முதல் காதல்
அன்னக்கிளி
Previous - முதல் காதல்
கிரீம் பண்
“அதுக்கு அப்பறம் அவன் தான் ‘ஸ்கூல் கெத்து’... சர்குளர் எல்லாம் அவன் தான் கொண்டு போய் கொடுப்பான். அப்டியே கரெக்ட் பன்னிருப்பான்”
“ஹே..... அப்போ உனக்கு இதெல்லாம் தெரியுமா?” தோழியை அவள் வியப்போடு கேட்டாள்.
“அடியே அசடு... இது தான உலக வழக்கம்.... அவன அப்போ அப்போ அந்த ஸ்கூலுக்கு அதுக்கு தான் அனுப்புவாங்க.... சோ கெஸ் பண்ணேன்”.
“ஆமா... அப்படிதான் நெருக்கமானோம். அப்பறம் பப்ளிக் எக்ஸாம்லாம் அவங்க ஸ்கூல் கேம்பஸ்லதான் எழுதனும். அப்போ தான் கடைசி எக்ஸாம் முடிஞ்ச அப்பறமா வெளிய போலாம்னு முடிவு பண்ணோம்....”
“அடேய்... அப்போ நீ படத்துக்கு போகலையா அன்னிக்கு...?”
“அதுக்கும் சார் போனாரு.... போறதுக்கு முன்னாடி தான் அந்த ரொமான்ஸ்சு” அவள் பதில் சொன்னாள்.
“என்னடா... இங்க கொஞ்சம் பொகையுது.... மருபடியும் கைய புடிச்சியா? இல்ல ‘ஐ லவ் யு’ சொன்னியா?”
“எனக்கு என்ன புகைச்சல்.... இந்த வயசுலயே ‘ஐ லவ் யு’ சொல்லவே அம்மா தான் சொல்லி குடுக்கணும்.... இவன் எங்க அப்போ சொல்லிருக்க போறான்....!” என்று சிறிது நக்கலும் பொறாமையும் கலந்து அவள் வார்த்தைகள் இருந்ததாக தோழி உணர்ந்தாள்.
“எல்லா காதலுக்கும் ‘ஐ லவ் யு’ தேவை படாது” மேகத்தை பார்த்துக்கொண்டே பதில் சொன்னான். சொல்லிமுடித்தவுடன் தான் செய்த தவறு புத்திக்கு எட்டியது.
சிறிது அமைதிக்கு பிறகு, “ம்ம்ம்... மேல சொல்லு டா.... படத்துக்கு எப்படி போன...?” என்றாள் தோழி.
“லேட்டா போனேன். அவகூட போனும்னு அவளோட சைக்கிள் காத்த புடிங்கி விட்டுட்டோம்”
“ஹேய்... எனக்கு ஞாபகம் இருக்குடா.... க்ரௌண்ட்ல நீ வெயிட் பண்ணிட்டு இருந்த அப்போ.... என்ன விஷயம்னு கேட்டதுக்கு.... ஏதோ சைக்கிள் கடைக்கு போனும்னு சொன்னியே....”
“டேய்... அந்த பொண்ணு கூட எனக்கு இப்போ ஞாபகம் இருக்கு... அவளுக்கு....” என்று தோழி தொடர, அவள் தோழியை அமைதியாக இருக்குமாறு சைகை செய்தாள்.
“ஆமா... அவ தான். அவ சைக்கிள் தான்.”
“ஆனா அந்த சைக்கிள் கதை ஃப்ரண்ட்ஸ் கிட்ட இருந்து தப்பிக்கதான்”
“தப்பிச்சி எங்க போனிங்க?”
“நம்ம ஊர் ஃபேமஸ் ‘இம்பாலா பேக்கரி’ தான்.”
M.Dhanu
“அப்போலாம் பொண்ணுங்க எல்லார்கிட்டயும் ஹான்ட் கர்சிஃப் அண்ட் வாட்டர் பாட்டில் இருக்கும். ரொம்ப பிரைவேசி அதுக்கு. யார்கிட்டயும் குடுக்க மாட்டாங்க. ஸ்பெஷலான பெர்சன்க்கு மட்டும் தான் குடுப்பாங்க.”
“பண் சாப்ட்டு தண்ணி குடிக்க பக்கத்துல இருந்த கொடத்த தொட்ட உடனே.... ‘ஹே... என் பாட்டில் யூஸ் பண்ணிகோடா... இந்தா மொதல கையதொடச்சிக்கோ...’ அப்டின்னு அவளே குடுத்தா.....”
மேகங்கள் இன்னும் அழகாய் தோன்றியது. காற்றில் அன்று வீசிய வாசம் இன்றும் உணர முடிந்தது. கடந்த காலம் என்றபோதிலும் கடந்துவர மனம் மறுக்கிறது. ஆண்கள் மனம் பலவற்றை புதைத்து வைத்திருக்கும். வேண்டாம் என்றபோது அது வெளிவராது. அமைதியாக அடக்கமாக உள்ளேயே இருக்கும். ஆனால் என்றேனும் ஒருநாள் ஒரு உறவை நம்பலாம் என்று மனம் முடிவெடுக்கும். தோழனோ, தோழியோ, காதலியோ அது யாரென்பது விதி நிர்ணயிக்கும். புதைக்கப்பட்ட நினைவுகள் யாவும் மனதின் கட்டளைக்காக காத்திருக்கும். கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் பீறிட்டுக்கொண்டு வெளிவரும்.
