Previous Epi - 16. இனி எல்லாம் சுகமே
17. ஆஹா கல்யாணம்
இருமனங்கள் இணைவது மட்டுமல்ல திருமணம். இரண்டு குடும்பங்கள்
இணைவது, உறவுகள் இணைவது, கலாச்சாரம் வளர்வது, விட்டுப் போன சொந்தங்கள் இணைவது, பல
நாள் பார்க்காத நண்பர்கள் ஒன்றுகூடுவது, இன்னும் என்ன என்னவோ திருமணத்தில் இருக்கிறது.
வெறும் இரண்டு மனங்கள் சம்பந்தப்பட்டது, காதல்! அந்த காதலை தேடி இங்கே ஐந்து
ஆண்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
உடை மாற்ற சென்ற வருணும், வினோதினியும் மீண்டும், மேடைக்கு
வந்தனர். நிச்சயம் முடிந்து, மணமக்களை அனைவரும் வாழ்த்தி, பரிசளித்து, புகைப்படமெடுக்கும்
ரிசப்ஷன் தொடங்கியது. வருணும் வினோதினியும், அரசன் அரசியை போல கம்பீரமாக மேடையில்
நின்றனர். விக்ரம் யாழினி, விஷ்ணு பவானி, விக்னேஷ் பிரியா, அனைவரும், தனி தனியே புகைப்படம்
எடுத்துவிட்டு, உணவும் உண்டுவிட்டு,
விவேக் எப்பொழுது ஒப்புக்கொள்வான், நண்பர்கள் ஒன்றிணைந்து குழு புகைப்படம்
எடுக்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். அவன் மகேஷ்வரி வருகைக்காக
காத்துக்கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் ‘மஹி’ என்ற பெயரை கேட்டவுடன் கோவப்பட்ட
அனைவரும், விஜய் சொன்ன பின் கதையை கேட்டு மனம் மாறினார்கள். உண்மையில், அவனைப்போலவே
மற்றவர்களும் மஹியைப் பார்க்க ஆவலாக இருந்தனர். ஆனால் நேரம் போக போக அவள் வருவாள்
என்ற நம்பிக்கை குறைந்தது.
“லெட்ஸ் கோ” விவேக் சொல்ல, விஜயை
கைத்தாங்களாக பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். புகைப்படம் எடுக்க
அனைவரும் தயாராக இருந்தபோது, விவேக் கண்கள் கலங்கியது, அவன் பார்வை மண்டபத்தின்
வாசல் நோக்கி இருந்தது.
“தேர் ஷீ இஸ்!”
அனைவரும், வாசல் பக்கம் பார்த்தனர். மகேஷ்வரி உள்ளே
வந்தாள். அத்தனை முகங்களும் புன்னகையில் மலர்ந்தது. நேராக மேடையில் ஏறி, விவேக்
பக்கத்தில் நின்றுக்கொண்டாள். அழுகையும் சிரிப்பும் சேர்ந்து ஒரு விதமான மகிழ்ச்சியில்
அனைவரும் ஆழ்ந்தனர். அந்த புகைப்படம் மிகவும் அழகாக அமைந்தது. அனைவர் முகத்திலும்
சிரிப்பும், மகிழ்ச்சியும், ஆனந்தமும், களிப்பும் எல்லாவற்றிற்கும் மேலாக,
அமைதியும் நிறைந்திருந்தது. அந்த நண்பர்கள் கூட்டம் மகிழ்ந்திருப்பதை பார்த்து, பெற்றோர்களும்
மகிழ்ந்தனர்.
“மச்சி.. என்ன கீழ டிராப் பண்றிங்களா?” விஜய் கேட்டான்.
பொறுமையாக விஜயை, விவேக் மற்றும்
விஷ்ணு கீழே கூட்டிச்சென்று, ஒரு நாற்காலியில் அமர வைத்தனர்.
“நீங்க போங்கடா.. என்ஜாய் தி டே”
மீண்டும், மேலே சென்றனர். ஜோடி
புகைப்படங்கள், ஆண்கள் சங்கம், பெண்கள் சங்கம், தோழிகள், தோழர்கள், என்று
விதவிதமாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அனைத்தையும் கீழே உக்காந்து விஜய்
பார்த்து ரசித்துக்கொண்டிருக்க, திடீரென்று காற்றில் நல்ல மணம் வீசியது.
பழக்கப்பட்ட மணம். அந்த மணம் அதிகரிக்க அதிகரிக்க மனதில் பதட்டம் அதிகமாகியது. அழகிய
பெண் ஒருத்தி விஜயின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“ஹாய் மிஸ்டர் தோர்”
“ஹலோ மிஸ் மிஸ்ட்ரி”
“ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல”
“சோகமா இருக்க காரணம் எதுவும் இல்லையே”
“இப்போ நான் இருக்கனே”
சில நொடி அமைதிக்குப் பிறகு, இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர். இனம் புரியாத ஏதோ ஒரு அலை அந்த இடத்தில்
பரவியது. மேடையில் இருந்து, விக்னேஷ் அவர்களை பார்த்தான்.
“மக்களே.. யார் அந்த அழகான பொண்ணு?”
ஒரு நிமிடம் அனைவரும் உற்றுப்
பார்த்தார்கள். முதலில் கண்டுப்பிடித்தவள் வினோதினி.
“ஹேய்.. தட்ஸ் என்.ஏ.கெ.,”
“வாட்..?” ஆண்கள் அனைவரும்
ஒன்று சேர அதிர்ச்சியில் மூழ்கினர்.
