1. அவள்
அகவை இருபது தொட்டதும் சொந்தமும் பந்தமும் கேட்கும் கேள்வி ஒன்றுதான்...
தான் அதற்கு தயாரில்லை என்ற ஐயம் கொண்ட கன்னிகைகளில் இவளும் ஒருத்தி....
தன்னை தான் புரிந்துக்கொள்ளாமல்
தன் குடும்பத்தாரை முழுமையாக புரிந்துக்கொள்ளாமல்,
இன்னொருவனை எவ்வாறு புரிந்துக்கொள்ள முடியும்?
அவர் குடும்பத்தாரை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்??
அவர் குடும்பத்தாரை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்??
இத்தனைக் குழப்பங்கள் இருந்தபோதிலும்...
என்னவன் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய...
ஆசைகளும் கனவுகளும் மட்டும் விண்ணளவிற்கு வளர்ந்திருந்தது....
என்னவன் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய...
ஆசைகளும் கனவுகளும் மட்டும் விண்ணளவிற்கு வளர்ந்திருந்தது....
என்னவன் என்பவன்....
"தோள் கொடுக்கும் தோழனாக...!
கன்னம் உரசும் காதலனாக...!
என் ஆசைகளை என்னிடமே
எடுத்துரைக்கும் அசரீரியாக...!
அதை நிறைவேற்றும் விளக்குபூதமாக...!
எனை அதிகாரம் செய்வதில் அரசனாக...!
அன்பு காட்டுவதில் அப்பனாக...!
உலகை சுற்றுவதில்(என்னுடன் மட்டும்) என்றும் வாலிபனாக...!
என்னை மட்டும் சுற்றும் என்னவனாக...!
நரைக்கூடும் காலத்திலும்...
என் கரம் பிடித்து...
உச்சி முகர்ந்து...
என்னவள் நீதான் எப்பிறப்பிலும்...
என்று சொல்பவனாக...!"
அமையவேண்டும் என்ற கனவோடு காலங்கள் கடந்தன.
என்னை நான் அறிந்ததை விடவும் என் காதலன் உன்னை நான் கற்பனையில் அறிந்தது அதிகம்.
என்ற நினைப்போடு அவனுக்காக ஏங்கும் அவள்!
2. அவன்
ஆடவனாக பிறப்பது பாக்கியம்
ஆடவனாக வளர்வது படுஜோர்
அகவை இருபது தொட்டப்பின்
ஆடவனாய் வாழ்வது.....
சமுதாயம் நம் தாய் தந்தையைக் குறைகூறக் கூடாது என்பதற்காக படிப்பு,
படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை,
வேலைக்கு சம்மந்தம் இல்லாத கூலி,
கூலிக்கேற்ற, மனைவி மக்கள், என ஒரு அழகு குடும்பம்.
முற்பிறவியில் புண்ணியம் ஏதும் செய்திருந்தால்...
மேலே உள்ளதுபோல் ஒரு ஆடவனின் வாழ்க்கை அமையும்...!
மேலே உள்ளதுபோல் ஒரு ஆடவனின் வாழ்க்கை அமையும்...!
அப்படி அல்லாதோரின் நிலைமை நாடறியும்...!
இதில் காதலுக்கு ஏது நேரம்?
ஆனால் காதலி இவ்வாறு அமையவேண்டும்...
என்ற கனவுக்கு நேரம் நிச்சயமாய் உண்டுதானே...?
என்ற கனவுக்கு நேரம் நிச்சயமாய் உண்டுதானே...?
என்னவள் என்பவள்...
"எனக்காக இருக்க வேண்டும்...!
எனக்காக மட்டும் இருக்க வேண்டும்...!
இன்பத்தின் உச்சியிலும் வேண்டும்...!
துன்பத்தின் தாழ்விலும் வேண்டும்...!
களிப்பில் கட்டியணைக்கவும் வேண்டும்...!
வேதனையில் தோள் சாய்ந்து அழுதிடவும் வேண்டும்...!
என் மூச்சிக்காற்றின் வேகம் கண்டு
மனதின் எண்ணங்களை புரிந்திடவும் வேண்டும்....!
