப்.. நீ வாழர..
‘வாண்டெர்லஸ்ட்’." என்று சொல்லி வினோவின் அம்மா பெரும் மகிழ்ச்சியுடன் விஜயை
பார்த்தார்கள்.
டாக்டர் கணவர், CA மகள், CMA மகன் என்று
தன்னைச்சுற்றி மெத்தப்படித்த மேதாவிகள் இருந்தாலும் வீட்டின் மொத்த அதிகாரமும் அம்மா
தான். வருடம் ஒருமுறை போகும் சுற்றுலா மொத்தமும்
வினோவின் அம்மா தான் திட்டமிடுவார். எங்கு செல்வது, எத்தனை நாட்கள், எந்த
ஹோட்டலில் தங்கலாம், அப்படி தங்கும் வட்டாரத்தில் எங்கு நல்ல சுவையான உணவுகள்
கிடைக்கும், முக்கியமாக பார்க்க வேண்டிய ஸ்தலங்கள் என்னென்ன என்று மொத்த திட்டமும்
போட்டு, ஐந்து குடும்பங்களும் ஒன்றாக ஒரு நாள் டின்னர் சென்று அங்கு இந்த
திட்டத்தை விவாதித்து ஒரு மனதாக முடிவெடுப்பார்கள்.
‘எல்லா வருடமும் ஏன் நீங்களே தேர்வு செய்ய வேண்டும்?’ என்ற
கேள்வி வந்தபோது ‘தாராளமாக இந்த வருடம் நீங்கள் செய்யுங்கள்’ என்று ஒதுங்கியதுண்டு.
சுற்றுலாவிற்கு திட்டமிடுவது இன்று போல அன்று அத்தனை சுலபம்
அல்ல. முன்னமே அங்கு சென்றவர்களிடம் விசாரிக்க வேண்டும், பத்து பதினைந்து
ஹோட்டல்களுக்கு ஃபோன் செய்து விசாரித்து ஒரு ஸ்தலத்தை பற்றி நன்கு அறிந்துக்கொள்ள
வேண்டும். அங்கு வசிக்கும் மனிதர்களை பற்றியும் அவர்கள் கலாச்சாரம் பற்றியும்
தெரிந்துக்கொள்ள வேண்டும். இன்று இவை அனைத்தும் 'ரிவ்யு' என்ற பெயரில் இணையத்தில்
கண்டறியலாம். ரயிலுக்கு
பயணச்சீட்டு முதல், உள்ளூர் வழிகாட்டிவரை இணையத்தில் உண்டு. அன்று இத்தனை வசதி
இல்லை. குடும்பத்தோடு செல்லவேண்டும் என்றால் இன்னும் கவனமாக திட்டமிட வேண்டும்,
வினோவின் அம்மாவை அதில் அடித்துக்கொள்ள இன்றுவரை ஆளே இல்லை.
விஜய் ஒரு உலகம் சுற்றும் வாலிபன் என்பதால் அவன் வாட்சாப்
ஸ்டேட்டஸ்கள் என்றுமே வினோவின் அம்மாவுக்கு மகிழ்ச்சி தரும். படித்தோம் சம்பாதித்தோம்
சமுதாயத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தோம் என்று வாழும் வாழ்க்கைக்கும், சமுதாயம்
என்ற ஒன்றில் கரைந்து தினம் தினம் ஒரு அடையாளத்தையும், பல மனிதர்களின் பாசத்தையும்
சம்பாதித்து, இயற்கையோடு கலந்து வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசங்கள் ஏராளம்.
விஜயின் வாழ்க்கை வித்தியாசமானது.
“கல்யாண வேலை எல்லாம் எப்டி ..ம்மா
போகுது?” இத்தனை நேரம் தன்னைப்பற்றி விசாரித்த அம்மாவிடம் கல்யாண
வீட்டைப்பற்றி விசாரித்தான்.
“பெருசா எங்களுக்கு எந்த வொர்க்கும்
இல்லப்பா.. எல்லாமே ப்ரீ பிளான் தான்” என்று சாதாரணமாக பதில் வந்தது.
