முதல் காதல்
மழைச் சாரல்
அமைதியாக கதை கேட்டுக்கொண்டிருந்த மேகம், கதை முடிந்தது என்றவுடன் தன் இயல்புக்கு திரும்பி தான் இங்கு ஒன்றுகூடிய செயலை சட்டென்று நினைவிற்கு கொண்டுவந்து ஒரு இடி முழக்கமிட்டு, அதை தொடர்ந்து மழையும் பொழிந்தது.
“நான் போய் ஏதாச்சும் படம் கொண்டுவரேன். இந்த ஸ்டோரிய விட பெட்டரா நல்ல பொம்ம படம் பாக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே, காலியான பஜ்ஜி கிண்ணத்தை எடுத்துக்கொண்டு தன் பிளாட்டிற்கு நடந்தாள் தோழி. நிச்சயமாய் இக்கதைக்குப் பின்னர் அவர்களுக்கு தனிமை வேண்டும் என்பதை உணர்ந்ததால் சென்றாள்.
“ஹேய்....”
“ம்ம்ம்...”
“அதுக்கு அப்பறம் நீ அவள பாக்கல...?”
லேசாய் புன்னகை செய்து அவளுக்கு நெருக்கமாக வந்து அமர்ந்தான் அவன்.
“ஒருநாள் அவள எங்க ஊர் பஸ் ஸ்டாப்ல பாத்தேன். அவ அம்மா கூட நின்னுட்டு இருந்தா.... கையில அவ குழந்தை.... ஒரு எட்டு இல்ல பத்து மாசம் இருக்கும்.....”
“ம்ம்ம்.... பேஸ்னியா??”
“அவளே கூப்டா.... எப்படி இருக்க... என்ன பண்றனு எல்லாம் விசாரிச்சா...”
“பஸ் வர எவ்ளோ நேரம் ஆகும்மா??” முதல் காதலியின் அம்மாவிடம் கேட்டான்.
“இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷம் ஆகும்பா” அம்மா பதில் சொன்னாள்.
விரைந்துச் சென்று குழைந்தைக்கு ஒரு ஆடை வாங்கி வந்து அவளிடம் கொடுத்தான்.
“எதுக்குடா இந்த ஃபார்மாலிட்டி”
ஒன்றும் பேசாமல் சிறிது சிரித்துகொண்டு ‘இருக்கட்டும்’ என்பதுபோல தலையசைத்தான்.
பேருந்து வந்தது, அவர்கள் மூவரும் ஏறினார்கள்.
“நீ வரலயாப்பா....?”
“இல்லம்மா.... ஃபிரண்டு வரணும்.... நீங்க பாத்து பத்தரமா போயிட்டு வாங்க....”
பஸ்ஸில் ஏறி ஜன்னல் ஓரம் உட்கார்ந்தவளை இனம்புரியாத ஒரு உணர்வோடு பார்த்தான். அவள் திரும்பிப் பார்த்து ‘போய்வருகிறேன்’ என்று புன்னகைத்தாள்.
இது அத்தனையும் அவன் தோலில் சாய்ந்தவண்ணம் அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளை நிமிர்த்தி, கண்ணோடு கண்கள் பார்த்து,
“இது எல்லாமே எப்பவோ நடந்தது..... அதுக்கு அப்பறம் லைஃப்ல நறையா மாற்றங்கள். நறையா புது புது உறவுகள்..... ஆனா காதலின்ற உறவு நீ மட்டும் தான்.....”
“தெரியுமே.....” என்று அமைதியாக சொன்னாள் அவள்.
அவள் தோல்மீது கைபோட்டு தன்னோடு அணைத்துக் கொண்டான் அவன். அழகிய மேகங்கள் மழை பொழிந்துக்கொண்டிருக்க, காற்றோடு சேர்ந்து அம்மழை பால்கனியில் இருந்த காதலின் மீதி லேசாக சாரலை தெளித்தது.
“போனவாட்டி இந்த கதைய சொன்ன அப்போ கடைசியா அவளைபத்தி ஒன்னு சொல்லி முடிச்சியே.... அத இப்போ சொல்லல...?”
“ஹா...ஹா... ஹா....” வாய் விட்டு சிரித்தான் அவன்.
“போதும்.... அப்போ கேட்ட அதே கேள்வி நா கேக்குறேன்.... அதே பதில் நீ சொல்லனும்.... சரியா?”
குழந்தைத்தனமாய் இருந்த போதிலும் அவனுக்கு அது பிடித்திருந்தது. காதல் மனதை கிரக்கமடைய செய்யும். ஆண் பெண் என்று பேதம் பார்ப்பதில்லை. கேட்ட கதையை அதே தொனியில், அதே உணர்வுகளோடு, அதே வார்த்தைகளோடு முடிக்க வேண்டும் என்ற இந்த காதல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த ஆசையை வெளிப்படுத்த அவனிடம் எந்த தயக்கமும் கொள்ளாத காதல் அவளுக்கும் பிடித்திருந்தது.
“அப்போ கேட்ட அதே கேள்வி நா கேக்றேன்.... அதே பதில் நீ சொல்லணும்.... சரியா?”
“ம்ம்ம்....” அவள் கண்களின் காதல் கேள்விக்கு பதில் வந்தது.
“எப்பயோ நடந்தது.... ஆனாலும் அவளபத்தி சொல்லும்போது கண்ல அவ்ளோ ஏக்கம்.... ஏன்?”
சிறிய சிரிப்போடு அவன் பதிலளித்தான்,
அன்னக்கிளி முற்றும்..!
முதல் காதல் - அன்னக்கிளி
__________________________________________
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

Comments
Post a Comment