எத்தனை ஆண்டு கடந்த போதிலும்...
குழந்தைகளின் மணம் முடிந்த போதிலும்...
நரைக்கூடிய போதிலும்...
என்றென்றும் காதலியாக...
என்னுடைய காதலியாக மட்டுமே வாழ்வனைத்தும் வேண்டும்...!"
என்ற கனவோடு அவளுக்காக ஏங்கும் அவன்!
3. சந்திப்பு
இது காதலா??
முதல் காதல்
முதல் சந்திப்பில் காதல்
முறை மாமன்/பெண் மீது காதல்
பழகிய நண்பன் மீது காதல்
கல்லூரியில் காதல்
உடன் பணிபுரிவோரிடத்தில் காதல்
இன்னும் பல காதல் கதைகளை கடந்து வந்தவர்கள் தான் அவளும் அவனும்.
பல கதைகள் கண்டதாலேயே எந்த காதலிலும் நம்பிக்கை வரவில்லை
அல்லது
காதலுக்கு இவர்கள் மேல் நம்பிக்கை வரவில்லை போலும்...
அகவை இருபது தான்... ஆனால் அனுபவம் கொஞ்சம் அதிகம்...
காதல் கதைகளில்.
குழப்பத்திலேயே பலகாலம் தள்ளியாயிற்று.
இது காதலா? அது காதலா?
இவர்கள் செய்வதுதான் காதலா?
படிக்கும் பருவத்தில் காதல் பிசகு!
வளரும் வயதில் காதல் தவறு!
வேலைக்கு செல்லும்போது காதல் நேரத்தை வீணாக்கும்!
ம்ம்ம்....
கல்யாணத்தின் பிறகு பதியிடம் வருவது தான் உண்மையான காதல்
என்று வைத்துக்கொள்வோம்...
பதியாக அமயப்போவது யார்?
நமக்கு பிடிக்கவில்லை என்றால்?
திருமணம் முடிந்த பின்பு திருத்தம் சாத்தியமோ?
ம்ம்ம்...
சமுதாயம் அதற்கும் குறை சொல்லும்...
அட நடப்பது நடக்கட்டும் விட்டு தள்ளு என்று
மூளை கூறினாலும் இருதயம் ஏற்க மறுக்கிறது...
மூளை கூறினாலும் இருதயம் ஏற்க மறுக்கிறது...
இவன்தானோ...? இவள்தானோ...?
என்று பல கற்பனைகள் அலைகின்றன...
இந்த குழப்பத்தில் உண்மையாகவே காதல் வந்தாலும்...
காதல் இதுதானா? இருக்காது இருக்காது...
என்று தோன்றும் போலும் இந்த இருவருக்கும்.
காதல் இதுதானா? இருக்காது இருக்காது...
என்று தோன்றும் போலும் இந்த இருவருக்கும்.
பல கதைகள் போல, இவர்கள் இருவர் காதலும் நட்பிலேயே தொடங்கியது.
"தினம் அலைபேசியில் அழைக்கவும் இல்லை...!
சாப்பிட்டாயா? தூங்கினாயா? என்ற குறுஞ்செய்தியும் இல்லை...!
பாசம் மட்டும் பரவிக்கிடந்தது...!
அவன் ஆசைகள் அனைத்தும் அவள் அறிவாள்...!
அவள் ஏக்கங்கள் அனைத்தும் அவன் அறிவான்...!
உற்றாரும் மற்றாரும் கேலி செய்தபோதிலும், நட்பினை இவர்கள் சந்தேகிக்கவில்லை...!
ஒரு காலம் மட்டும்....
அவனுக்கு நம் மீது காதலோ என்று நம் சகி சந்தேகிக்க...!
இருவருகிடையில் ரகசியம் என்னும் களவாணி புகுந்தான்...!
இடைவெளி என்னும் சாமானியன் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்தான்...!"
அவனை கண்ணோடு கண் காண இயலாமல் நாணத்தில் தவிக்கின்றாள் அவள்.
இது காதலா?
குழப்பத்தோடே தோழியாக தவிக்கும் நம் சகி!
4. காலம்
காலம்...
யார் வாழ்க்கையில் தான் விளையாடவில்லை...?