“அது சரி.. பிளான் பண்றதுல உங்க கூட
போட்டி போட முடியுமா?”
“அப்படி இல்ல கண்ணா.. லாஸ்ட் இயர் தான
விக்ரம் யாழினி மேரேஜ் பண்ணோம்.. சேம் பீப்பிள் தான் இந்த மேரேஜும் பண்றாங்க”
“அவுட்ஸோர்ஸ் பண்ணிடிங்களா?” ஆச்சரியமாய்
கேட்டான்.
“வாட்…? நோ டா…! அதே மண்டபம், அதே சமயல் ஆளுங்க, மெனு கூட
மோஸ்ட்லி சேம் தான். அடுத்தடுத்து மேரேஜ் இருக்குல... ஸோ ஃபர்ஸ்ட் டைம்மே பக்காவா
பாத்துட்டோம்”
“உங்க ஸைட் பர்சேஸ் எல்லாம் ஓவரா?”
“எஸ் எஸ்... ஒன் மன்த் முன்னாடியே
எல்லாம் முடிச்சாச்சி... அவளோட டிரஸ் அண்ட் ஸ்டிச்சிங் எல்லாம் அவளோட ஃப்ரெண்ட் தான்
பண்றா... ஸோ அதுவும் ஆன் டைம் நடந்துடும்” யோசித்துக்கொண்டே ஒவ்வொரு வேலைகளையும்
சொல்லி அதை யாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் எப்போது முடியும் என்று சொன்னார்கள்.
“அப்போ எங்களுக்கு எந்த வேலையும்
இல்லன்னு சொல்லுங்க” சிரித்துக்கொண்டே விஜய் கேட்டான். வினோவின் அம்மா அவன்
காதை பிடித்து இழுத்து,
“யார் சொன்னா இல்லன்னு? பார்ட்டி
முடிச்சி கரெக்ட் டைம்க்கு மாப்பிள்ளைய ஒழுங்கா கூட்டிட்டு வாங்க... இதுல
ஏதாச்சும் சொதப்புநீங்க... தோல உருச்சிடுவேன்..!” லேசாக மிரட்டும்
பாவனையில் சொல்லி விஜயின் காதை விடுவித்தார்கள்.
“ஐயோ அம்மா..! நாங்க எல்லாம் நல்ல
பசங்க..”
“ஆமா ஆமா விக்ரம் மேரேஜ்லயே பாத்தோமே” நக்கலும் ஏலனமுமாக
பதில் வந்தது.
“ம்மா.. நா குடிக்கல அன்னிக்கு” பவ்யமாக சொன்னான்.
“ம்ம்ம்.. தெரியும்.. ஆனா நீ இருக்க
தைரியத்துல தான் எல்லாம் கூடிச்சானுங்க”
“...”ஏதோ சொல்ல
ஆரம்பித்தவனை நிறுத்தி,
“டேய்.. பயப்படாத.. நா உங்கள தப்பு
சொல்ல.. இவனுங்க அப்டியே அவங்க அப்பாக்கள் மாதிரி.. ‘கல்யாணதுக்கு முன்னாடி
குடிக்கலாம்.. அதுக்கு அப்றம் ரெஸ்பான்ஸிபிளா இருக்கணும்’ன்னு ஒரு ஸ்டுப்பிட்
பாலிஸி.. நல்லவேளையா யாரும் அடிக்ட் ஆகல.. ஸோ பசங்க அதே மாதிரி இருக்காங்க.. பேச்சுலர்ஸ்
பார்ட்டில மட்டும் குடிப்போம்னு எங்க கிட்ட எப்பவோ சொல்லிட்டாங்க.. போய்
தொலையுதுனு விட்டாச்சி..”
“ம்மா.. நான் தான் எல்லாரையும்
கண்ட்ரோல் பண்ணேன்” பெருமாயாக சொன்னான்.
