முதல் காதல்
“அது நா டென்த் படிக்கிற அப்போ.....”
“டேய்... அப்போ நானும் தான உன்கூட படிச்சேன்.... எனக்கு தெரியாம எப்படி....?” தோழி குறுக்கிட்டாள்.
“சும்மா இரேண்டி.... அவனே இப்போ தான ஸ்டார்ட் பண்ணான்” கதை கேட்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாதவளாய் அவள் தோழியை அதட்டினாள்.
வாய் பொத்தி “இனிமேல் பேசவில்லை தாயே” என்பதுபோல பாவமாய் பாவலா செய்தாள் தோழி. அவன் கதை தொடர்ந்தது.
“நம்ம டென்த் படிச்ச அப்போ நம்ம மேனேஜ்மெண்ட்லயே வேற ஸ்கூலுக்கு கம்ப்யூட்டர் கத்துக்க செலெக்டிவா ஒரு அஞ்சி பசங்கள அனுப்பி வச்சாங்க ஞாபகம் இருக்கா?”
“ஆமா... அந்த ஸ்கூல் பொண்ணுங்க அழகா இருபாங்கனு எல்லாம் இளிச்சுட்டு போனாங்க... ஆனா நீ அப்போ அவ்ளோ தெளிவு இல்லையே....”
அவள் கூறியதை காதில் வாங்காதவனாய் அவன் கதையை தொடர்ந்தான்.
“அங்கே தான் அவளை பார்த்தேன்....”
“புது ஸ்கூல் புது பொண்ணுங்கன்னு சும்மா ஸ்சீனா என்னோட அட்லஸ் சைக்கிள்ல போனேன்”
“கிளாஸ் ஸ்டார்ட் ஆன பத்து நிமிக்ஷத்துலயே தெரிஞ்சிபோச்சி அவ பெரிய வாயாடின்னு”
“நானும் சும்மா இல்ல... நல்ல படிக்கிற பையன் தான... சோ எல்லா கொஸ்டினுக்கும் போட்டி போட்டு பதில் சொன்னேன்”
“மொத்தமே பத்து பேர்தான் கிளாஸ்ல. ஃபை பாய்ஸ் ஃபை கேள்ஸ்”
“ஃபஸ்ட் ஆஃப் கிளாஸ் முடிஞ்சி லஞ்ச் அப்போ அவ கிட்ட பேச ட்ரை பண்ணேன்”
“ஓய்.... உன் பேர் என்ன?”
“ஹான்.... ரிப்பேர்”
கதை கேட்டுக்கொண்டு இருந்த இருவரும் அவனை மேலும் கீழும் பார்த்தார்கள்.
“ஹலோ.... அந்த டைம்ல இது தான் டிரண்டு”
“சரி சரி நீ கதைய சொல்லுடா”
“எனக்கு கோவம் வந்துச்சி.... பேசலாம்னு பாத்தா அசிங்க படுத்துராளேனு”
“உனக்கும் வாய் நல்லா வருமே, அவள எப்படி சமாளிச்ச...”
“வேணும்னா சொல்லுங்க சரி பண்ணிடலாம்னு சொன்னேன்....”
“அவ மொறச்சா”
“பேர தான் சொன்னேன்” அப்டின்னு நா சொல்லிட்டு கெளம்பிட்டேன்.
“அதுக்கு அப்பறம் அந்த அஞ்சி நாள் கிளாஸ்ல நெறைய ஆர்கியுமெண்ட், சிலது ஸ்சேம் க்ரூப்ல இருந்து, பலது ஆப்போசிட் குரூப்ல இருந்து. கடைசில சாப்பாடு எக்ஸ்ச்சேஞ் பண்ற அளவுக்கு க்ளோஸ் ஆனோம்”
“ஊர்ல முக்காவாசி ஸ்கூல்ல ஹாஃப்சாரீ தான். ஆனா எங்க ரெண்டு ஸ்கூல்ல மட்டும் பொண்ணுங்க சுடி தான் போடுவாங்க. அவளோட அந்த சுடி, ரெகார்ட் நோட், ரெட்ட பின்னல், ரிப்பன், வாயாடித்தனம் எல்லாமே எனக்கு வித்யாசமா இருந்துச்சி....”
“காதல் வந்தா... பருவத்துல....” என்று சொல்ல வந்த தோழியின் வாயை அவன் பொத்தினான்.
“நீ மூடு.... இதுக்கு தான் நா சொல்ல மாட்டேன்னு சொன்னேன்” உண்மையிலேயே கோவித்துக்கொண்டான்.
“சரிடா சரிடா.... நா ஏதும் பேசல... நீ கண்டிநியூ பண்ணு ராசா” என்றாள்.
“இவ்ளோ வர்ணிக்கிறான் ஆனா நம்மகிட்ட ஒரு வார்த்த கூட இத்தன வருஷமா சொல்லலயே” என்று மனதிற்குள் கடிந்துக்கொண்டாள். ஒரு சிறிய ஏமாற்றமும் இருந்தது.
அவன் காவியம் தொடர்ந்தது.
“எல்லாம் முடிஞ்சி கடைசி நாள் குயிஸ் ப்ரோக்ராம் எங்க ஸ்கூல்க்கும் அவங்க ஸ்கூல்க்கும். ஆஃப்வியஸ்லி நாங்க தான் வின் பண்ணோம். வின்னர்ஸ்க்கு ஒரு ஃப்லாஃப்பி டிஸ்க் பிரைஸா குடுத்தாங்க”.
“டேய்... இது எனக்கு ஞாபகம் இருக்கு. ரொம்ப நாளுக்கு அப்பறம் அது காணாம போச்சே”
ஆம் என்று தலையசைத்து தொடர்ந்தான்.
“வின் பண்ண சந்தோஷத்துல ஒரே ரகள.... சைக்கிள் எடுத்துட்டு கெளம்புறப்போ ஒரு குரல்...”
“அந்த குரல் அந்த கன்னியினுடைய குரலா?” என்று கிண்டல் செய்தாள் தோழி.
லேசாய் சிரித்த அவள்... “சரி அங்க நடந்தத சொல்லு” என்றாள்.
“திரும்பிப்பாத்தா அவளே தான்”
“கங்ராட்ஸ்” என்று கை நீட்டினாள்.
“ஹொ! தாங்க்யு” என்று அவனும் அவள் கை பிடித்தான்.
முதல் ஸ்பரிசம்...!
“ஹலோ....! கண்டிநியூ ப்ளீஸ்....” அவள் குறுக்கிட்டாள்.
தொடரும்..!
தொடர்ந்து படிக்க - 7. கிரீம் பண்
முதல் காதல் - அன்னக்கிளி
__________________________________________
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

Comments
Post a Comment