ஆசைப்பட்டது எல்லாம் சரியான காலத்திலேயே நடக்கும்.
ஆனால் அந்த காலம் எப்போது?
வினா மட்டும் உண்டு, விடை...?
அது காலம் தான் அளிக்கவேண்டும்.
வேண்டியது வேண்டாதது என்று பகுத்தறிந்தாலே காலம் தான் தன் கடமையை செய்யும்...
இது காதலா?? இல்லையா??
வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்திலுள்ள அவளுக்கு, காலம் என்ன பதில் வைத்திருக்கிறதோ....
காலமே பதில் சொல்ல வேண்டும்...
"காலமே...!
அவன் என்னவன் ஆவானா??
நட்பென்னும் உன்னதத்திலிருந்து...!
காதலென்னும் உணர்வுக்கு...!
ஏக்கங்கள் எனக்கு மட்டுமோ...?
துளியேனும் இந்த சகியின் காதல் குரல் அவன் செவிக்கு கேட்குமோ...?
இது சரிதானோ...?
பிசகென்று அவன் நினைத்துவிட்டால்...?
தோழனாகவே நான் பழகினேன் என்றால்...?
அவன் காதல் இல்லையென்றாலும் சகித்துக்கொள்ளலாம்...
இனி நட்பே இல்லை என்றால்...?"
என்று காலத்திடம் மனமுருகி பதில்கள் நாடுகிறாள் #சகி
மிக விரைவில் பதில் தரும் காலம்...!
5. அன்பு
"அன்பு...
அத்தனையையும் அடிமையாக்க வல்லது
நண்பன் மீது அன்பு, நம்பிக்கை...!
பகைவன் மீது அன்பு, மன்னிப்பு...!
உற்றார் மீது அன்பு, உறவு...!
மற்றார் மீது அன்பு, நல்லுள்ளம்...!
தன் மீது அன்பு, நல்லொழுக்கம்...!
உலகின் மீது அன்பு, அமைதி...!
பெற்றோர் மீது அன்பு, பிறவி பலன்...!
அந்த அன்பிற்காக ஏங்கித்தவிப்போர் பலர்...!
வேற்றுமைக் கருதாமல் வழங்குவோர் பலர்...!
வழங்கி பழகுவோம் அன்பென்னும் மட்டற்ற உணர்வை...!"
என்று அவன் தன் நண்பர்களுக்கு கவிதை கூறிக்கொண்டு இருந்தான்.
அவன் அன்பு... அனைவரிடமும் சமமாய் இருந்தது.
காரணம், இவ்வாழ்வு நிலையில்லை என்ற உண்மை உணர்ந்ததால்.
காரணம், இவ்வாழ்வு நிலையில்லை என்ற உண்மை உணர்ந்ததால்.
நண்பர்கள் பகைவர்களாக மாறக்கண்டான்...
நண்பர்கள் துரோகிகளாக மாறக்கண்டான்...
பகைவர்கள் நட்புறவாக மாறக்கண்டான்...
துரோகிகள் நலவிரும்பிகளாக மாறக்கண்டான்...
சொந்தம் சோதனைகளாக மாறக்கண்டான்...
சோதனைகளின் முடிவில் சாதனைகள் கண்டான்...
சாதனை என்பது மன அமைதி என்பதும் கண்டான்...
இது அத்தனையும் கண்டதாலேயே...
காதலில் தோல்வியும் கண்டான்...
மீள முடியாமல் முதல் காதலில் மூழ்கிக்கிடக்கும் இவன், எவ்வாறு சகியின் காதலை காண்பான்??
அனைவரிடமும் அன்புப்பாராட்டும் அவன்!
6. தயக்கம்
அவன் மீது நட்பா? காதலா?
கேள்விக்கு விடைக் காண தயக்கம்...
அவள் ஏன் தயங்குகிறாள்?
அவனிடம் கேட்க தயக்கம்...
அவனிடமிருந்து விலகி விடுவோமா??
குழப்பத்திற்கு தெளிவுக்காணத் தயக்கம்...
என்ன ஆயிற்று புதிதாக, என்ன மாறிவிட்டது?