வாழ்வில் இத்தனை அதிசயங்கள் நடந்தபோதிலும், ஆசீர்வாதங்கள் கிட்டியபோதிலும் இதோ, அந்த நொடிக்குத்தான் மனம் ஏங்கியது. முதல் காதல் ஒன்று தவிர வேறு எதுவும் இந்த சுகம் தராது. தரவும் முடியாது.
காதலை பகிர்ந்துக்கொள்ள வார்த்தைகள் தேவையில்லை. பேசும் பேச்சை விடவும் அவள் விடும் மூச்சி ஆயிரம் அர்த்தம் உணர்த்தும் அவனுக்கு. நடையின் வேகம்கொண்டு அவன் மனநிலை அறிவாள் அவள். பார்வை ஒன்றுபோதும் அவள் சம்மதம் தெரிவிக்க. சிரிப்பு ஒன்று போதும் அவன் புரிதல் தெரிவிக்க. இந்த புரிதல் காலமெல்லாம் நீடித்திருக்கவேண்டும். ஒருவர் சூழ்நிலையை மற்றொருவர் புரிந்துக்கொள்ளாத போதிலும், கோபமில்லாமல், அமைதியாக விட்டுக்கொடுத்துபோக வேண்டும். எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவன் புரிந்து நடந்துகொள்ளுதல் என்பது அசாத்யம். அழகாய் பூத்த காதல் மலர்கள் இந்த புரிதல் இல்லாத காரணத்தினால்தான் வாடிவிடுகிறது.
ஆனால், அத்தனை புரிதல் இருந்தும், காதல் இருந்தும் இவன் முதல் காதல் கைசேரவில்லை. காரணம், முதல் காதல் எப்போதும் ஒரு குருடு தான்.
“ஹ... ஹம்ம்ம்....” அங்கு நிலவிய அமைதியை கலைத்தாள் தோழி.
“அப்பறம் படத்துக்கு கெளம்பிட்டியா...?”
“இல்லடி, இன்னும் கிஃப்ட் செஸ்சன் பாக்கி இருக்கு” அவள் பதில் அளித்தாள்.
“வாவ்.... சூப்பர் டா.... அவ்ளோ அறிவு இருந்துச்சா உனக்கு....? என்ன கிஃப்ட் பண்ண?”
“வேற என்ன அந்த ஃப்லாஃப்பி டிஸ்க் தான் குடுத்தேன்.....”
“அடி தூள்..... அது காணாம போன காரணம் இதுதானா?”
“சரி அவ என்ன ரியாக்ட் பண்ணா? ரிடர்ன் கிஃப்ட் கெடச்சிதா?”
“அவ சேத்து வச்ச காசுல ஒரு ஷர்ட் வாங்கி தந்தா....”
“அது இன்னும் அவர் கப்போர்ட்ல இருக்கு” அவள் முடித்து வைத்தாள்.
“அட பாவி.... அவ்ளோதானா.....”
“அவ்ளோதான்... படத்துக்கு போயிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்”
“அதுக்கு அப்பறம் அவள பாக்கல நீ?”
“ம்ம்ம்..... லீவு, பாட்டி வீடு எல்லாம் முடிஞ்சி வந்தா அவ வேற ஸ்கூல். இப்போ மாதிரி செல்போன் இல்ல. அவளோட வீட்டு டெலிபோன் நம்பரும் இல்ல... அவ்ளோதா.... அது அப்படியே போச்சி....”
“.......” தோழி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அவன் முகம் பார்த்து எதும் சொல்லாமல் நான்கு மணி வானம் ஏழு மணிப்போல் காட்சியளிப்பதை பார்த்து, அவன் சொல்லும் அந்த பெண்ணிற்கு இவன் கல்லூரி பயிலும்போதே திருமணம் முடிந்து இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்பதனை யோசித்தாள். இப்போது இதை சொல்லி என்ன பயன். பெருமூச்சி விட்டாள்.
காதலை வளர்பதற்கு இன்று போல அன்று சமூகவளைதலங்களின்
ஆதிக்கம் இல்லை. “நானே அம்மா போன் தான் யூஸ் பண்றேன்” என்று சொல்லும் அவசியமும் இல்லை.
ஞாபகம் என்ற பெயரில் எக்ஸாம் பேடுகளும், கைகுட்டைகளும் பரிமாறப்பட்ட காலம் அது.
தொடரும்..!
தொடர்ந்து படிக்க - 8. மழைச் சாரல்
முதல் காதல் - அன்னக்கிளி
__________________________________________
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

Comments
Post a Comment