“ஆமா.. தட்ஸ் நந்தினி..! நந்தினி அருண்
குமார்”
தெளிவாக, நிறுத்தி, நிதானமாக
வினோதினி சொன்னாள். அனைவரும் அவர்களையே உற்றுப் பார்ப்பதை அந்த அழகுசிலை நந்தினி
கவனித்தாள்.
“ஹாய்..” என்று முகம் மலர கை
கட்டினாள்.
அனைவரும் “ஹாய்” சொன்னார்கள்.
“மேல வா” வினோதினி அந்த
அழகியை மேடைக்கு புகைப்படமெடுக்க அழைத்தாள்.
இதோ வருகிறேன் என்று சைய்கை செய்த நந்தினி, விஜயையும் மேலே
அழைத்தாள். அவளே கைதாங்களாக அவனை அழைத்தும் சென்றாள்.
“ஹேப்பி மேரீட் லைஃப் வினோ”
“தாங்க்ஸ் நந்தினி”
வருண் வினோதினி, விஜய் நந்தினி,
நால்வர் மட்டும் நின்று புகைப்படம் எடுத்தனர்.
“ரிங் குடுத்துட்டியா மச்சி”
பாண்டுரங்கனிடம்
வாங்கிய மோதிரம், விஜய் கேட்டபோதுதான், வருண் நினைவிற்கு வந்தது. மோதிரம் உள்ளே
இருந்து எடுத்துவரப்பட்டது. முட்டிக்கால் போட்டு, வினோதினிக்கு வருண்
மாட்டிவிட்டான். பிறகு அனைவரும் இணைந்து ஆறு ஜோடிகளாக நின்று, புகைப்படம்
எடுத்தனர். இந்த புகைப்படம் மிக நிறைவாக இருந்தது. மேடையில்இருந்து கீழே விஜயை
கைதாங்களாக நந்தினி அழைத்துச் சென்றாள். கீழே சென்று இருவரும் அமர்ந்தனர். விஜய்
தனது பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு செயினை எடுத்து, நந்தினியிடம் கொடுத்தான்.
நந்தினியின் முகத்தில் ஆனந்த ரேகை படர்ந்தது.
“ஒரு வழியா இந்த ஒருநாள் கதை
முடிஞ்சிது”
“நம்ம கதை இனிமேல் தான் ஆரம்பம்” நந்தினி சொன்னாள்.
முற்றும்!
Post Script -
மாலை நடந்த அமலிதுமலியில் இருந்து அருண் தாபா கொஞ்சம் கொஞ்சமாக
மீண்டுக்கொண்டிருந்தது. துரை தனது ஆட்களுடன் இரவு முழுக்க வேலை பார்த்தார்.
விடியும் முன் சிறிது நேரம் ஓய்வெடுக்க தனது அறைக்கு வந்தார். உள்ளே நுழைந்ததும்,
தன்னை யாரும் பின்தொடரவில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு கதவை தாழிட்டார்.
தனது டேபிள் டிராவை திறந்து, ஒரு குட்டி டப்பாவை எடுத்தார். அதனுள் ஒரு
சுருக்குப்பை இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். அந்த சுருக்குப்பைக்குள்
இருக்கும் பொருளை மிக பத்திரமாக வேறு ஒரு குட்டி டப்பாவில் போட்டு, டிராவில்
இருக்கும் ரகசிய அறைக்குள் வைத்து மூடினார். அவ்வாறு மூடிவிட்டு, நிமிர்ந்து
பார்த்த போது எதிரில், ஏ.கே., முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல், துரையை
பார்த்துக்கொண்டு இருந்தார். துரை திடுக்கிட்டார்.
வணக்கம் வைத்தார்.
ஏ.கே., ‘கொடு’ என்பது போல கை நீட்டினார்.
“புரியல சார்” எதுவும் தெரியாதவர்
போல துரை சொன்னார்.
வருண் மற்றும் அவனது நண்பர்கள்
யார் என்று கண்டுபிடிக்க ஏ.கே.,விற்கு உதவ, செக்யூரிட்டி கேமராவிலிருந்து எடுத்து,
துரை அனுப்பிய புகைப்படங்கள் சிலவற்றை அவருக்கே காண்பித்தார். பாண்டுரங்கனின்
காரிலிருந்து ஒரு டப்பாவை துரை எடுக்கும் படம் அது.
பாண்டுரங்கன், வருணுக்கு ஒரு மோதிரமும்,
தன் வளர்ப்பு மகளான, தரணிக்கு ஒரு வைர டாலர் பதிந்த செயினும், மீதமிருந்த கடத்தல்
வைரங்களை ஏ.கே.,விடம் விற்கவும், ஒரே மாதிரியான டப்பாக்களில் போட்டு கொண்டு
வந்திருந்தார். பதட்டத்தில், டப்பாக்கள் மாறியது.
புகைப்படங்களை பார்த்த துரைக்கு,
என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியவில்லை. பூட்டி வைத்த டப்பாவை எடுத்து ஏ.கே., கையினில்
வைத்தார். மனதில் என்ன எண்ணாங்கள் ஓடியதோ தெரியவில்லை, வாய் விட்டு ஏ.கே., எனும்
அருண் குமார், சிரித்தார்.
ஆஹா கல்யாணம் முற்றும்!
--------------------------------------------
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! மீண்டும் ஒரு நல்ல கதையுடன், உங்கள் அனைவரையும் சந்திக்கின்றேன்!



Well done!! nd great job Chandru. Vibrant story.
ReplyDeleteAfter entering the bungalow,
the way the story moves is too lively.. Arun dhaba kalebaram ultimae.
All drawings are too toooo good ..
congratulations nd definately u will reach great height.
I wants to read historical novel. So seekiram eludhu..I'm waiting for that..