நீ அதே நீ தான்
நான் அதே நான் தான்
என்ன தயக்கம் உனக்கு என்று அவன் அவளிடம் கேட்டபோது....!
உனக்கு என் மீது காதலடா...
அதை நீ எப்போது உணர்ந்து...
நீயாகவே என்னிடம் சொல்வாய்?..
என்று நிசப்தமாய் அலறியது அவள் மனம்...!
சில கேள்விகள் கேட்பது நல்லதில் முடியும்...
ஆனால் உனக்கு என் மீது இருப்பது நட்பா? காதலா? என்ற கேள்வி, எந்த நட்பிற்கும் நல்லதல்ல.
ஆனால் உனக்கு என் மீது இருப்பது நட்பா? காதலா? என்ற கேள்வி, எந்த நட்பிற்கும் நல்லதல்ல.
இது காதலாக இருக்குமா இருக்காதா என்பதைவிட,
இது நட்பாக இருப்பதே நலன்...!
என்று பெருக்கெடுத்த ஆசைகளை எல்லாம் ஓரம் வைத்து விட்டு சராசரி நிலைமைக்கு திரும்பினாள் சகி...
இது நட்பாக இருப்பதே நலன்...!
என்று பெருக்கெடுத்த ஆசைகளை எல்லாம் ஓரம் வைத்து விட்டு சராசரி நிலைமைக்கு திரும்பினாள் சகி...
கேட்காத கேள்விக்கு...
தானே ஒரு பதில் தந்து...
அது சரிதான் என்று தன் மனதை சாந்த படுத்தி...
பற்றியெறியும் ஆசைத் தீயில்...
தன் ஆசைகளையே தூக்கிப் போட்டாள்...!
என் மனதிற்கு இதுதான் வேண்டும் என்றறியத் தெரியாதவனாக வளர்ந்தவனுக்கு
உன்னால் தானடி சொல்லித்தர முடியும்...
"அவன் காலம் முழுவதும்
உன் குழந்தை"
என்று புன்முறுவலுடன் அவளை ஆசீர்வதித்தாள்...
காதல் தேவதை...!
"தேவதைகள் ஆசீர்வதிக்க...!
சொந்தங்கள் ஒன்றிணைந்து...!
பந்தங்கள் ஆதரித்து...!
பெற்றோரின் மனம் மகிழ...!
அவளும் அவனும் வாழ்க்கை பயணத்தை ஒன்றாக தொடங்குவார்களா...?"
கேள்விக்குறியுடன் நாம்!
7. காத்திருப்பு
காலங்கள் கனியும்
கள்வன் ஒருவன் தன் மனதை களவாடுவான்...
இவனா அவனா என்று குழம்பியது போதும்...
மனதிற்கு அமைதி கொடுப்போம்...
என்று முடிவெடுத்தாள் சகி...
அவன் மனதிலும் அதே எண்ணம் ஆனால் எப்போதோ உதித்துவிட்டது...
அதனாலேயே ஒருவருக்கு ஒருவர் பொறுத்தமானாலும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ள காத்திருந்தனர்.
"காதலும் காதல் கொள்ளும்...!
அவன் அவளின் மீது வைத்த பாசம்...!
அவள் அவனின் மீது வைத்த காதல்...!
இருவரின் இடையில் உள்ள ஏக்கம்...!
உலகின் பார்வையில் அவர்களின் தெளிவு...!
இது நட்போ... காதலோ...
நான் இவர்களை காதலிக்கிறேன்...!
என்று கொஞ்சியது காதல்...!"
8. தனிமை
"சில சமயத்தில்
இனிமை...!
சில சமயத்தில் கொடுமை...!
சுற்றத்தார் அனைவரோடும் யாரோடு ஒருவர் உடனிருக்க...
தான் மட்டும் தனிமையில் இருப்பது...
சில சமயத்தில் இனிமை...!
சில சமயத்தில் கொடுமை...!
ஆழ் கடலின் இருளின் மத்தியில்
அலைந்துக் கொண்டிருக்கும் நீலதிமிங்கலம்....
வாடிக்கிடந்தாலோ...
வருத்தத்தில் மூழ்கிக்கிடந்தாலோ..