“எக்ஸாக்ட்லி.. இப்போவும் நீ
பாத்துப்பனு தான் நாங்க நம்பி அனுப்ரோம்.. பீ கேர்ஃபுல்” விஜயின் தோலில்
தட்டிக்கொடுத்து அம்மா சொன்னார்கள்.
“காலைல சாப்டியா? இரு ஏதாச்சும்
ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அம்மா கிச்சன் நோக்கி நகந்தார்கள்.
பவானி மற்றும் வினோ எங்கே என்று தன் பார்வையை வீட்டின்
மூலைகளில் அலையவிட்டு தேடினான் விஜய். மாடிபடி செல்லும் வழியை பார்த்தான்.
மேலிருக்கும் அறையில் தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தான். அவன்
மாடிக்கு செல்லும் வழியை பார்த்துக் கொண்டிருந்தபோது வினோவின் அம்மா மிக்க்ஷரும்
பால்கோவாவும் போட்டு மூன்று தட்டுகள் கொண்டுவந்து அவன் முன் நின்றார்கள்.
“மேல தான் டா கண்ணா இருக்காங்க..
சும்மாவே இவங்க ரகசியம் பேசுவாங்க.. இப்போ அண்ணி.. நாத்தனார்னு உறவுவேற வந்துடுச்சா.. ஆட்டம் தாங்கல.. வருணவிட
இவ தான் டா அதிகமா வினோகிட்ட ஃபோன் பேசரா” என்று சொல்லிவிட்டு தான் கொண்டுவந்த
மூன்று தட்டுகளையும் அவனிடமே கொடுத்து அவனுக்கொன்றும் மேலே அவர்களிடம் இரண்டும்
கொடுக்கச் சொன்னார்கள்.
படிவழியே மேலேறிய விஜய், தனக்கு வலபுறம் உள்ள அறையின் கதவு
திறந்திருப்பதையும், அதனுள்ளிருந்து பெண்மணிகளின் குரல் கேட்பதையும் கவனித்தான்.
“ஹலோ கேர்ள்ஸ்.. எனிவொன் வான்ட் ஸம்
ஸ்நாக்ஸ்..?” என்று தூரத்திலிருந்து குரல் கொடுத்துக்கொண்டே அறையின்
வாசலின் அருகில் சென்றான்.
“எஸ் பிளீஸ்..” என்று வினோ குரல்
கொடுத்தவுடன் அறையின் உள்ளே சென்றான்.
அது வினோவின் படுக்கையறை. படுக்கையின் ஒரு ஓரத்தில் அவளும், அவளுக்கு எதிரே ஒரு பிளாஸ்டிக் சேரில் பவானியும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விஜய் உள்ளே நுழைந்ததும் கலங்கியிருந்த தனது கண்களை துடைத்துக்கொண்டு “உக்காருங்க ..ண்ணா” என்று சொல்லி, நாற்காலியை அவன்பக்கம் நகர்த்தி எழுந்து நின்றாள். கலங்கிய கண்களையும், அதை துடைத்த கரங்களையும் கவனித்தும் கவனிக்காதவன் போல விஜய் நாற்காலியில் அமர்ந்து மிக்க்ஷர் சாப்பிட தொடங்கினான்.
தொடரும்..!
தொடர்ந்து படிக்க - Episode 06 - ரிசப்ஷன் மேடை
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
அன்பு நண்பன்
-டெக்ஸ்டி
Episode 01 - காதலும் குழப்பமும்
Episode 02 - கல்யாண வீடு
Episode 03 - ரத்தின வியாபாரி
Episode 04 - நட்பு சரித்திரம்
Episode 05 - மணமகள் வீடு
Episode 07 - என்ன பிளான்..?
Episode 08 - அருண் தாபா
Episode 09 – காதல் பயணம்
Episode 10 – பார்ட்டி பிகின்ஸ்
Episode 11 – சொல்லாத கதை
Episode 12 – மழையும் புயலும்
Episode 13 – காதல் புயல்
Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு
Episode 15 – இதுவும் கடந்து போகும்
__________________________________________

Comments
Post a Comment