யார் அறிவார்??
தனிமையில் இருக்கும் மனம்...
கலவரத்தில் கிடந்தாலோ...
வழி மறந்து காணாமல் போனாலோ...
யார் அறிவார்??"
தனிமையில் தொலைந்தும்...
ஏங்கியும்... வாடியும்... களைப்பும் அடைந்த அந்த இரு இதயங்களும்...
மனம் விட்டு பேசினாலே
இரு மனங்கள் இணைந்து
காதல் வசப்பட்ட ஒரு மனமாக
மாறி செழிக்கும்....
தனிமையில் தவிக்கும்
இரு இதயங்கள்!
9.நண்பா
எத்தனை அழகிய சொல் அது...
நண்பா!!
அவள் அவனை என்றென்றும் அழைக்க விரும்பியது....
"எட்ட நின்ற போதிலும்...!
நெருங்கி வந்த போதிலும்...!
காதோரம் இரகசியம் சொன்ன போதிலும்...!
அழுகையில் தோளில் அணைத்துக்கொண்ட போதிலும்...!
செல்லமாய் சண்டைப் பிடிக்கும் போதிலும்...!
கோபமாய் கத்தி தீர்த்த போதிலும்...!
அவனை நண்பா என்றழைக்கவே விரும்பினாள்...!"
ஆழ்ந்த சிந்தனையின் அர்த்தமாக அவன் இப்போது வரும்போதிலும்...
காதலா என்பதை விடவும்...
நண்பா என்றழைப்பதையே அவள் விரும்பினாள்.
ஆயினும், காதலி என்றவன்
தன்னை அதிகாரமாய் அழைக்க
அச்சொல் செல்லமாய் அவள் காதில் உரசி,
உள்ளத்தில் இறங்கி உடல் முழுதும் இனிக்க ஆசை கொண்டாள் சகி!
உள்ளத்தில் இறங்கி உடல் முழுதும் இனிக்க ஆசை கொண்டாள் சகி!
10. காதலி
காதலை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு
இனி நண்பர்களாக இருப்போம் என்று
இருவரும் அவர்கள் மனதினுள்
முடிவெடுத்திருந்த அந்த நேரத்தில்...
காலம் தன் கடமையை நினைவுகூர்ந்து
தனிமையில் சந்திப்பு என்னும் பெரும்
விசித்திர நாடகம் ஒன்றை அரங்கேற்றியது...
அவர்கள் இருவரும்
தனிமையின் நிழலினிலே
மனம் திறந்து பேச...
ஏன் காதல் வேண்டாம் என்று உரையாடினர்!!
அவன்
"காதலி எனக்கென ஒரு சகி...!
சிந்தனை முழுவதிலும் என் சகி...!
சிற்பங்கள் யாவிலும் என் சகி...!
காதல் வரிகள் எதிலும் என் சகி...!
காதல் குருடல்ல...!
ஆனால்...
எண்ணிலடங்கா வசனங்களையும்...!
விண்ணிலடங்கா சத்தியங்களையும்...!
சாத்தியமா என்று காண விடாது,
ஒருவனை குருடனாக மாற்றவள்ளது...!
மாறினேன்...!
செய்த சத்தியங்கள்...!
காலம் என்னும் அலைகளில் அடித்துச்சென்றது...!
மீள முடியாமல் இன்றும் அந்த அலைகளோடே நான்...!
பயணம் உண்டு... வழி அறியேன்...!"
என்றும் முன்னாள் காதலியின் நினைப்போடு...!
என்றவன் தன் கதை கூறி முடிக்கும் முன்பே அவள் இதயம் உருகியது...
நானிருக்கிறேன் என்று கதரியது...
மீதமுள்ள மணித்துளிகள்...
அமைதியுடன் காதல் கொண்டு...
உல்லாசமாய் உறங்கியது....
11. கனவு
அவனுடன் கழிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் அர்த்தமுள்ளதாக தோன்றியது...
எத்தனை ஆண்மகன் உண்டு இவ்வுலகில்...!
அவன் போல...!
இனியும் காத்திருக்க வேண்டுமா??
இச்சகியின் மனம் திறந்தால் என்ன??
ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை...
மனம் திறந்தே ஆக வேண்டும்...
என்று எண்ணிக்கொண்டே...
பஞ்சனை அடைந்தாள் சகி...
உறக்கம் என்னும் வரத்தோடு
கனவு எனும் சாபமும் வந்தது...!
கனவினில்...
"கொட்டுகின்ற மழையில்...!
இயற்கையின் மடியில்..!
இருவர் மட்டும்...!
அவன் உள்ளங்கையில் தன் கரம் பதித்து...!
மார்போடு சாய்ந்தவண்ணம்...!
மழைத்துளிகளை அவள் இரசித்துக்கொண்டிருக்க...!
அவன் அவளை இரசித்துக்கொண்டிருந்தான்...!
காலம் ஏனோ சிறைப்பட்டுக் கிடந்தது...!
வானம் ஏனோ மகிழ்ச்சியில் நிறைந்து பொங்கியது...!
காற்று ஏனோ காதலாய் வீசியது...!
இரு மனங்கள் ஒன்றோடு ஒன்று லயித்திருந்தது...!
இது காதல்' எங்கிருந்தோ ஒரு ஒலி...!"
விழிப்படைந்த போதிலும்...!
இக்கனவு கலயவேண்டாம் என்று
அவள் கண்களின் ஓரம் வழிந்த
அந்த கண்ணீர் காட்டிக்கொடுத்தது...!
நிச்சயமாய் அது சாபம் தான்!
கனவு பலிக்கும் என்று...
மீண்டும் ஆசீர்வதித்தது...
காதல் தேவதை...!!
12. தொடக்கம்
பிரிவு....!
காலத்தின் மற்றொரு நாடகம்...
பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், சுற்றத்தார், பந்தங்கள், சொந்தங்கள், உற்றார், மற்றார்...
எந்த உறவாயினும் ஒரு நாள் நிச்சயம் பிரிவு ஏற்படும்...!
தினம் சந்திக்கும் முகங்கள்
காணாமல் போனால் ஏற்படும் வெற்றிடம் மீண்டும் முழுமையடைவது எளிதல்ல...!
இதுநாள் வரை பிரிவைப்பற்றியே யோசித்ததில்லை இருவரும்...
ஆனால் எங்கிருந்தோ வந்த ஒரு அழைப்பு அவன் வெளியூர் செல்ல கட்டளையிட்டது...
முக்கிய செய்தி ஒன்றுள்ளது உன்னிடம் பகிர்ந்தே ஆகவேண்டும் என்றவன் குறுஞ்செய்தி பார்த்த அவள் ஏதென்று அறியாமல் எப்போதும் போல சென்றவனை சந்தித்தாள்...
கடுதாசி அவள் கைக்கு பரிமாறப்பட்டது
கண்கள் படிக்கும்போதே மனம் கணத்தது...
வெளிக்காட்ட வாய்ப்பில்லாமல் உதடுகள் பொய்யாய் புன்னகைத்தது...
வாழ்த்துகள்...! சென்றுவா...! என்றாள்...!
நண்பர்கள் கூட்டம் கூடியது....
வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது...
வெளியூர் வேலை, நல்ல சம்பளம், வேறென்ன வேண்டுமடா...?
அங்கேயே தங்கி புது வாழ்க்கை அமைத்துக்கொள் என்று குடும்பமும் வாழ்த்தியது....!
இத்தனை ஆண்டுகள் படிப்பு, செலவழித்த பணம், செய்த தியாகங்கள் எதுவும் வீண்போகவில்லை.
கண்ட கனவுகளை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கலாம், என்ற மனமகிழ்வோடு அவன் வெளியூர் புறப்பட்டான்.
சொந்தங்கள் வீட்டிலிருந்து வழியனுப்ப...
மனம் நிறைய வாழ்த்தி வழியனுப்ப நண்பர்கள் என்னும் பட்டாளத்தோடு அவளும் வந்திருந்தாள், பேருந்து நிலையம் வரை...
தனிமையில் பேச வாய்ப்பில்லை என்று மூளை அறியும், ஆனாலும் மனம் ஏங்கியது.
சென்றாள்...!
பேசினாள்...!
வாழ்த்தினாள்...!
விடைப்பெற்றாள்...!
போய்வா என்றவள் இம்முறை கூறியபோது,
கண்களில் தானறியாமல் கண்ணீராக காதல் கசிந்தது...
அவன் மனம் மட்டும் அறிந்தது...!
"உணர்ச்சிகள் வினோதமானது...!
ஆராய்தவன் அறிவிழப்பான்...!
அடிமையானவன் அத்தனையும் இழப்பான்...!
அடக்குபவன் ஒருநாள் வெடித்தெழுவான்...!
அலைப்பாய விட்டவன் அடக்கம் இழப்பான்...!
அனுபவித்து வாழ்பவனே வாழ்வில் வெற்றியடைவான்...!"
அவள் கண்களில் கசிந்த கண்ணீரின்
அர்த்தம் புரியவில்லை ஆனால் ஏதோ உணர முடிகிறது...!
இது என்ன உணர்ச்சி என்றே அறிய முடியாத குழப்பத்தில் தன் பயணத்தை தொடங்கினான் அவன்...!
குழப்பம் காதலை கட்டியணைத்தது...!
காலம் காதலை நோக்கி புன்முறுவல் செய்தது...!
காத்திருப்பதும் சுகம் தான்...
அவள் மனம் அவளுக்கு ஆறுதல் சொல்லியது...!
தொடரும்...!!!
________________________________________________
முயற்சி
இது என் முதல் முயற்சி...!
கதையும் கவிதையாக ஒரு முயற்சி...!
காதலை வெளிப்படுத்த ஒரு முயற்சி...!
அவன் அவள் என்ற இருவரின் கதையில்,
நானறிந்த அனைவரின் காதல் கதைகளையும் தழுவிச்செல்ல விரும்பினேன்...!
ஆனால் அதிகமாக அகப்பட்டது ஏனோ 'அவள்' கதை மட்டும் தான்...!
'அவன்' நினைப்புதான் என்ன...?
'அவன்' மனதில் காதல் போர் தொடங்குமா...?
காதல் தேவதையின் ஆசி ஒன்று போதுமா இவர்களுக்கு...?
இவற்றில் எதற்கெல்லாம் பதில் அடுத்து நான் எழுதும் கவிகளில் கிடைக்கும்...?
நானும் காத்திருக்கிறேன்....!
முதல் முயற்சியில் உடனிருந்த அனைவருக்கும் மிக்க நன்றி...!
#MrDextrozeLove♥️
எழுத்து - MrDexzty
ஓவியம் - எழில், தனலட்சுமி
Feb 2020 - இதுவும் கடந்து போகுமா?
June 2020 - இதுவும் கடந்து போகுமா? 2.0
Feb 2021 - இதுவும் கடந்து போகுமா? 3.0
__________________________________________
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________
மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!
5. ஆஹா கல்யாணம்
6. இராவணபுரி
படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை பகிருங்கள்..!



Great work Chandhu.. Keep going... And I'm really hoping for the happy ending ��
ReplyDelete👏தொடரும்👏
ReplyDeleteஇக்காலத்தில் இப்படி ஒரு முயற்சி
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள். இப்போது அவனும் அவளும் தனிமை உள்ளனர். ஒருவரின் பிரிவு தான் அவர்களின் புரிதலை அதிகமாக்கும்.அவளின் பிரிவு அவனுக்கு தன் சந்தோஷங்கள் கஷ்ட்டங்கள் தன் கண்ணிர் துடைக்க அவளின் கரம் தேடும்.
இப்படிக்கு
மற்றவர்கள் போல் காத்திருக்கும் உங்கள் வாசகர்
Macha good work da... I can personally able to relate those feelings.. And that *Aval* her feelings you nailed it..
ReplyDeleteAwesome Mannn....
ReplyDeleteI'm dumbstruck with your creativity
All the very best for your literary work
May God bless you with immense imagination and narrative skills.
Great Chandru, vera level👌 u nailed it🙏 Seriously✌
ReplyDeleteநன்பா உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்🤝🌝
ReplyDeleteReally I was surprised! Superb... Keep rocking.... My hearty wishes...
ReplyDelete